மேலும் அறிய

முன்னாள் அமைச்சர் பொன்முடி வழக்கிலிருந்து விடுபட கோயிலில் பிராது மனு வழங்கிய திமுகவினர்

விழுப்புரம்: திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீஸ்வரர் கோவிலில் சிவனுக்கு நீதி வழங்கிய வாதாடீஸ்வரர் வழக்குரைத்த மண்டபத்தில் பொன்முடி வழக்கிலிருந்து விடுபட வேண்டி பிராது மனு பெட்டியில் மனு போடப்பட்டது.

விழுப்புரம்: திருவெண்ணெய்நல்லூர் மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோயிலில் சிவனுக்கு நீதி வழங்கிய வாதாடீஸ்வரர் வழக்குரைத்த மண்டபத்தில் முன்னாள் அமைச்சர் பொன்முடி வழக்கிலிருந்து விடுபட வேண்டி பிராது மனு பெட்டியில் மனு போடப்பட்டது. இதில் திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி மன்ற தலைவர் அஞ்சுகம் கணேசன், திமுக நகர செயலாளர் பூக்கடை கணேசன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ஜோதி மற்றும் திமுக பிரமுகர்கள் வார்டு கவுன்சிலர்கள் மற்றும் திமுகவினர் கலந்து கொண்டனர். 

108 பால்குடம் எடுத்து வேண்டுதல்:-

தமிழகத்தின் உயர் கல்வித் துறை அமைச்சராக இருந்த பொன்முடி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் மூன்று ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறை தண்டனையை மேல்முறையீடு செய்வதற்காக சென்னை நீதிமன்றம் ஒரு மாதம் தீர்ப்பையும் நிறுத்தி வைத்துள்ளது. இந்நிலையில் முன்னாள் அமைச்சர் பொன்முடி மீண்டும் அமைச்சராக வேண்டுமென விழுப்புரத்தில் உள்ள திமுக தொண்டர்களின் எதிர்பார்ப்பாகவும் இருந்து வருகிறது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள சித்திலிங்கமட ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராக உமா மகேஸ்வரி சதீஷ்குமார் தலைமையில் திமுக தொண்டர்கள் மீண்டும் பொன்முடி அமைச்சராக வேண்டி 108 பால் குடங்கள் எடுத்தனர். பொன்முடி அமைச்சராக வேண்டி பெண்கள் திமுக தொண்டர்கள் பால்குடத்தினை ஊர்வலமாக எடுத்து சென்று விசாலாட்சி சமேத விநாயகர் பாரீஸ்வரருக்கு அபிஷேகம் செய்து சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அதன் பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொன்முடி வழக்கு 

2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் இருந்தபோது, அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி இருவரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2011 ஆம் ஆண்டு அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில், அமைச்சர் பொன்முடியும் அவரது மனைவி விசாலாட்சியும் ரூ.1.75 கோடிக்கு மேல் வருமானத்துக்கு அதிகமான சொத்துக்களைக் குவித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.  மேலும் அவரது சொத்துக்களையும் லஞ்ச ஒழிப்புத்துறை முடக்கியது.

கடந்த 2016 ஆம் ஆண்டு இந்த வழக்கிலிருந்து பொன்முடி மற்றும் அவரது மனைவியை விழுப்புரம் நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது. மேலும், சொத்துக்கள் முடக்கத்தையும் நீக்கியது. விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்தும் சொத்துக்கள் முடக்கத்தை நீக்கியதை எதிர்த்தும் லஞ்ச ஒழிப்புத்துறை தனித்தனியே உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். சொத்துகுவிப்பு வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தன்டனை விதித்து நேற்று நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்துள்ள நிலையில், சொத்து முடக்கத்தை விழுப்புரம் நீதிமன்றம் நீக்கியது எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்த வழக்கில்  நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்தார், இந்த நிலையில் பொன்முடி வழக்கமான மேல்முறையீடு செய்துள்ளனர்.

