மேலும் அறிய

தமிழ் மொழி மீது பிரதமருக்கு பற்றிருந்தால் தமிழுக்காக ஒரு மத்திய பல்கலை.,- ஐ உருவாக்கட்டும் - எம்.பி ரவிக்குமார்

தமிழ் மொழி மீது பிரதமருக்கு பற்றிருந்தால் சமஸ்கிருதத்துக்கு ஒரே நாளில் நான்கு மத்திய பல்கலைக் கழகங்களை உருவாக்கிய பிரதமர் தமிழுக்காக ஒரு மத்திய பல்கலைக் கழகத்தை உருவாக்கட்டும் - எம்.பி ரவிக்குமார்

விழுப்புரம்: தமிழ் மொழி மீது பற்றியிருந்தால் சமஸ்கிருத மொழிக்கு நான்கு  மத்திய பல்கலைகழகத்தை உருவாக்கியதை போல் ஒன்றிய அரசு தமிழ் மொழிக்கு ஒரு பல்கலைக்கழகத்தையாவது உருவாக்கியிருக்க வேண்டும் என எம்.பி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

அம்பேத்கரின் 133வது பிறந்தநாளை முன்னிட்டு விழுப்புரம் பழைய பேருந்துநிலையத்திலிருந்து புதியபேருந்து நிலையம் வரை விசிக சார்பில் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஜனநாயகம் காப்போம் என்று ஊர்வலமாக வந்து புதிய பேருந்துநிலையம் அருகிலுள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  இந்த ஊர்வலத்தில் சனாதனத்திற்கு எதிராகவும், ஒன்றிய அரசுக்கு எதிராகவும் விசிகவினர் முழக்கமிட்டனர்.

ஊர்வலத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் இந்தியாவின் வளங்களை கார்ப்ரேட் நணபர்களுக்கு தாறை வார்த்துகொடுத்துக்கொண்டு மோடி செயல்பட்டு கொண்டு இருப்பதாக ஹெண்டன்பர்க் நிறுவனம் அறிக்கை வெளியிட்டதால் அதானி நிறுவனங்கள் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் இந்தியாவின் பொருளாதாரம் நிலைகுலைந்து எல்.ஐ.சி பொதுத்துறை நிறுவனத்தின் பணத்தை அதானியின் நான்கு நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாக தெரிவித்தார்.  அதானியின் முறைகேடுகளை மூடி மறைக்கவும், அதானியை காப்பாற்றவும் நரேந்திர மோடி அரசு ஈடுபட்டு இந்திய பொருளாதாரத்திற்கும், ஜனநாயகத்திற்கும் ஆபத்தாக மாறியுள்ளதால் ஜனநாயகம் காப்போம் என்ற பெயரில் பேரணி நடத்தியுள்ளதாகவும் ஒன்றிய அரசு அதானிக்கு ஆதரவான நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் அதானி மீது விசாரனை நடத்தப்பட வேண்டும் என்றார்.

இந்தியா முழுவதும் மெகா ஊழலான அதானி ஊழல் பாஜக சிக்கி தவித்து வருவதால் இந்த ஊழல் குறித்து நாடாளுமன்றத்தில் பேசினால் பதிவாகிவிடும் என்பதால் தான் பட்ஜெட் கூட்டத்தொடரை ஒருநாள் கூட நடத்தாமல் முடித்துள்ளதாக குற்றஞ்சாட்டினார். அதானி ஊழல் பேசியதால் ராகுல்காந்தி பதவி பரிக்கப்பட்டுள்ளதாகவும் ஊழல்களை மறைக்க திசை திருப்பும் வேலை செய்துவருவதாகவும் அதன் ஒரு பகுதி தான் திமுக மீதான சொத்து பட்டியலை பாஜக அண்ணாமலை வெளியிட்டுள்ளதாகவும் அதனை திமுக முறியடிக்கும் என கூறினார்.

