(Source: ECI/ABP News/ABP Majha)
சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை
சூரியமூர்த்திக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசிடம் இருந்து ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவு
சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகில் உள்ள பெரியகண்ணாடி காலனியைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி என்பவரின் மகன் சூரியமூர்த்தி (25), டிப்ளமோ படித்து விட்டு கூலி வேலை செய்து வந்தார். இந்த நிலையில் இவர், 10 ஆம் வகுப்பு படித்து இருந்த 17 வயது சிறுமியை காதலிப்பதாக சில மாதங்களாக கூறி வந்து உள்ளார். பின்னர் இதன் காரணமாக 17-3-2020 அன்று அந்த சிறுமியை பெரியகண்ணடியில் இருந்து பெற்றோருக்கு தெரியாமல் திருச்சிக்கு கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. அதன் பின்னர், அந்த சிறுமியை தம்பிப்பேட்டையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு அழைத்துச் சென்று அங்கு அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தாதாக கூறப்படுகிறது.
பின்னர் இந்த சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் சார்பில் நெய்வேலி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர். பின்னர் சிறுமியின் பெற்றோர்கள் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நெய்வேலி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விஷ்ணு பிரியா மற்றும் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து சூரியமூர்த்தியை கைது செய்தனர்.அதன் பிறகு இந்த வழக்கின் விசாரணை கடந்த சில மாதங்களாக கடலூர் போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் நேற்று நீதிபதி எம்.எழிலரசி தீர்ப்பு கூறினார். அதில், சூரியமூர்த்திக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இதனை அடுத்து, அவர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசிடம் இருந்து ரூ.5 லட்சம் பெற்று மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் 30 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டதாக அரசு தரப்பு வழக்கறிஞர் எஸ். கலாசெல்வி கூறினார்.
இது போன்று சிறுமியின் வாழ்க்கையை எந்த குற்ற உணர்வும் இல்லாமல் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களுக்கு மேலும் கடுமையான தண்டனைகளை வழங்க வேண்டும் எனவும், அப்படி வழங்கினால் தான் இனி வரும் காலங்களில் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் முன் பயம் வரும் என பெற்றோர்கள், பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.