மேலும் அறிய

ஆலோசனை கூட்டத்திற்கு மொபைல் NO... கண்டிஷன் போட்ட சீமான்... டோக்கன் போட்ட தம்பிகள்

நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகளின் செல்போன்களுக்கு சீமானின் தம்பிகள் டோக்கன் போட்டு பெற்றுக்கொண்டு கூட்டம் முடிந்த பின் வழங்கினர்.

விழுப்புரம்: விக்கிரவாண்டியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகளின் செல்போன்களுக்கு சீமானின் தம்பிகள் டோக்கன் போட்டு பெற்றுக்கொண்டு கூட்டம் முடிந்த பின் வழங்கினர்.
 
விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகேயுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நாம் தம்ழர் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அக்கட்சியின் ஒருங்கினைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொள்ள மாவட்ட நிர்வாகிகள் வருகைபுரிந்து உள்ளே சென்ற போது கட்டாயம் நிர்வாகிகள் யாரும் செல்போன்களை உள்ளே எடுத்து செல்ல கூடாதென சீமானின் தம்பிகள் தடுத்தனர். செல்போன்களை அனைவரும் டோக்கன் பெற்று இங்கே செல்ப்போன்களை கொடுத்து விட்டு கூட்டம் முடிந்தபின் மீண்டும் செல்போன்களை வாங்கி செல்லுங்கள் என கூறினர்.
 
நிர்வாகிகள் ஏன் எடுத்து செல்லகூடாதென கேட்டபொழுத்து சீமான் அண்ணனின் உத்தரவு ஆகையால் கொடுத்து செல்லுங்கள் என்ற்வுடன் கட்சி நிர்வாகிகளும் அமைதியாக செல்போன்களுக்கு டோக்கன் போட்டுக்கொண்டு உள்ளே சென்று அமர்ந்திருந்தனர். இது தொடர்பாக கட்சி நிர்வாகிகளிடம் கேட்டபோது சீமான் நிர்வாகிகளிடம் கடுமையாக பேசுவதை சிலர் வீடியோவாக எடுப்பதால் சர்ச்சை ஏற்படுவதால் செல்போன்களை வாங்கியதாக தகவல் தெரிவித்தனர்.
 
விழுப்புரம் மாவட்டத்தில் நாம்தமிழர் கட்சியின் தெற்கு, வடக்கு, மாவட்ட பொறுப்பாளர்கள், துணை பொறுப்பாளர்கள், தொழில்நுட்ப பிரிவைபிரிவை சார்ந்த 5 பேர் பதவி விலகி உள்ள நிலையில் 200 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலகுவதாக தகவல்கள் பரவியதை தொடர்ந்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
 
முன்னதாக, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறியது,
 
கால்வாய்க்கு ஒதுக்கும் நிதி வாய்க்குள் சென்றால் என்ன செய்வது

ஒரு தலைநகரம் தன் அடிப்படை வசதியை ₹2500 கோடி இருந்தால் சீரமைக்க முடியும் என வல்லுனர்கள் கூறுகிறார்கள். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் வெள்ள நீரை போக்க நிதி ஒதுக்கப்படுகிறது. மொத்தத்தில் நகர கட்டமைப்பு சரியில்லை. போதுமான மழை பொழிவு இருந்தாலும் அது கடலில் கலக்கிறது. அதன் பின் கடல்நீரை சுத்திகரிப்பது என்பது தேவையில்லாதது. மழை நீரை சேமிக்க திட்டமிடல் இல்லை. தலை நகரே இப்படி இருந்யால் மற்ற மாநகராட்சிகளின் நிலையை எண்ணிப்பாருங்கள். இரு கட்சிகளும் இக்கட்டமைப்பில் தோல்வி அடைந்துள்ளதால் தொடர்ந்து வாக்களித்த மக்கள் தோற்றுக்கொண்டு வருகிறார்கள். கால்வாய்க்கு ஒதுக்கும் நிதி வாய்க்குள் சென்றால் என்ன செய்வது.

ஆளுனரை மாற்ற சொன்ன திமுக இப்போது பாராட்டுகிறது

ஆளுனரை மாற்ற சொன்ன திமுக இப்போது பாராட்டுகிறது. தற்போது  பாஜக கூட்டணி ஆட்சிதான் நடைபெறுகிறது. மற்ற மாநில முதல்வர்கள் விளையாட்டுத்துறை அமைச்சர்களை பிரதமர் சந்தித்து உள்ளாரா? இதன் மூலமே திமுக பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பது உறுதியாகிறது. அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தபோது எம் ஜி ஆர் நூற்றாண்டு விழாவுக்கு வராத பாஜக அமைச்சர் கூட்டணியில் இல்லாதபோதும் கலைஞர் நூற்றாண்டுவிழா நாணைய வெளியீட்டில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார் என்றால் புரிந்து கொள்ளுங்கள்.

ஒரே மொழியை வலியிறுத்தினால் தேச ஒற்றுமை கேள்விக்குறியாகும்

இந்தியா என்பது உருவாக்கப்பட்டது. அதில் ஒரே மொழியை வலியிறுத்தினால் தேச ஒற்றுமை கேள்விக்குறியாகும். இந்தி மாதம் தூர்தர்ஷன் நடத்துகிறது. தமிழக அரசு எங்களை தமிழ் வாரம் நடத்த அனுமதிப்பார்களா? இலங்கையில் எல்லை தாண்டி வருபவர்கள் மீனவர் என்பது பிரச்சினை இல்லை.

