மேலும் அறிய

பாலியல் வழக்கு: முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவு

29ம் தேதி வாதாட இறுதி வாய்ப்பு அளிப்பதாகவும், அன்றைய தினம் கண்டிப்பாக நேரில் ஆஜராகி வாதிட வேண்டும் என்றும் நீதிபதி பூர்ணிமா உத்தரவு.

பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபிக்கு 3 ஆண்டு சிறை தண்டனையை வழங்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீட்டு வழக்கு விசாரணையில் தீர்ப்பு வழங்க இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது வரும் 29ம் தேதி வாதாட இறுதி வாய்ப்பு அளிப்பதாகவும், அன்றைய தினம் கண்டிப்பாக நேரில் ஆஜராகி வாதிட வேண்டும் என்றும் நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டுள்ளார்.

முன்னாள் டி.ஜி.பி.

தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ந் தேதி டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்கும் பணியில் அப்போதைய சட்டம்-ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி ராஜேஸ் தாஸ் நியமிக்கப்பட்டு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது  பாதுகாப்பு ஆலோசனை என்ற பெயரில் பெண் எஸ்பியிடம் முன்னாள் சிறப்பு டிஜிபி காரில் அழைத்து கொண்டு சென்றபோது பெண் எஸ்பியிடம் பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் எஸ்பி தன்னிடம் அத்துமீறிய சிறப்பு டி.ஜி.பி. மீது  ஒழுங்கு நடவடிக்கை எடுத்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐ.பி.எஸ். அதிகாரி, தமிழக அரசின் உள்துறை செயலாளர் மற்றும் அப்போதைய போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி ஆகியோரிடம் புகார் அளித்தார்.

இந்த புகாரின்பேரில் சிறப்பு டி.ஜி.பி. பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த புகார் தொடர்பாக சிறப்பு டி.ஜி.பி. மற்றும் அவரது உத்தரவின்படி பெண் ஐ.பி.எஸ். அதிகாரியை மிரட்டி கார் சாவியை பறித்த செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்பி ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தன.

இவ்வழக்கில் அரசு தரப்பில் சாட்சிகளாக சேர்க்கப்பட்ட 68 சாட்சிகளின் விசாரணை கடந்த ஏப்ரல் மாதம் 13-ந் தேதியன்று நிறைவடைந்ததால் இவ்வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டியது. அதுபோல் இவ்வழக்கில் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அரசு தரப்பு சாட்சிகள் அளித்துள்ள சாட்சியங்கள் குறித்தும், அந்த குற்றச்சாட்டுகள் அரசு தரப்பில் எந்த வகையில் நிரூபணம் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்தும் அரசு தரப்பின் வாதம் கடந்த வாரம் முடிவடைந்தது. 

கடந்து வந்த பாதை:

அதுபோல் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ் பி  தரப்பு வழக்கறிஞர்கள்  வாதங்கள் முடிந்த நிலையில் அதன் விவரங்களை இரு தரப்பு வழக்கறிஞர்களும் எழுத்துப்பூர்வமாக சமர்பிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் இவ்வழக்கில் அரசு தரப்பு வழகறிஞர் வைத்தியநாதன், ரவிச்சந்திரன் ஆகியோர் நேரில் ஆஜராகி தங்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களை 61 பக்கங்கள் கொண்ட வாதுரையாக நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் எழுத்துப்பூர்வமாக கடந்த 12 ஆம் தேதி தாக்கல் செய்தனர். அதன் பிறகு முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. தரப்பில் வழக்கறிஞர் ரவீந்திரனும், செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்பி தரப்பில் வழக்கறிஞர் ஹேமராஜனும் நேரில் ஆஜராகி தங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட வாதங்களை தாக்கல் செய்தனர்.

இதனையடுத்து இவ்வழக்கை விசாரித்த தலைமை குற்றவியல் நீதிபதி புஷ்பராணி, வருகிற 16-ந் தேதி (வெள்ளிக்கிழமை) இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுகிறது. கடந்த 2 வருடமாக மிகவும் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் நடந்து வந்த இவ்வழக்கில் தீர்ப்பு வெளியானது.

வழக்கின் தீர்ப்பு விவரம் :
 
இவ்வழக்கில் அரசு தரப்பில் சாட்சிகளாக சேர்க்கப்பட்ட 68 சாட்சிகளின் விசாரணை கடந்த ஏப்ரல் மாதம் 13-ந் தேதியன்று நிறைவடைந்தது. இவ்வழக்கில் 61 பக்கங்கள் வாதுரையை வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இவ்வழக்கில் தீர்ப்பினை நீதிபதி புஷ்பராணி இன்று வழங்கினார். அதில் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாசுக்கு (354 A, 341 506 4(F) women harassment ) ஆகிய நான்கு பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டதால்  3 ஆண்டுகள் சிறை ஆண்டு சிறை  தண்டனையும் 20 ஆயிரத்து 500 ருபாய் அபராதம் பெண் எஸ்பியை தடுத்து நிறுத்திய செங்கல்பட்டு முன்னாள் எஸ் பி கண்னனுக்கு 500 ரூபாய் அபராதம் மட்டும் விதித்து தீர்ப்பு வழங்கினார். 
 
