Indian Army Recruitment: இந்திய இராணுவ பணி.. ஆள் சேர்ப்பு முகாம்..இளைஞர்கள் கலந்துகொள்வது எப்படி..? - முழு விவரம் இதோ !
இந்திய இராணுவ ஆள் சேர்ப்பு முகாம் 04.01.2024 முதல் 13.01.2024 வரை கடலூர் மாவட்டத்தில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கில் பல்வேறு பணிகளுக்காக நடைபெற உள்ளது.
![Indian Army Recruitment: இந்திய இராணுவ பணி.. ஆள் சேர்ப்பு முகாம்..இளைஞர்கள் கலந்துகொள்வது எப்படி..? - முழு விவரம் இதோ ! Indian Army Recruitment Camp Cuddalore From January 4th to 13th Know How To Attend Other Details- TNN Indian Army Recruitment: இந்திய இராணுவ பணி.. ஆள் சேர்ப்பு முகாம்..இளைஞர்கள் கலந்துகொள்வது எப்படி..? - முழு விவரம் இதோ !](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/03/3f9309f41d144a4fdf09ea39947b488b1704264009978113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இந்திய இராணுவத்தில் சேர விண்ணப்பிக்கலாம்
விழுப்புரம் மாவட்டத்தில் இந்திய இராணுவ ஆள் சேர்ப்பு முகாம் 04.01-2024 முதல் 13.01.2024 வரை இராணுவத்தில் ஆட்சேர்ப்பு நடைபெறவுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டு பயன்பெற மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார்.
இந்திய இராணுவ ஆள் சேர்ப்பு முகாம் குறித்த பேரணி நிகழ்ச்சி, சென்னை ஆட்சேர்ப்பு தலைமை அலுவலகத்தால் 04.01.2024 முதல் 13.01.2024 வரை கடலூர் மாவட்டத்தில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கில் பல்வேறு பணிகளுக்காக நடைபெற உள்ளது. மேலும் இப்பணிகள் குறித்தும், இராணுவ ஆள் சேர்ப்பில் கொண்டு வர வேண்டிய சான்றிதழ் குறித்தும் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் வாயிலாக தெரிந்துகொள்ளலாம்.
எனவே, இந்த இராணுவ ஆட்சேர்ப்பு முகாமில் அதிக அளவிலான விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டு பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 04146-226417 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்புகொள்ளலாம் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)