கிருபாபுரீஸ்வரர் கோயில்

குறிப்பாக இக்கோயில் பஞ்சாயத்து நகரமான திருவெண்ணைநல்லூரில் உள்ள கிருபாபுரீஸ்வரர் கோயில் (அருட் - கொண்ட - நாதர் அல்லது திருவெண்ணைநல்லூர் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது) இந்து கடவுளான சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. திராவிட கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்ட இந்த கோவிலின் தற்போதைய அமைப்பு 10 ஆம் நூற்றாண்டில் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இக்கோயில் சோழ அரசி செம்பியன் மகாதேவியின் அருளாட்சியைப் பெற்றுள்ளது. சிவன் கிருபாபுரீஸ்வரர் என்றும், அவரது துணைவி பார்வதியை மங்களாம்பிகை என்றும் வழிபடுகின்றனர்.

கோவிலின் சிறப்பு:-

சிவபெருமான் பக்தர்களுக்கு முழு மன அமைதியையும், பேச்சுத்திறன் மற்றும் கல்வியில் சிறந்து விளங்குவதையும், எல்லாவற்றிற்கும் மேலாக தனது முழு ஆசீர்வாதத்தையும் அளித்து அருள்பாலிக்கிறார்.

பிராது விண்ணப்பம் :-

இத்திருத்தலத்தில் இறைவன் வயதான அந்தணர் வேடத்தில் வந்து பழ ஆவணம் காட்டி சுந்தரமூர்த்தி நாயனாரை தடுத்துஆட்கொள்ள வழக்கு நடைபெற்ற இடம். எனவே இத்திருத்தலத்தில் பக்தர்கள் தங்கள் வேண்டுதல் குறைகளை பிராது விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து வழக்காடு மன்றத்தில் இறைவன் முன் உள்ள பிராது பெட்டியில் அர்ச்சனை செய்து சமர்பித்தால் தீர்வு கிடைக்கும். மேலும் தங்களது வேண்டுதல் நிறைவேறிய பிறகு பிராது வாபஸ் விண்ணப்பத்தில் நன்றி கூறி இறைவனிடம் அர்ச்சனை செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் கோவிலில் உள்ள பொல்லா பிள்ளையார் மனிதனால் உருவாக்கப்பட்ட சிலை அல்ல, சுயம்பு. அவர் தனது 5 வயதில் பெரிய சைவ ஆச்சாரியார் மெய்கண்ட தேவர் அவர்களிடம் கற்பித்தார். ஊமைகள் பேச்சுத் திறனைப் பெற அவரிடம் பிரார்த்தனை செய்கிறார்கள். திருமண வரம், குழந்தை, வேலை மற்றும் தொழில் வெற்றி வரம் ஆகியவற்றிற்காக நெய், இலுப்பு, தேங்காய் மற்றும் நல்லெண்ணெய் ஆகிய நான்கு எண்ணெய்களின் கலவையுடன் மக்கள் விளக்குகளை ஏற்றுகிறார்கள். சிவபெருமானின் காளை வாகனமான நந்திக்கு மாலை அணிவித்து வழிபட்டால் திருமணத் திட்டம் நிறைவேறும் என்பது பக்தர்களின் உறுதியான நம்பிக்கை. நந்தி தர்மம் - நீதியான சட்டத்தின் தெய்வமாக மதிக்கப்படுகிறார். ஜப்பான் போன்ற பிற நாடுகளைச் சேர்ந்தவர்கள் இங்கு வந்து நல்ல ஆரோக்கியத்திற்காக யாகம் செய்கிறார்கள். மேலும் 

பூர்வ ஜன்ம பாவங்களிலிருந்து நிவாரணம் பெற மக்கள் யாகங்களையும் நடத்துகிறார்கள். நவகிரகங்கள் ஒன்பது கிரகங்களால் வழிபட்ட ஜோதி லிங்கம் இக்கோயிலில் உள்ளது. ஒரு பக்தர் கோயிலில் உள்ள புனித மரத்தை வணங்கி 5 தீபங்களை ஏற்றி வழிபட்டால், ஒன்பது கிரகங்களில் ஏதேனும் ஒரு கிரகத்தின் முக்கிய அல்லது துணை காலங்களில் அவர்களின் ராசிப்பெயர்ச்சியின் போது அவர்/அவளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

