‘எனக்கு கருநாக்கு...நான் சொன்னது பலிக்கும்’- நாக்கை நீட்டிய அமைச்சரால் கூட்டத்தில் சிரிப்பலை
நான் ஜோசியக்காரன்....நான் சொன்னால் பலிக்கும்.... நாக்கை நீட்டி வாக்கு சொன்ன... அமைச்சர் செஞ்சி மஸ்தான்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தனியார் திருமண மண்டபத்தில் திண்டிவனம் நகர செயல் வீரர்கள் கூட்டம் திண்டிவனம் நகர அவைத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அமைச்சர் செஞ்சி மஸ்தான் உரையாற்றினார். இதில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசுகையில், ”திண்டிவனத்தில் கவுன்சிலர் தேர்தலில் சில நிர்பந்தம் காரணமாக கூட்டணி கட்சிக்கு நாம் சீட்டுக்கள் தந்தோம் எனவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் நிரந்தர முதலமைச்சர் என்றும், அவர் இறுதி மூச்சுவரை முதலமைச்சராக இருப்பார்,
நாம் ஐந்தாம் தலைமுறையை உருவாக்கி விட்டோம் , ஸ்டாலின் எந்த காலமும் முதல்வராக ஆக முடியாது என சொன்னார்கள் ஆனால் நான் அன்றே சொன்னேன் முதலமைச்சராக முக ஸ்டாலின் வருவார் என்று நான் சொன்னால் பலிக்கும். என் நாக்கு கருநாக்கு நானும் ஜோசியக்காரன் என் நாக்கை பாருங்கள்" என கூறி தனது நாக்கை வெளியே நீட்டியவாறு அமைச்சர் செஞ்சி மஸ்தான் சிறிது நேரம் நின்றால் கூட்டத்தில் சிரிப்பலை ஏற்பட்டது.