அறுந்து கிடந்த மின் கம்பியில் மின்சாரம் பாய்ந்து 8 மாடுகள் பரிதாபமாக உயிரிழப்பு
’’மின் கம்பி அறுந்து விழுந்தது தொடர்பாக புகார் அளித்தால் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என புதுச்சேரி மின்சாரத்துறை அதிகாரிகள் மீது பொதுமக்கள் புகார்’’
புதுவை லாம்பர்ட் சரவணன் நகரை சேர்ந்தவர் சம்பத் (36). இவர் 20-க்கும் மேற்பட்ட மாடுகள் வளர்த்து பால் வியாபாரம் செய்து வருகிறார். இவர் தனது மாடுகளை தினமும் வயல்வெளி நகர் பகுதியில் உள்ள காலிமனைகளில் மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம். அதுபோல மாடுகளை அவரது வீட்டின் அருகே விக்டோரியா நகர் பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டுள்ளார். பின்னர் மாலை 6 மணிக்கு மேய்ச்சலில் இருந்து மாடுகளை வீட்டிற்கு ஓட்டி வந்துள்ளார். அப்போது, விக்டோரியா நகர் பகுதியில் அவர் மாடுகளுடன் வந்த போது அங்கு மின்கம்பி ஒன்று அறுந்து விழுந்து கிடந்துள்ளது . கடந்த சில நாட்களுக்கு முன் விழுந்த அந்த மின் கம்பி குறித்து அப்பகுதி மக்கள் மின்துறைக்கு புகார் தெரிவித்தும் அதனை சரி செய்யவில்லை என தெரிகிறது. இதனால் மாடுகளை மின்கம்பி விழுந்து கிடந்த பகுதிக்கு செல்லாமல் சம்பத் ஓட்டி வந்தார்.
மன்கீ பாத் நிகழ்ச்சியை வானொலியில் கேட்போர் எண்ணிக்கை அதிகரிப்பு - மத்திய அமைச்சர் அனுராக் தாகூர்
போலீஸ் விசாரணைக்கு எதிராக ராஜேந்திரபாலாஜியின் சகோதரி தொடந்த வழக்கு ஒத்திவைப்பு
ஆனாலும், எதிர்பரதவிதமாக 8 மாடுகள் மின்கம்பியை மிதித்தது. இதில் மின்சாரம் தாக்கி அடுத்தடுத்து சம்பவ இடத்திலேயே அவை பரிதாபமாக உயிரிழந்தன. இதனை கண்ட சம்பத் அதிர்ச்சி அடைந்தார். இதை தொடர்ந்து தொலைபேசி மூலமாக முதலியார்பேட்டை காவல் துறைக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து முதலியார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த மாடுகள் குறித்து விசாரணை நடத்தினர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
மேலும் அப்பகுயில் இதுபோன்ற எவ்வித அசம்பாவிதம் நடைபெறாமல், உடனடியாக மின்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த மின்துறை ஊழியர்கள் அங்கு அறுந்து கிடந்த மின்சார கம்பிகளை சரி செய்தனர். மேலும் லாம்பர்ட் பகுதி மக்கள் கூறுகையில் நாங்கள் புகார் அளித்தால் நடவடிக்கைகள் எடுக்க மறுப்பதாகவும், முறையாக நடவடிக்கை எடுத்திருந்தால் தற்போது 8 மாடுகள் உயிரிழப்பை தடுத்து இருக்கலாம் என்றும் கூறி மின் துறை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.