மேலும் அறிய
கடலூரில் வேட்பாளர் பட்டியலில் இடம் இல்லாததால் அதிருப்தி - திமுக அலுவலகம் முன் தொண்டர்கள் திரண்டதால் பரபரப்பு
அய்யப்பன் சீட்டுக்காக கட்சி மாறி தற்போது அதிமுகவினரின் வாக்குகளைப் பெற்று சட்டமன்ற உறுப்பினராக உள்ளார் .இன்னமும் அதிமுகவின் வலது கரமாக செயல்பட்டு வருவதாக திமுக நிர்வாகிகள் குற்றம் சாட்டினர்.

அதிருப்தியில் கழக அலுவலகம் முன்பு திரண்ட திமுகவினர்
தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது, அதன்படி கடலூர் மாவட்டத்தில் கடலூர் மாநகராட்சி, நெல்லிக்குப்பம், பண்ருட்டி, சிதம்பரம், விருந்தாசலம், வடலூர், திட்டக்குடி ஆகிய 6 நகராட்சிகள், அண்ணாமலைநகர், காட்டுமன்னார்கோவில், பரங்கிப்பேட்டை குறிஞ்சிப்பாடி, புவனகிரி, கங்கை கொண்டான், பெண்ணாடம், ஸ்ரீஷ்ணம், சேத்தியாததோப்பு, லால்பேட்டை, மங்கலம்பேட்டை, தொரப்பாடி, மேல்பட்டாம்பாக்கம், கிள்ளை ஆகிய 14 பேரூராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் அனைத்து கட்சியினரும் கூட்டணி கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வேட்பாளர் பட்டியல்களை அறிவித்த வண்ணம் உள்ளனர். அதே போல் திமுக சார்பிலும் இது வரை நான்கு பாகங்களாக திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது.

அதன்படி கடலூர் மாநகராட்சியில் திமுக சார்பில் போட்டியிடும் 45 வார்டுகளை உள்ளடக்கிய நகர மன்ற உறுப்பினர்களுக்கான உத்தேச பட்டியல் நேற்று மாலை வெளியானது. இந்த நிலையில் திமுக சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் பணம் பெற்றுக் கொண்டு அவர்களது ஆதரவாளர்களுக்கும் கட்சிப் பணி செய்யாத நபர்களுக்கும் மாற்று கட்சியில் இருந்து புதிதாக கட்சியில் இணைந்து உள்ள நபர்களுக்கும் சீட் வழங்கி இருப்பதாகவும் குற்றம் சாட்டி கடலூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி இல்லத்தின் முன்பு திமுக வினர் குவிந்தனர் அவரது இல்லத்தின் எதிரே கூச்சலிட்ட நிலையில் கடலூர் பாரதி சாலையில் உள்ள திமுக நகர அலுவலகம் முன்பு திமுகவின் சீட்டு வழங்குவதாக வேட்புமனு தாக்கல் செய்த இருபத்தி ஒன்பதாவது வார்டு மற்றும் 5வது வார்டு பிரதிநிதிகள் திரண்டு அவர்களது ஆதங்கத்தை வெளிபடுத்தினர்.

திமுகவின் உத்தேச பட்டியல் வெளியான நிலையில் திமுகவின் உள்கட்சி விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது கடல் சட்டமன்ற உறுப்பினர் அவரது ஆதரவாளர்களுக்கும் கடலூர் நகர செயலாளர் கேஸ் ராஜாவின் ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் போட்டி நிகழ்வு நிலவி வரும் சூழ்நிலையில் எம்எல்ஏவின் ஆதரவாளர்களுக்கு பணம் பெற்றுக்கொண்டு சீட்டு வழங்குவதாக நேற்று முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு 45வது வார்டு சேர்ந்த வெங்கடேசன் புகார் மனு அளித்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த 9 ஆண்டுகளாக அதிமுகவில் அங்கம் வகித்த திமுக சட்டமன்ற உறுப்பினருக்கு அய்யப்பன் சீட்டுக்காக கட்சி மாறி தற்போது அதிமுகவினரின் வாக்குகளைப் பெற்று சட்டமன்ற உறுப்பினராக உள்ளார் எனவும் இன்னமும் அதிமுகவின் வலது கரமாக செயல்பட்டு வருவதாகவும் திமுக நிர்வாகிகள் குற்றம் சாட்டினர்.இந்த நிலையில் கடலூர் மாநகராட்சியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படாத நிலையில் நகர செயலாளர் ராஜாவின் மனைவி நேற்று முன்தினம் மனுத்தாக்கல் செய்தார். இது கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
பட்ஜெட் 2025
பட்ஜெட் 2025
பட்ஜெட் 2025
பட்ஜெட் 2025
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion