மேலும் அறிய

அமைச்சர் பொன்முடியின் சகோதரர் மறைவு - நேரில் சென்று ஆறுதல் கூறிய சி.வி. சண்முகம்

திமுக அமைச்சர் பொன்முடியின் சகோதரர் மறைவுக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம்

தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் தம்பியும், புகழ்பெற்ற சிறுநீரக மருத்துவருமான தியாகராஜன் உடல்நலக் குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் இன்று அதிகாலை காலமானார். அவரது உடலுக்கு முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் நேரில் அஞ்சலி செலுத்தி பொன்முடிக்கு ஆறுதல் கூறினார். உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் இளைய சகோதரரும் பிரபல சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் தியாகராஜன் உடல்நலக் குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று அதிகாலை 2.30 மணியளவில் காலமானார். அவரது உடல் விழுப்புரம் காந்தி சிலை அருகில் மரகதம் மருத்துவமனையில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது.

இத்தகவல் அறிந்த அமைச்சர்களான உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு, ஏ.வ.வேலு, மா.சுப்ரமணியன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, செஞ்சி மஸ்தான், எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், கணேசன், எம்.பிக்கள் ஜெகத்ரட்சகன், ஆ.ராசா, ரவிக்குமார், துணை சபாநாயகர் பிச்சாண்டி, எம்எல்ஏக்கள் புகழேந்தி, லட்சுமணன், சக்கரபாணி, மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர். இதனைதொடர்ந்து, அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி பொன்முடிக்கு ஆறுதல் கூறினார். மறைந்த மருத்துவர் தியாகராஜனிடம் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த பேரறிவாளன் பரோலில் விழுப்புரம் வந்து சிகிச்சை பெற்றார். அவரும், அவரது தாய் அற்புதம்மாள் உள்ளிட்டவர்களும் தியாகராஜன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் அமைச்சர் பொன்முடி, அவரது குடும்பத்தாருக்கும் இரங்கலை தெரிவித்துள்ளனர். இவர் விழுப்புரம் அரசு மருத்துவமனையிலும், அதனைத் தொடர்ந்து செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையிலும், அதனைத் தொடர்ந்து சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிறுநீரக தலைமை மருத்துவ பேராசிரியராக இருந்து சிறப்பாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி டாக்டர். பத்மினி, மகப்பேறு மருத்துவ நிபுணராக உள்ளார். இவருக்கு டாக்டர்.திலீபன், டாக்டர். சிட்டி பாபு என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இவருடன் பிறந்தவர்கள் க.பொன்முடி, க.நடன சிகாமணி, வைஜயந்தி மாலா, மல்லிகா, டாக்டர். க.இராஜ சிகாமணி, அக்ரி க.கோபி சிகாமணி. இன்று மாலை விழுப்புரம், மருதூர், பவர் ஆபிஸ் சாலையில் அமைந்துள்ள இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

என்ன செய்ய வேண்டும்? 

நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஃபாலோ பண்ணா 5 ஆண்டு; வன்கொடுமைக்கு 14 ஆண்டு- மரண தண்டனையும் உண்டு! பெண்களுக்காக நிறைவேறியது புது சட்டம்!
ஃபாலோ பண்ணா 5 ஆண்டு; வன்கொடுமைக்கு 14 ஆண்டு- மரண தண்டனையும் உண்டு! பெண்களுக்காக நிறைவேறியது புது சட்டம்!
TN Assembly: ”தனி அலுவலர்கள் வேண்டாம்” சட்டப்பேரவையில் காங்கிரஸ் சம்பவம், திமுக அரசின் மசோதாவிற்கு எதிர்ப்பு
TN Assembly: ”தனி அலுவலர்கள் வேண்டாம்” சட்டப்பேரவையில் காங்கிரஸ் சம்பவம், திமுக அரசின் மசோதாவிற்கு எதிர்ப்பு
'டியர் இட்லி, சட்னி, நோ சாம்பார்' சர்ச்சையைக் கிளப்பிய மெயில், மன்னிப்பு கேட்ட ஐஐடி- பின்னணி!
'டியர் இட்லி, சட்னி, நோ சாம்பார்' சர்ச்சையைக் கிளப்பிய மெயில், மன்னிப்பு கேட்ட ஐஐடி- பின்னணி!
Pariksha Pe Charcha: அம்மாடியோவ்.. 2.8 கோடி பேர் முன்பதிவு- பரிக்‌ஷா பே சார்ச்சாவுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?
Pariksha Pe Charcha: அம்மாடியோவ்.. 2.8 கோடி பேர் முன்பதிவு- பரிக்‌ஷா பே சார்ச்சாவுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Taiwan Couple Marriage in India : அம்மி மிதித்து..அருந்ததி பார்த்து திருமணம் செய்த தைவான் தம்பதிTirupati Stampede |  Pawan  VS Jagan Mohan டவுன் டவுன் ஜெய் ஜெய் கோஷம் போர்களமான திருப்பதி HOSPITALSeeman Periyar Issue : Vadakalai Vs Thenkalai fight : வடகலை Vs தென்கலை”யார் பெரியவா..?”களேபரமான காஞ்சிபுரம் கோயில்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஃபாலோ பண்ணா 5 ஆண்டு; வன்கொடுமைக்கு 14 ஆண்டு- மரண தண்டனையும் உண்டு! பெண்களுக்காக நிறைவேறியது புது சட்டம்!
ஃபாலோ பண்ணா 5 ஆண்டு; வன்கொடுமைக்கு 14 ஆண்டு- மரண தண்டனையும் உண்டு! பெண்களுக்காக நிறைவேறியது புது சட்டம்!
TN Assembly: ”தனி அலுவலர்கள் வேண்டாம்” சட்டப்பேரவையில் காங்கிரஸ் சம்பவம், திமுக அரசின் மசோதாவிற்கு எதிர்ப்பு
TN Assembly: ”தனி அலுவலர்கள் வேண்டாம்” சட்டப்பேரவையில் காங்கிரஸ் சம்பவம், திமுக அரசின் மசோதாவிற்கு எதிர்ப்பு
'டியர் இட்லி, சட்னி, நோ சாம்பார்' சர்ச்சையைக் கிளப்பிய மெயில், மன்னிப்பு கேட்ட ஐஐடி- பின்னணி!
'டியர் இட்லி, சட்னி, நோ சாம்பார்' சர்ச்சையைக் கிளப்பிய மெயில், மன்னிப்பு கேட்ட ஐஐடி- பின்னணி!
Pariksha Pe Charcha: அம்மாடியோவ்.. 2.8 கோடி பேர் முன்பதிவு- பரிக்‌ஷா பே சார்ச்சாவுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?
Pariksha Pe Charcha: அம்மாடியோவ்.. 2.8 கோடி பேர் முன்பதிவு- பரிக்‌ஷா பே சார்ச்சாவுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?
Duraimurugan Seeman: ”ஏஜெண்ட், தற்குறி, அறிவு இருந்தா” சீமானை வெளுத்து வாங்கிய துரைமுருகன் - அடுத்து கைது?
Duraimurugan Seeman: ”ஏஜெண்ட், தற்குறி, அறிவு இருந்தா” சீமானை வெளுத்து வாங்கிய துரைமுருகன் - அடுத்து கைது?
NMMS Exam: என்எம்எம்எஸ் படிப்பு உதவித்‌ தொகை தேர்வு; முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தேர்வுகள் இயக்ககம்!
NMMS Exam: என்எம்எம்எஸ் படிப்பு உதவித்‌ தொகை தேர்வு; முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தேர்வுகள் இயக்ககம்!
Erode East By Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், எந்த கட்சிக்கு யார் வேட்பாளர்? திமுக+ Vs எதிர்க்கட்சிகள்: இன்று முதல் வேட்புமனுதாக்கல்
Erode East By Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், எந்த கட்சிக்கு யார் வேட்பாளர்? திமுக+ Vs எதிர்க்கட்சிகள்: இன்று முதல் வேட்புமனுதாக்கல்
Game Changer Review: தெலுங்கில் ஜெயித்தாரா இயக்குனர் ஷங்கர்? ராம் சரணின் கேம் சேஞ்சர் திரைப்படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ..!
Game Changer Review: தெலுங்கில் ஜெயித்தாரா இயக்குனர் ஷங்கர்? ராம் சரணின் கேம் சேஞ்சர் திரைப்படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ..!
Embed widget