மேலும் அறிய

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மேல்முறையிட்டு வழக்கில் தீர்ப்பு தேதி அறிவிப்பு

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மேல்முறையிட்டு வழக்கில் வரும் ஜன.6ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி பூர்ணிமா அறிவித்து ஒத்திவைப்பு

முன்னாள் டி.ஜி.பி.

தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ந் தேதி டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்கும் பணியில் அப்போதைய சட்டம்-ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி ராஜேஸ் தாஸ் நியமிக்கப்பட்டு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது  பாதுகாப்பு ஆலோசனை என்ற பெயரில் பெண் எஸ்பியிடம் முன்னாள் சிறப்பு டிஜிபி காரில் அழைத்து கொண்டு சென்றபோது பெண் எஸ்பியிடம் பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் எஸ்பி தன்னிடம் அத்துமீறிய சிறப்பு டி.ஜி.பி. மீது  ஒழுங்கு நடவடிக்கை எடுத்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐ.பி.எஸ். அதிகாரி, தமிழக அரசின் உள்துறை செயலாளர் மற்றும் அப்போதைய போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி ஆகியோரிடம் புகார் அளித்தார்.

இந்த புகாரின்பேரில் சிறப்பு டி.ஜி.பி. பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த புகார் தொடர்பாக சிறப்பு டி.ஜி.பி. மற்றும் அவரது உத்தரவின்படி பெண் ஐ.பி.எஸ். அதிகாரியை மிரட்டி கார் சாவியை பறித்த செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ் பி  ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தன.

இவ்வழக்கில் அரசு தரப்பில் சாட்சிகளாக சேர்க்கப்பட்ட 68 சாட்சிகளின் விசாரணை கடந்த ஏப்ரல் மாதம் 13-ந் தேதியன்று நிறைவடைந்ததால் இவ்வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டியது. அதுபோல் இவ்வழக்கில் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அரசு தரப்பு சாட்சிகள் அளித்துள்ள சாட்சியங்கள் குறித்தும், அந்த குற்றச்சாட்டுகள் அரசு தரப்பில் எந்த வகையில் நிரூபணம் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்தும் அரசு தரப்பின் வாதம் கடந்த வாரம் முடிவடைந்தது. 

கடந்து வந்த பாதை:

அதுபோல் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ் பி  தரப்பு வழக்கறிஞர்கள்  வாதங்கள் முடிந்த நிலையில் அதன் விவரங்களை இரு தரப்பு வழக்கறிஞர்களும் எழுத்துப்பூர்வமாக சமர்பிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் இவ்வழக்கில் அரசு தரப்பு வழகறிஞர் வைத்தியநாதன், ரவிச்சந்திரன் ஆகியோர் நேரில் ஆஜராகி தங்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களை 61 பக்கங்கள் கொண்ட வாதுரையாக நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் எழுத்துப்பூர்வமாக கடந்த 12 ஆம் தேதி தாக்கல் செய்தனர். அதன் பிறகு முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. தரப்பில் வழக்கறிஞர் ரவீந்திரனும், செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்பி தரப்பில் வழக்கறிஞர் ஹேமராஜனும் நேரில் ஆஜராகி தங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட வாதங்களை தாக்கல் செய்தனர்.

இதனையடுத்து இவ்வழக்கை விசாரித்த தலைமை குற்றவியல் நீதிபதி புஷ்பராணி, வருகிற 16-ந் தேதி (வெள்ளிக்கிழமை) இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுகிறது. கடந்த 2 வருடமாக மிகவும் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் நடந்து வந்த இவ்வழக்கில் தீர்ப்பு வெளியானது.

வழக்கின் தீர்ப்பு விவரம் :
 
இவ்வழக்கில் அரசு தரப்பில் சாட்சிகளாக சேர்க்கப்பட்ட 68 சாட்சிகளின் விசாரணை கடந்த ஏப்ரல் மாதம் 13-ந் தேதியன்று நிறைவடைந்தது. இவ்வழக்கில் 61 பக்கங்கள் வாதுரையை வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இவ்வழக்கில் தீர்ப்பினை நீதிபதி புஷ்பராணி இன்று வழங்கினார். அதில் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாசுக்கு (354 A, 341 506 4(F) women harassment ) ஆகிய நான்கு பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டதால்  3 ஆண்டுகள் சிறை ஆண்டு சிறை  தண்டனையும் 20 ஆயிரத்து 500 ருபாய் அபராதம் பெண் எஸ்பியை தடுத்து நிறுத்திய செங்கல்பட்டு முன்னாள் எஸ் பி கண்னனுக்கு 500 ரூபாய் அபராதம் மட்டும் விதித்து தீர்ப்பு வழங்கினார். 
 
மேல்முறையிட்டு வழக்கில் வரும் ஜன.6ஆம் தேதி தீர்ப்பு

சிறை தண்டனையை எதிர்த்து முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாசும், அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து முன்னாள் எஸ்பி கண்ணனும் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த ஜூலை மாதம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தனர். மேல்முறையீட்டு வழக்கில் வாதாட முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் தொடர்ந்து கால அவகாசம் கேட்டு வந்த நிலையில் இன்று வாதாடுவதற்கு இறுதி கால அவகாசம் அளிக்கப்படுவதாக நீதிபதி தெரிவித்திருந்தார்.