தமிழக ஆளுநர் ரவி தமிழ் மொழிக்கு ஆதரவாக பேசி தமிழ் மொழி மீது இந்தி போன்ற எந்த மொழியையும் திணிக்க முடியாது என்று கூறுவது அது பாஜகவின் புதிய தந்திரம் அதன் வெளிப்பாடுதான் ஆளுநர் பேசியது என்றும் உன்மையில் தமிழ் மொழி மீது பற்றியிருந்தால் ஒரே நாளில் நான்கு சமஸ்கிருத மத்திய பல்கலைகழகத்தை உருவாக்கினார்கள் உன்மையில் ஒன்றிய அரசுக்கு தமிழ் மொழி மீது பற்றிருந்தால் ஒரு தமிழ் பல்கலைகழகத்தையாவது வருவாக்கியிருக்க வேண்டும் எனவும் எல் முருகன் வீட்டிற்கு சென்று பிரதமர் மோடி தமிழ் புத்தாண்டினை கொண்டாடி வாழ்த்து தெரிவிப்பது வாக்கு வங்கிக்காக தான் என ரவிக்குமார் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணித்ததா அதிமுக? முக்கிய மீட்டிங் நடந்தது என்ன?
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணித்ததா அதிமுக? முக்கிய மீட்டிங் நடந்தது என்ன?
CM Stalin: சொல்லி அடித்த முதலமைச்சர் ஸ்டாலின்..! சட்டப்பேரவையில் சவாலில் தோற்ற எடப்பாடி பழனிசாமி - பொள்ளாச்சி விவகாரம்
CM Stalin: சொல்லி அடித்த முதலமைச்சர் ஸ்டாலின்..! சட்டப்பேரவையில் சவாலில் தோற்ற எடப்பாடி பழனிசாமி - பொள்ளாச்சி விவகாரம்
100 நாள் வேலைத் திட்டத்தை குறைக்க ஊராட்சிகள் தரம் உயர்வா? சட்டசபையில் அமைச்சர் பரபரப்பு பதில்
100 நாள் வேலைத் திட்டத்தை குறைக்க ஊராட்சிகள் தரம் உயர்வா? சட்டசபையில் அமைச்சர் பரபரப்பு பதில்
Ajithkumar Car Race: கார் ரேஸில் இருந்து அஜித் விலகல்! சந்தோஷப்படவா? கவலைப்படவா?
Ajithkumar Car Race: கார் ரேஸில் இருந்து அஜித் விலகல்! சந்தோஷப்படவா? கவலைப்படவா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

V C Chandhirakumar Profile: செந்தில்பாலாஜி Choice! உடனே OK சொன்ன ஸ்டாலின்.. யார் இந்த சந்திரகுமார்?Erode East By Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. ஸ்டாலின் வைத்த கோரிக்கை நிறைவேற்றிய ராகுல்!Taiwan Couple Marriage in India : அம்மி மிதித்து..அருந்ததி பார்த்து திருமணம் செய்த தைவான் தம்பதிTirupati Stampede |  Pawan  VS Jagan Mohan டவுன் டவுன் ஜெய் ஜெய் கோஷம் போர்களமான திருப்பதி HOSPITAL

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணித்ததா அதிமுக? முக்கிய மீட்டிங் நடந்தது என்ன?
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணித்ததா அதிமுக? முக்கிய மீட்டிங் நடந்தது என்ன?
CM Stalin: சொல்லி அடித்த முதலமைச்சர் ஸ்டாலின்..! சட்டப்பேரவையில் சவாலில் தோற்ற எடப்பாடி பழனிசாமி - பொள்ளாச்சி விவகாரம்
CM Stalin: சொல்லி அடித்த முதலமைச்சர் ஸ்டாலின்..! சட்டப்பேரவையில் சவாலில் தோற்ற எடப்பாடி பழனிசாமி - பொள்ளாச்சி விவகாரம்
100 நாள் வேலைத் திட்டத்தை குறைக்க ஊராட்சிகள் தரம் உயர்வா? சட்டசபையில் அமைச்சர் பரபரப்பு பதில்
100 நாள் வேலைத் திட்டத்தை குறைக்க ஊராட்சிகள் தரம் உயர்வா? சட்டசபையில் அமைச்சர் பரபரப்பு பதில்
Ajithkumar Car Race: கார் ரேஸில் இருந்து அஜித் விலகல்! சந்தோஷப்படவா? கவலைப்படவா?
Ajithkumar Car Race: கார் ரேஸில் இருந்து அஜித் விலகல்! சந்தோஷப்படவா? கவலைப்படவா?
TVK Vijay: ”இன்னும் எத்தனை நாள் ஏமாத்துவீங்க” திமுகவை லெஃப்ட், ரைட் வாங்கிய தவெக தலைவர் விஜய்
TVK Vijay: ”இன்னும் எத்தனை நாள் ஏமாத்துவீங்க” திமுகவை லெஃப்ட், ரைட் வாங்கிய தவெக தலைவர் விஜய்
TN Assembly CM Stalin: ”ஸ்டாலின் பஸ்” சட்டப்பேரவையில் கர்ஜித்த முதலமைச்சர் - ”அப்பா..அப்பா..” கண் கலங்கினார்
TN Assembly CM Stalin: ”ஸ்டாலின் பஸ்” சட்டப்பேரவையில் கர்ஜித்த முதலமைச்சர் - ”அப்பா..அப்பா..” கண் கலங்கினார்
Stalin on Pongal Gift Money; கருணை இருக்கு...நிதி இல்லை; பேரவையில் ஸ்டாலின் விளக்கம்...
கருணை இருக்கு...நிதி இல்லை; பொங்கல் பரிசுப் பணம் குறித்து ஸ்டாலின் விளக்கம்...
கிராமத்து பெண்ணை திருமணம் செய்யப்போகும் பான் இந்தியா ஸ்டார் பிரபாஸ்
கிராமத்து பெண்ணை திருமணம் செய்யப்போகும் பான் இந்தியா ஸ்டார் பிரபாஸ்
Embed widget