விழுப்புரத்தில் தனியார் பள்ளி வாகனங்களின் தயார்நிலை குறித்து ஆட்சியர் பழனி நேரில் ஆய்வு
தனியார் பள்ளி வாகனங்களில் தயார்நிலை குறித்து மாவட்ட ஆட்சியர் பழனி நேரில் ஆய்வு...முதற்கட்டமாக 286 வாகனங்கள் ஆய்வு
விழுப்புரத்தில் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி வாகனங்களில் தயார்நிலை குறித்து மாவட்ட ஆட்சியர் பழனி நேரில் ஆய்வு செய்தார்.
கோடை விடுமுறை முடிந்து ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 122 தனியார் பள்ளிகளுக்கு சொந்தமான வேன் மற்றும் பேருந்துகளை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பள்ளி மாணவ, மாணவிகள் பயணம் செய்யக்கூடிய வேன் மற்றும் பேருந்துகளில் தீ தடுப்பு கருவிகள். முதலுதவி பெட்டிகள். கண்காணிப்பு கேமரா. அவசரகால வழி உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளதா எனவும் மேலும் ஓட்டுநர்களுக்கு உடல் ஆரோக்கியம் மற்றும் கண் பரிசோதனை மற்றும் ஆபத்து காலங்களில் நடந்து கொள்வதன் முறைகள் குறித்தும ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து வாகன ஓட்டுநர்களுக்கு கண் பரிசோதனையும் தீ தடுப்பு கருவிகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி:
விழுப்புரத்தில் இருக்கக்கூடிய 122 தனியார் பள்ளிகளுடைய வாகனங்களுடைய தன்மை சரியாக உள்ளதா என இன்றைக்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தை பொருத்தவரை 122 தனியார் பள்ளிகள் உள்ளன இவற்றில் 486 வாகனங்கள் உள்ளன. இவற்றில் முதற்கட்டமாக இன்றைக்கு 260 வாகனங்கள் ஆய்வு செய்யப்படுகிறது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் 17 உள்ளது அவற்றையெல்லாம் முழுமையாக செய்யப்பட்ட வாகனங்களை மட்டுமே அனுமதி அளிக்கப்படும். பேருந்து ஓட்டுனர்களுக்கு கண் பரிசோதனை உள்ளிட்ட சோதனைகளையும் செய்யப்பட்டுள்ளது. ஆட்டோக்களில் குறிப்பிட்ட அளவு மாணவர் ஏற்ற வேண்டும் என வழிகாட்டுதல் உள்ளது அதை முறையாக பின்பற்ற வேண்டும் இதனை கண்காணிக்க ஆர்டிஓ மூலமாக வாகன தணிக்கை செய்யப்படும் என கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்