watch video: கடலூரில் கபடி விளையாடிய போது உயிரிழந்த வீரர் - அதிர்ச்சி வீடியோ
kabaddi Player Death: கபடி விளையாடும் போது உயிரிழந்த கபடி வீரர். விளையாட்டு அரங்கிலே உயிரிழக்கும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
கடலூரில் கபடி விளையாட்டின்போது வீரர் ஒருவர் மயக்கம் அடைந்து மரணமடைந்த சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. எதிரணி வீரரை மைதானத்தில் எதிர்கொண்டு திரும்பிய கபடி வீரரை எதிரணியை சேர்ந்த வீரர் தடுக்கும் போது மைதானத்தில் விழுந்து சம்பவ இடத்திலேயே இதய துடிப்பு நின்று உயிரிழந்துவிட்டார்.
கடலூர் மாவட்டம் காடாம்புலீயூர் அடுத்த புரங்கணி கிராமத்தை சேர்ந்தவர் கபடி வீரர் விமல்ராஜ் (22). இவர் சேலம் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மணாடிகுப்பம் பகுதியில் மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்றது.
இதில் புரங்கணி கிராமத்தை சேர்ந்த முரட்டுகாளை அணியை சேர்ந்த கபடி வீரர்கள் போட்டியில் பங்கேற்றுள்ளனர். இதில் விமல்ராஜ் அணியினர் கபடி போட்டிக்கு களம் இறங்கி விளையாடியுள்ளனர். இதில் விமல்ராஜ் வீரர்களுடன் களத்தில் இறங்கி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவர் வீரர்களை எதிர்கொண்டு திரும்பியபோது, அவர் எதிர் தரப்பை சேர்ந்த கபடி வீரர் தடுக்க முற்படுகிறார். அந்த சமயத்தில் கீழே விழுந்த விமல்ராஜ் சற்று நேரத்தில் மைதானத்திலேயே மயங்கி விழுகிறார். மயங்கி விழுந்த அவர், இதய துடிப்பு நின்று சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தக் காட்சியை அங்குள்ளவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். இதில் அவர் கபடி போட்டியில் ஒருவரை பிடிக்க முயன்று பின்னர் கிழே விழுந்து உயிரிழக்கும் காட்சி பதிவாகியுள்ளது.
வீடியோ :
View this post on Instagram
முன்னதாக விமல்ராஜை மீட்டு பண்ருட்டி மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பார்த்த மருத்துவர்கள் இவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார் . அதனை தொடர்நது விமல்ராஜின் உடல் விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லுரியில் உடற் கூறாய்வு பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து காடாம்புலீயூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்த வருகின்றனர்.
மாணவர் கபடி விளையாடிக் கொண்டிருந்த போது மைதானத்தில் இதய துடிப்பு நின்று உயிரிழந்ததை காவல் துறையினர் உறுதி செய்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்