விளையாட்டு வீரர்களுக்கான காப்பீடு தொடர்பாக முதல்வருடன் பரிசீலனை- அமைச்சர் மெய்யநாதன்
விளையாட்டு வீரர்களுக்கான காப்பீடு வழங்குவது தொடர்பாக முதல்வருடன் பரிசீலனை செய்யப்படும் - விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன்
விளையாட்டு வீரர்களுக்கான காப்பீடு வழங்குவது தொடர்பாக முதல்வருடன் பரிசீலனை செய்யப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார் .
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த புறங்கனி கிராமத்தில் கபடி போட்டியின் போது களத்திலேயே விமல் ராஜ் உயிரிழந்தார். அதை அடுத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இறந்த கபடி வீரர் குடும்பத்திற்கு மூன்று லட்ச ரூபாய் நிதி உதவி அறிவித்தார்.
இந்நிலையில் குடும்பத்தினரை விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன்,ச ட்டமன்ற உறுப்பினர் சபா.ராஜேந்திரன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். பின்னர் தமிழக முதல்வர் அறிவித்த 3 லட்சம் நிதியும், விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் தனது சொந்த நிதியான 2 லட்சத்தையும் வழங்கினார்.
மேலும் படிக்க: Mayiladuthurai Kidnap: மயிலாடுதுறையில் வீடு புகுந்து இளம்பெண்ணை கடத்திய கும்பல் - அதிர்ச்சி வீடியோ..!
அப்போது பேசிய அவர், விளையாட்டுத்துறை அமைச்சர் என்கிற முறையில் விமல்ராஜ் உயிரிழப்பு ஏற்க முடியவில்லை எனவும், கபடி வீரர் விமல்ராஜ் உயிரிழப்பு தமிழகத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு, உங்களுக்கு தேவையானதை செய்ய நாங்கள் உள்ளோம் என்று கூறினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கபடி வீரர் விமல் ராஜ் உயிரிழப்பை போன்று தமிழகத்தில் மேலும் இதுபோன்ற சம்பவம் நடைபெறாது வண்ணம் விளையாட்டு வீரர்களுக்கு காப்பீடு திட்டம் தொடர்பாக தமிழக முதல்வரிடம் பேசி பரிசீலனை செய்யப்படும் என தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்