(Source: ECI/ABP News/ABP Majha)
விழுப்புரத்தில் பரபரப்பு .... ஊராட்சி மன்ற தலைவரை தாக்கிய ஆக்கிரமிப்பாளார்கள்
விழுப்புரம் : விழுப்புரம் அருகே ஆகிரமிப்பு செய்யப்பட்ட பொது இடத்தை மீட்ட ஊராட்சி மன்ற தலைவரை தாக்கிய ஆக்கிரமிப்பாளார்கள்
விழுப்புரம் அருகே ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பொது இடத்தை மீட்ட ஊராட்சி மன்ற தலைவரை ஆக்கிரமிப்பாளார்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க ஊராட்சி மன்ற தலைவர் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் காணை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட திருக்குணம் மற்றும் டி.கொசப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் திமுகவை சேர்ந்த பிரகாஷ். இவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு டி.கொசப்பாளையம் ஏரிக்கரையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 25 ஏக்கர் இடத்தை மீட்டு அந்த இடத்தில் அமைச்சர்கள் பொன்முடி, மஸ்தான் ஆகியோரைக் கொண்டு 17 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டுள்ளார். தொடர்ந்து மரக்கன்றுகளை பராமரிக்க மீட்கப்பட்ட இடத்தை சுற்றி வேளி அமைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் பிரகாஷ் மனு அளித்துவந்த நிலையில், மீட்கப்பட்ட இடத்தில் நான்கு ஏக்கர் அளவுக்கு அதே ஊரை சேர்ந்த அரசு பணியில் உள்ள சிலர் ஆக்கிரமிப்பு செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஊர் திருவிழாவுக்காக ஊர் பொது இடத்தில் உள்ள தெண்ணை மரத்தில் தேங்காய் பறிக்க ஊர் பொது மக்கள் சென்றுள்ளனர். அப்போது ஆக்கிரமிப்பு செய்துள்ள செல்வராஜ், சுகுணா, தமிழேந்தி, கணபதி ஆகியோர் தேங்காய் பறிக்காமல் தடுத்துள்ளனர். இதனை ஊராட்சி மன்ற தலைவர் பிரகாஷ் தட்டிகேட்டுள்ளார். அப்போது நான்கு பேரும் சேர்ந்து ஊராட்சி மன்ற தலைவரை சட்டையை கிழித்து கடுமையாக தாக்கியுள்ளனர்.
காயமடைந்த ஊராட்சி மன்ற தலைவர் பிரகாஷ் தன்னை தாக்கிய செல்வராஜ், சுகுணா, தமிழேந்தி, கணபதி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கஞ்சனூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் தான் தாக்கப்பட்டது குறித்து, ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட இடத்தில் வேலி அமைக்க வேண்டும் என கேட்டு ஊர் பொது மக்களுடன் ஊராட்சி மன்ற தலைவர் பிரகாஷ் மாவட்ட ஆட்சியர் பழனியை நேரில் சந்தித்து மனு அளித்தனர். ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தை மீட்ட ஊராட்சி மன்ற தலைவரை அரசு ஊழியர்கள் சேர்ந்து தாக்கிய சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்ட செய்திகள் :
துர்நாற்றத்தில் மூழ்கி இருக்கும் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம்; கண்டுகொள்ளாத அதிகாரிகள்
புதுச்சேரி, விழுப்புரம், கள்ளகுறிச்சி பகுதியில் உள்ள பொதுமக்களின் பிரச்சனைகளை தெரிவிக்க +918508008569 என்கின்ற எண்ணில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்.