இன்றைய வழக்கு விசாரணையின் போது முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாஸ் தரப்பு கால அவகாசம் கேட்டு கோரிக்கை வைத்தனர். கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி பூர்ணிமா, நீதிமன்றம் என்ன விளையாட்டு மைதானமா என சரமாரியாக கேள்வி எழுப்பினார். மேல்முறையிட்டு வழக்கில் வரும் ஜன.6ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி பூர்ணிமா அறிவித்து வழக்கை ஒத்திவைத்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Breaking News LIVE: விஷச்சாராய மரணம் : 32 தலித்துக்கள் உயிரிழந்திருக்கிறார்கள்.. இவை மரணங்கள் அல்ல.. கொலைகள் - பாஜக
Breaking News LIVE: விஷச்சாராய மரணம் : 32 தலித்துக்கள் உயிரிழந்திருக்கிறார்கள்.. இவை மரணங்கள் அல்ல.. கொலைகள் - பாஜக
சென்னையில் பயங்கரம் :  தாய், தம்பி கொலை.. தியேட்டரில் படம் பார்த்துவிட்டு பஸ் ஸ்டாண்டில் தூங்கிய இளைஞர்!
தாய், தம்பி கொலை.. தியேட்டரில் படம் பார்த்துவிட்டு பஸ் ஸ்டாண்டில் தூங்கிய இளைஞர்!
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 பணிகளுக்கு வயது வரம்பா?- உடனே திரும்பப்பெறக் கோரிக்கை!
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 பணிகளுக்கு வயது வரம்பா?- உடனே திரும்பப்பெறக் கோரிக்கை!
AUS vs AFG: ஆஸ்திரேலியாவை அசால்ட் செய்த ஆப்கானிஸ்தான்.. 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!
AUS vs AFG: ஆஸ்திரேலியாவை அசால்ட் செய்த ஆப்கானிஸ்தான்.. 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Chennai's Amirtha  : சென்னைஸ் அமிர்தாவின் 8வது பட்டமளிப்பு விழா 250 மாணவர்கள் தேர்ச்சி!Chandrababu naidu assembly :மந்திரங்கள் முழங்க ENTRY! விழுந்து வணங்கிய சந்திரபாபு! கட்டியணைத்த பவன்Saattai Duraimurugan Kallakurichi : சாட்டை மீது தாக்குதல்! கள்ளக்குறிச்சியில் பரபரப்பு!நடந்தது என்ன?Kallakurichi kalla sarayam  :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Breaking News LIVE: விஷச்சாராய மரணம் : 32 தலித்துக்கள் உயிரிழந்திருக்கிறார்கள்.. இவை மரணங்கள் அல்ல.. கொலைகள் - பாஜக
Breaking News LIVE: விஷச்சாராய மரணம் : 32 தலித்துக்கள் உயிரிழந்திருக்கிறார்கள்.. இவை மரணங்கள் அல்ல.. கொலைகள் - பாஜக
சென்னையில் பயங்கரம் :  தாய், தம்பி கொலை.. தியேட்டரில் படம் பார்த்துவிட்டு பஸ் ஸ்டாண்டில் தூங்கிய இளைஞர்!
தாய், தம்பி கொலை.. தியேட்டரில் படம் பார்த்துவிட்டு பஸ் ஸ்டாண்டில் தூங்கிய இளைஞர்!
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 பணிகளுக்கு வயது வரம்பா?- உடனே திரும்பப்பெறக் கோரிக்கை!
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 பணிகளுக்கு வயது வரம்பா?- உடனே திரும்பப்பெறக் கோரிக்கை!
AUS vs AFG: ஆஸ்திரேலியாவை அசால்ட் செய்த ஆப்கானிஸ்தான்.. 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!
AUS vs AFG: ஆஸ்திரேலியாவை அசால்ட் செய்த ஆப்கானிஸ்தான்.. 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!
Indian 2:
Indian 2: "தாத்தா வராரு..கதற விட போறாரு” - இந்தியன் 2 படத்தின் ட்ரெய்லர் என்னைக்கு தெரியுமா?
TN MP's Swearing: நாடாளுமன்றத்தில் ஜூன் 25ல் தமிழக எம்.பி.,க்கள் பதவியேற்பு .. விசிக எம்.பி., ரவிகுமார் தகவல்!
TN MP's Swearing: நாடாளுமன்றத்தில் ஜூன் 25ல் தமிழக எம்.பி.,க்கள் பதவியேற்பு .. விசிக எம்.பி., ரவிகுமார் தகவல்!
RLV Rocket Video: இஸ்ரோ அசத்தல்!: மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டின் இறுதி சோதனை வெற்றி
RLV Rocket Video: இஸ்ரோ அசத்தல்!: மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டின் இறுதி சோதனை வெற்றி
NEET: தேசிய தேர்வு முகமை தலைவர் நீக்கம்.. முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு..மத்திய அரசு அதிரடி!
தேசிய தேர்வு முகமை தலைவர் நீக்கம்.. முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு..மத்திய அரசு அதிரடி!
Embed widget