மேல்முறையிடு வழக்கு 

சிறை தண்டனையை எதிர்த்து முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாசும், அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து முன்னாள் எஸ்பி கண்ணனும் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த ஜூலை மாதம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தனர். மேல்முறையீட்டு வழக்கில் வாதாட முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் தொடர்ந்து கால அவகாசம் கேட்டு வந்த நிலையில் இவ்வழக்கினை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்ய இயலாது இவ்வழக்கினை விழுப்புரம் நீதமன்றம் ஜனவரி 24  ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டிமென செயன்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதின் பேரில் இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ராஜேஷ் தாஸ் விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரனைக்கு வந்தபோது வரும் 29ம் தேதி வாதாட இறுதி வாய்ப்பு அளிப்பதாகவும், அன்றைய தினம் கண்டிப்பாக நேரில் ஆஜராகி வாதிட வேண்டும் என்றும் நீதிபதி பூர்ணிமா உத்தரவு.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RCB vs DC LIVE Score: அதிரடியாக ஆடும் பெங்களூரு; கட்டுப்படுத்துமா டெல்லி?
RCB vs DC LIVE Score: அதிரடியாக ஆடும் பெங்களூரு; கட்டுப்படுத்துமா டெல்லி?
CSK vs RR Match Highlights: வீழ்த்தப்பட்ட ராஜஸ்தான்; CSK-வுக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகாசம்!
CSK vs RR Match Highlights: வீழ்த்தப்பட்ட ராஜஸ்தான்; CSK-வுக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகாசம்!
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
Black Hole: கருந்துளை மேலே நாம் பறந்தால் எப்படி இருக்கும்? நாசா வீடியோ வெளியீடு
Black Hole: கருந்துளை மேலே நாம் பறந்தால் எப்படி இருக்கும்? நாசா வீடியோ வெளியீடு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

KPY Bala on Marriage | ”காலைல 4:30க்கு கல்யாணம்! தேதி பின்னர் அறிவிக்கப்படும்” பாலா நச் பதில்Savukku Shankar Goondas | சவுக்கு மீது குண்டாஸ்! சென்னை காவல்துறை அதிரடி! வச்சு செய்யும் வழக்குகள்Modi's Mother Heeraben patel | ”அம்மா PHOTO-அ கொடுங்க” பரிசுடன் வந்த இளைஞர்கள்! கலங்கிய மோடிSavukku Shankar asset |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RCB vs DC LIVE Score: அதிரடியாக ஆடும் பெங்களூரு; கட்டுப்படுத்துமா டெல்லி?
RCB vs DC LIVE Score: அதிரடியாக ஆடும் பெங்களூரு; கட்டுப்படுத்துமா டெல்லி?
CSK vs RR Match Highlights: வீழ்த்தப்பட்ட ராஜஸ்தான்; CSK-வுக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகாசம்!
CSK vs RR Match Highlights: வீழ்த்தப்பட்ட ராஜஸ்தான்; CSK-வுக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகாசம்!
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
Black Hole: கருந்துளை மேலே நாம் பறந்தால் எப்படி இருக்கும்? நாசா வீடியோ வெளியீடு
Black Hole: கருந்துளை மேலே நாம் பறந்தால் எப்படி இருக்கும்? நாசா வீடியோ வெளியீடு
Ravindra Jadeja: விதிகளை மீறிய ஜடேஜா..மூன்றாவது நடுவர் கொடுத்த ஷாக்!
Ravindra Jadeja: விதிகளை மீறிய ஜடேஜா..மூன்றாவது நடுவர் கொடுத்த ஷாக்!
"எம்.ஜி.ஆர். மாதிரி இருக்க நினைக்கிறார்! நடிகர் விஜய் கட்சி தொடங்கியது மகிழ்ச்சி" முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
"அவரோட வயச விட கம்மியான தொகுதிகளில்தான் காங்கிரஸ் வெற்றிபெறும்" ராகுல் காந்தியை கலாய்த்த பிரதமர் மோடி!
INDIA கூட்டணியின் பிரதமர் வேட்பாளரா கெஜ்ரிவால்? அவரே அளித்த சுவாரஸ்ய பதில்!
INDIA கூட்டணியின் பிரதமர் வேட்பாளரா கெஜ்ரிவால்? அவரே அளித்த சுவாரஸ்ய பதில்!
Embed widget