திராவிட மாடல் எல்லாத்தையும் ஒழிச்சிட்டோம் என்றால் அனைவருக்கும் மொழிபற்று வந்துவிடும் திமுகவிற்கும் மொழி போராட்டத்திற்கும் சம்பந்தம் இல்லை. மொழியை பயன்படுத்தி ஆட்சிக்கு வந்த திமுக மக்களை ஏமாற்றி உள்ளது.

தமிழன் என்பது தான் பிரச்சினை. சுய மரியாதைக்காக இயக்கம் தொடங்கியவர்கள் எங்கெங்கோ விழுந்து கிடக்கிறார்கள். இறந்து போன சமஸ்கிருதத்தை உயிர்பிக்க ஆர் எஸ் எஸ் துடிக்கும் போது இறந்து கொண்டிருக்கும் தமிழை வாழவைக்க தமிழன் ஆள வேண்டும். அவன் தமிழனாய் இருக்க வேண்டும். பாஜக இந்தியை திணிக்கவில்லை. சமஸ்கிருதத்தை திணித்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார் .

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ராமதாஸ் போட்ட ஒற்றை ட்வீட்.. ஆடிப்போன தமிழக அரசியல்.. ஒரு வேலை இருக்குமோ?
ராமதாஸ் போட்ட ஒற்றை ட்வீட்.. ஆடிப்போன தமிழக அரசியல்.. ஒரு வேலை இருக்குமோ?
"அப்பாவை கொன்றவரை நினைச்சு இரக்கப்பட்டவர்" பிரியங்கா காந்தி குறித்து ராகுல் காந்தி உருக்கம்!
முஸ்லிம் வாக்குகளை குறிவைக்கும் விஜய்.. செயற்குழு கூட்டத்தில் கச்சிதமாக வேலையை முடித்த தவெக!
முஸ்லிம் வாக்குகளை குறிவைக்கும் விஜய்.. செயற்குழு கூட்டத்தில் கச்சிதமாக வேலையை முடித்த தவெக!
EPS Slams DMK:
EPS Slams DMK: "2026 வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக அமையும்" - எடப்பாடி பழனிசாமி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

IND vs NZ  Highlights | கோலியின் மோசமான பேட்டிங்வாஷ் அவுட் ஆன இந்திய அணி வரலாறு படைத்த நியூசிலாந்துDhanush Aishwarya | ரஜினி வீட்டில் நடந்த மீட்டிங்?இணையும் தனுஷ் ஐஸ்வர்யா குஷியில் சூப்பர் ஸ்டார்!TVK VCK Flag issue | அகற்றப்பட்ட தவெக கொடி   மறியலில் இறங்கிய மக்கள்   களத்துக்கு வந்த போலீசார்Vijay Thiruma meeting :”ஒரே மேடையில் திருமா, விஜய்”ஆதவ் அர்ஜுனா SKETCH!திமுகவை அதிரவைத்த உளவுத்துறை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ராமதாஸ் போட்ட ஒற்றை ட்வீட்.. ஆடிப்போன தமிழக அரசியல்.. ஒரு வேலை இருக்குமோ?
ராமதாஸ் போட்ட ஒற்றை ட்வீட்.. ஆடிப்போன தமிழக அரசியல்.. ஒரு வேலை இருக்குமோ?
"அப்பாவை கொன்றவரை நினைச்சு இரக்கப்பட்டவர்" பிரியங்கா காந்தி குறித்து ராகுல் காந்தி உருக்கம்!
முஸ்லிம் வாக்குகளை குறிவைக்கும் விஜய்.. செயற்குழு கூட்டத்தில் கச்சிதமாக வேலையை முடித்த தவெக!
முஸ்லிம் வாக்குகளை குறிவைக்கும் விஜய்.. செயற்குழு கூட்டத்தில் கச்சிதமாக வேலையை முடித்த தவெக!
EPS Slams DMK:
EPS Slams DMK: "2026 வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக அமையும்" - எடப்பாடி பழனிசாமி
"திருவள்ளுவருக்கு வர்ணம் பூசுறாங்க" பாஜகவுக்கு எதிரான ஸ்கெட்ச்.. அடித்து ஆடும் தவெக விஜய்!
TVK Resolution: 2026க்கு அச்சாரம் போடும் தவெகவின்  26 தீர்மானங்கள்: அக்ரசிவ் மோடில் திமுக - பாஜகவை தாக்கிய விஜய்.!
TVK Resolution: 2026க்கு அச்சாரம் போடும் தவெகவின் 26 தீர்மானங்கள்: அக்ரசிவ் மோடில் திமுக - பாஜகவை தாக்கிய விஜய்.!
EPS: முதல்வர் ஸ்டாலினை பாராட்டி, உதயநிதியை தாக்கிய இபிஎஸ்:  அப்படி என்ன பேசினார்.?
EPS: முதல்வர் ஸ்டாலினை பாராட்டி, உதயநிதியை தாக்கிய இபிஎஸ்: அப்படி என்ன பேசினார்.?
Suresh Gopi: கோயிலுக்கு ஆம்புலன்சை பயன்படுத்திய பாஜக அமைச்சர்: சுரேஷ் கோபி மீது பாய்ந்த வழக்கு.! நடந்தது என்ன?
Suresh Gopi: கோயிலுக்கு ஆம்புலன்சை பயன்படுத்திய பாஜக அமைச்சர்: சுரேஷ் கோபி மீது பாய்ந்த வழக்கு.! நடந்தது என்ன?
Embed widget