பக்தர்கள் நல்லெண்ணெய், மஞ்சள், மாவுப் பொடிகள், பால், தயிர், பழச்சாறுகள், கரும்புச்சாறு, தேன், பச்சை தேங்காய், பஞ்சாமிர்தம் ஆகிய ஐந்து பொருட்கள் கலந்த பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், புனித சாம்பல் போன்றவற்றைக் கொண்டு சுவாமிக்கு அபிஷேகம் செய்கின்றனர். நெய் விளக்குகளை ஏற்றவும். அவர்கள் அன்னைக்கு மஞ்சள் தூள் கொண்டு அபிஷேகம் செய்து, புடவைகளை வழங்கி, பார்வையாளர்களுக்கு அன்னதானம் செய்கிறார்கள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

எங்கள் அரசியல் வயது கூட அண்ணாமலைக்கு இல்லை - அமைச்சர் சேகர்பாபு
எங்கள் அரசியல் வயது கூட அண்ணாமலைக்கு இல்லை - அமைச்சர் சேகர்பாபு
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Panchagavya: பஞ்சகவ்யம் என்றால் என்ன? எப்படி தயாரிப்பது? எதற்கு பயன்படும்? முழு விவரம்
Panchagavya: பஞ்சகவ்யம் என்றால் என்ன? எப்படி தயாரிப்பது? எதற்கு பயன்படும்? முழு விவரம்
Coimbatore PowerCut: கோவை மக்களே! நாளை (21.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Coimbatore PowerCut: கோவை மக்களே! நாளை (21.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Madurai Dalit Issue | ”சாதி பெயர சொல்லி...சிறுநீர் அடித்து கொடூரம்”கதறி அழுத சிறுவன்!Divya Sathyaraj | திமுக-வில் இணைந்தது ஏன்? லிஸ்ட் போட்ட திவ்யா சத்யராஜ்!கட்சியில் முக்கிய பொறுப்பு?”சீமான் பிரபாகரன் PHOTO FAKE”இயக்குநர் சொன்ன சீக்ரெட்! கடுப்பான சாட்டை துரைமுருகன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எங்கள் அரசியல் வயது கூட அண்ணாமலைக்கு இல்லை - அமைச்சர் சேகர்பாபு
எங்கள் அரசியல் வயது கூட அண்ணாமலைக்கு இல்லை - அமைச்சர் சேகர்பாபு
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Panchagavya: பஞ்சகவ்யம் என்றால் என்ன? எப்படி தயாரிப்பது? எதற்கு பயன்படும்? முழு விவரம்
Panchagavya: பஞ்சகவ்யம் என்றால் என்ன? எப்படி தயாரிப்பது? எதற்கு பயன்படும்? முழு விவரம்
Coimbatore PowerCut: கோவை மக்களே! நாளை (21.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Coimbatore PowerCut: கோவை மக்களே! நாளை (21.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Saif Attacker Not Indian; சைஃப் அலி கானை குத்தியவன் இந்தியனே இல்லை... விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்...
சைஃப் அலி கானை குத்தியவன் இந்தியனே இல்லை... விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்...
Salem Power Shutdown: சேலம் மக்களே நாளை (20.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
சேலம் மக்களே நாளை (20.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! எவ்வளவு நாட்கள் தெரியுமா?
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! எவ்வளவு நாட்கள் தெரியுமா?
TNPSC OMR Sheet: தேர்வர்களே... ஓஎம்ஆர் விடைத்தாளில் புது மாற்றம்: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
TNPSC OMR Sheet: தேர்வர்களே... ஓஎம்ஆர் விடைத்தாளில் புது மாற்றம்: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
Embed widget