மேலும் அறிய

Puducherry: அரசு விழாவில் சர்ச்சையை ஏற்படுத்திய சுயேட்சை எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு

முதலமைச்சர் கலந்து கொண்ட விழாவில் சர்ச்சையை ஏற்படுத்திய சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் நேரு மீது வழக்குப்பதிவு

புதுச்சேரி: தலைமைசெயலகம் முன்பு முற்றுகையிட்டதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்டோர் மீது பெரிய கடை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

முதலமைச்சரை சந்தித்து முறையிட காவலர்கள் அனுமதிக்காததால் சுயேட்சை எம்.எல்.ஏ கேட் மீது ஏறி குதித்து சென்று முதலமைச்சர் மற்றும் தலைமை செயலாளர் கலந்து கொண்ட விழாவில் தலைமை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளை வசைபாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி இன்று காலை தலைமை செயலகத்தை முற்றுகையிட சென்ற முதல்வரின் ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ நேரு, தலைமை செயலாளர் அங்கு இல்லாததால் திரும்பி வந்தவர். கம்பன் கலையரங்கில் நடந்த சர்வதேச சுற்றுச்சூழல் தினவிழாவில்  முதலமைச்சர் மற்றும் தலைமை செயலாளர் பங்கேற்று இருப்பதாக தகவல் கிடைக்க அங்கே சென்றார் சுயேட்சை எம்.எல்.ஏ நேரு. ஆனால் வாயிற்கதவை மூடிய போலீசார் அவரை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.

இதனையடுத்து 8 அடி உயரமுள்ள வாசற்கதவின் மீது ஏறி குதித்து அரங்கிற்குள் சென்ற எம்.எல்.ஏ மேடைக்கு கீழ் இருந்தே முதல்வருடன் மேடையில் அமர்ந்திருந்த தலைமை செயலாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளை கடுமையான வார்த்தைகளால் வசைபாடினார். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கொடுத்த நிதியை கொண்டு நகரை சுத்தம் செய்யாமல், சுற்றுச்சூழல் விழாவில் கலந்து என்ன பயன் என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அரங்கமே பரபரப்பு ஏற்பட்டது, இதனையடுத்து ஆவேசப்பட்ட நேரு எம்.எல்.ஏ வை அங்கிருந்த விழா ஏற்பாட்டாளர்கள் சமாதானம் செய்து வைத்தனர்.

இந்த நிலையில் உருளையான்பேட்டை சுயேட்டை சட்டமன்ற உறுப்பினர் நேரு பொதுமக்களுடன் சென்று ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை முடக்கப்படுவதாக கூறி தலைமைசெயலகம் முன்பு முற்றுகையிட்டதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட 5 க்கும் மேற்பட்டோர் மீது பெரிய கடை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு. இதே போல் கம்பன் கலையரங்கத்தில் முதலமைச்சர் மற்றும் தலைமை செயலாளர் பங்கேற்ற நிகழ்ச்சியில் சர்ச்சையை ஏற்படுத்தி அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்த காரணத்திற்காக சுயட்சை சட்டமன்ற உறுப்பினர் நேரு உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்டோர் மீது ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
ஆடிப்பூர வளைகாப்பு உற்சவம்: விழுப்புரம் மாவட்டமே ஆன்மிகக் கடலில் மூழ்கியது!
ஆடிப்பூர வளைகாப்பு உற்சவம்: விழுப்புரம் மாவட்டமே ஆன்மிகக் கடலில் மூழ்கியது!
இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!
இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!
விழுப்புரம் அருகே பரபரப்பு: ஓடும் கண்டெய்னர் லாரியில் திடீர் தீ விபத்து - ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்!
விழுப்புரம் அருகே பரபரப்பு: ஓடும் கண்டெய்னர் லாரியில் திடீர் தீ விபத்து - ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
TASMAC Liquor Ban Revoke : அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு
அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு இதோ..
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Embed widget