“இது 128வது இளநீர் வேட்டை...விசாரித்தால் மீண்டும் வேட்டை தொடரும் நன்றி..!” - நாமம் போட்டு சென்ற மர்மகும்பல்
தீரவிசாரிக்காதீர்கள் இதுவே இறுதியாகட்டும் மீறி விசாரித்தால் மீண்டும் வேட்டை தொடரும் நன்றி - மர்ம கும்பல்
கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் அருகே நூதன முறையில் நகரம் படம் வடிவேலு பாணியில் 128-வது இளநீர் வேட்டை திருட்டு எனவும், இளநீர் திருடி விட்டு நில உரிமையாளருக்கு வித்தியாசமான முறையில் அட்டையில் எச்சரிக்கை விடுத்து விட்டு பெரிய நாமத்தை போட்டுவிட்டு சென்ற இளநீர் திருட்டு கும்பல்.
128-வது இளநீர் வேட்டை
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள எஸ்.குளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னையன் மகன் குமரவேல். இவருக்கு அதே கிராமத்தில் ஐந்து ஏக்கரில் விவசாய நிலம் உள்ளது. இவருடைய விவசாய நிலத்தில் தென்னை, பலா, வாழை, கொய்யா ஆகிய மரங்கள் உள்ளன. இந்நிலையில், குமரவேல் தன்னுடைய உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிக்காக வெளியூர் சென்றுள்ளார். இதனை சாதுரியமாக நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் குமரவேல் ஊரில் இல்லாத சமயம் பார்த்து இவரது விவசாய நிலத்தில் உள்ள தென்னை மரத்தில் மர்ம ஆசாமிகள் இரவோடு இரவாக தென்னை மரத்தில் ஏறி இளநீரை பறித்து சத்தம் கேட்காதவாறு இளநீர் வெட்டி அதனை கயிறு மூலம் கீழே இறக்கி வெட்டி மகிழ்ச்சியுடன் குடித்துள்ளனர்.
நில உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி
இந்நிலையில், இதெல்லாம் ஒருபுறம் இருக்க... நில உரிமையாளர் குமரவேல் இன்று அதிகாலை அவருடைய விவசாய நிலத்தை சுற்றி பார்க்க சென்றுள்ளார். அப்போது தென்னை மரத்தில் இருந்த இளநீர் திருடுபோய் உள்ளது தெரியவந்தது சரி பரவாயில்லை இளநீர் தானே சாப்பிட்டு விட்டுப் போகட்டும் என விட்டுவிட்டார். புளிய மரத்தின் அருகில் கால்நடை கட்ட சென்ற குமரவேலுக்கு அங்கு காத்திருந்தது மிகப் பெரிய அதிர்ச்சி... புளிய மரத்தைப் பார்த்து அதிர்ந்து போனார் நில உரிமையாளர் குமரவேல் அங்கு நீல நிறத்தில் ஷர்ட் அட்டையில் எழுதப்பட்டிருந்த வாசகத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
அந்த அட்டையில் "இது எங்களுடைய 128 - வது இளநீர் வேட்டை" என தலைப்பு கொடுத்தும்
முக்கிய குறிப்பு: தீரவிசாரிக்காதீர்கள் இதுவே இறுதியாகட்டும் மீறி விசாரித்தால் மீண்டும் வேட்டை தொடரும் நன்றி!!!எனவும் குறிப்பிட்டுள்ளனர். இப்படிக்கு என்ற எழுத்தின் கீழே "ஓம் சக்தி ஆதிபராசக்தி எனவும் மேலும் ஸோசோத்திரம் ஆண்டவரே லு.கா82 வதுஅதிகாரம் எனவும், எல்லாப் புகயும் இறைவனுக்கே அல்லா" எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
அதில் வேண்டுகோள் எனக் குறிப்பிட்டு : செவ்வள இளநீர் மரங்களை வளர்க்கவும்
எச்சரிக்கை:- எங்களை கண்டுபிடிக்க இயலாது
நீல நிற சாட் அட்டையில் பெரிய ராமத்தைப் போட்டுவிட்டு நகரம் படம் வடிவேல் பாணியில் நுதன முறையில் திருடி இளநீரை குடித்துவிட்டு அங்கிருந்து எச்சரிக்கை செய்துவிட்டு மர்ம ஆசாமிகள் தப்பிச் சென்றுள்ளனர். யார் இந்த வேலையை பார்த்திருப்பார்கள் என தெரியாமல் கிராமமே திக்குமுக்காடி கொண்டிருக்கிறது.