மேலும் அறிய
கூட்டணி என்பது எப்படி? எப்போது? வேண்டுமானாலும் அமையும்; பகீர் கிளப்பிய அமைச்சர் பன்னீர்செல்வம்
புறவாசல் வழியாக அமித்ஷாவை சந்தித்தவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் விமர்சனம்

அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் - முன்னாள் அமைச்சர் பொன்முடி
Source : ABP NADU
விழுப்புரம்: பாமக கூட்டணி என்பது எப்படி வேண்டுமானாலும், எப்போது வேனாலும் அமையும், திமுகவில் உள்ள கூட்டணி வலுவான கூட்டணி என்றும் புறவாசல் வழியாக அமித்ஷாவை சந்தித்தவர் தான் எடப்பாடி பழனிசாமி என வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் விமர்சித்துள்ளார்.
விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் திமுக தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் பொன்முடி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கெளதமசிகாமனி, விக்கிரவாண்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் சிவா உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்த வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம்.,
அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கண்டனத்தை தெரிவித்துள்ளது அதிகாரத்தை மீறி அமலாக்கத்துறை ஒன்றிய அரசின் தூண்டுதலின் பேரில் செயல்பட்டு உள்ளது என உச்சநீதிமன்றமே கூறியுள்ளது. இதனை மக்கள் கண்டிக்கின்ற காலம் 2026 சட்டமன்றத் தேர்தல். உச்சநீதிமன்றம் அமலாக்கத்துறைக்கு குட்டு வைத்துள்ளது. கொள்ளைபுறமாக திமுகவின் சாதனைகளை வீண் பழி சுமத்துகிறார்கள், இதனை மக்கள் உணர்ந்துள்ளனர். 2026ல் விடிவு காலம் வரும். அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக முதல்வர் டெல்லி பயணத்தை எடப்பாடி பழனிசாமி விமர்சிக்கிறார்.
சட்டமன்றம் நடக்கும்போது திடீரென எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றார். மூன்று கார்கள் மாறி பதுங்கி, பதுங்கி அமித்ஷாவைபார்க்க சென்றார். அதிமுக அலுவலகம் என்ன அமித்ஷா வீட்டிலா இருக்கிறது. மாநிலத்தின் நிதி உரிமையை கேட்க முதல்வர் டெல்லி செல்கிறார். அதிமுகவின் பல அமைச்சர்கள் பாஜகவை கண்டித்துள்ளனர். பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் தோற்றோம் என விமர்சனம் செய்துள்ளனர். தற்போது மீண்டும் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளனர். ஏன் என்பதை நீங்களே புரிந்து கொள்ள வேண்டும்.
திமுக கூட்டணியில் பாமக இணைவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவது குறித்த கேள்விக்கு: கூட்டணி என்பது எப்படி, எப்போது வேண்டுமானாலும் அமையும் ஆனால் தற்போது உள்ள கூட்டணி நிலையான கூட்டணி கொள்கைக்காக உள்ள கூட்டணி இன்று நேற்றல்ல பல ஆண்டுகளாக கூட்டணி நிலையாக உள்ளது. வலுவான கூட்டணி. 234 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டுன் என்பதுதான் எங்கள் இலக்கு.
மழை நேரங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவது குறித்த கேள்விக்கு:
கடந்த காலங்களில் மாத கணக்கில் நெல் மூட்டைகளை விவசாயிகள் வைத்திருப்பார்கள். ஆனால் தற்போது உடனடியாக கொள்முதல் செய்யப்படுகிறது. மேலும் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்பதால் குடோன்கள் கட்டப்பட்டுள்ளது. ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும். அதற்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை வேளாண் துறை சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது. குறுவை தொகுப்பு திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கூடுதலாக விவசாயம் செய்யக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இந்தாண்டு டெல்டா அல்லாத பகுதிக்கும் குருவை தொகுப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















