விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் மழை : 3500 ஏக்கர் உப்பளங்களை சூழ்ந்த மழைநீர்
விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக 3500 ஏக்கர் உப்பளங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலநிலை நிலவுவதை ஒட்டி ஒரு சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி பல்வேறு மாவட்டங்களில் காலை முதலே மழை பெய்து வந்த வண்ணம் உள்ளது. இந்த மழை விழுப்புரம் மாவட்ட மற்றும் விழுப்புரத்தை சுற்றியுள்ள பகுதிகளிலும் பெய்து வருகிறது. விழுப்புரம் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தை சுற்றி அதிகாலை முதலே வானில் கருமேகங்கள் சூழ்ந்து இதமான சூழ்நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து மழை பெய்யத் தொடங்கி தொடர்ந்து பெய்த வண்ணம் உள்ளது. இந்த மழை விழுப்புரம் பெரும்பாக்கம் காணை, மாம்பழப்பட்டு, அய்யூர், அகரம், சிந்தாமணி, முண்டியம்பாக்கம், இருவேல்பட்டு, அரசூர், சாலையாகரம், இணங்காடு, செங்காடு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்த வண்ணம் உள்ளது. இதே போன்று மரக்காணம் பகுதிகளில் காலை 6 மணி முதல் கன மழை பெய்து வருகிறது. இந்த மழையால் வயல்வெளிகளில் பயிர் செய்துள்ள நெல் மணிலா, மரவள்ளி கிழங்கு போன்ற பயிர்களுக்கு தேவையான தண்ணீர் கிடைத்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆனால் காலை முதல் பெய்த கன மழையால் மத்திய மாநில அரசுக்கு சொந்தமான உப்பள பகுதிகளில் சுமார் 3500 ஏக்கர் நீரில் சூழ்ந்துள்ளது. தொடர்ந்து விட்டுவிட்டு பெய்து வரும் இந்த மழையினால் 2 மாதங்களாக உப்பல பகுதிகளில் உப்பு உற்பத்தி நடைபெறவில்லை. இதனால் 5000 -க்கும் மேற்பட்ட உப்பு உற்பத்தி தொழிலாளர்கள் வேலையின்றி பாதிப்படைந்துள்ளனர். மேலும் இந்த மழை மரக்காணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான ஆலத்தூர், கந்தாடு, வண்டி பாளையம், நடுக்குப்பம், அனுமந்தை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்த வண்ணம் உள்ளது.