மேலும் அறிய

செஞ்சி பகுதியில் தீடீர் ஆய்வு செய்த கலெக்டர் பழனி... அதிகாரிகள் விரைந்து செயல்பட அறிவுறுத்தல்

விழுப்புரம் : செஞ்சி பகுதியில் தீடீர் ஆய்வு செய்த கலெக்டர் பழனி அதிகாரிகள் விரைந்து செயல்பட அறிவுறுத்தியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஒட்டம்பட்டு மற்றும் அணையேரி ஆகிய ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர்  டாக்டர் சி.பழனி, நேரில் தீடீர் ஆய்வு செய்தார்.

மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவிக்கையில், செஞ்சி ஊராட்சி ஒன்றியம், ஒட்டம்பட்டு ஊராட்சியில், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை பார்வையிட்டு, நாள்தோறும் சிகிச்சை பெற வரும் புறநோயாளிகளின் சிகிச்சை விபரம் குறித்து கேட்டறிந்ததுடன்,பிரசவகால கண்காணிப்பு பிரிவு, மருந்தகம் இருப்பறை, உள்நோயாளிகள் பிரிவு, யுனானி பிரிவு, ஆய்வகம் மற்றும் கர்ப்பிணிப்பெண்கள் பரிசோதனை பிரிவு ஆகியவற்றினை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், யானைக்கால் வியாதியினால் பாதிக்கப்பட்ட ஒரு நபருக்கு பக்கெட், நாற்காலி மற்றும் துண்டு ஆகியன வழங்கப்பட்டது.

தொடர்ந்து, ஒட்டம்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், 15-வது ஊராட்சி ஒன்றிய நிதித்திட்டத்தின்கீழ், ரூ.82,000ஃ- மதிப்பீட்டில் சமையலறைக்கூடம் சீரமைக்கப்பட்டு வருவதையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ், ரூ.5.75 இலட்சம் மதிப்பீட்டில் மாணவியர்களுக்கான கழிவறை மற்றும் ரூ.2.00 இலட்சம் மதிப்பீட்டில் ஆசிரியர்களுக்கான கழிவறை கட்டப்பட்டு வருகிறது. தரமான முறையில் பணிகளை மேற்கொண்டு விரைந்து முடித்திட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

தொடர்ந்து, பள்ளிக்குழந்தைகளுடன் கலந்துரையாடி மாணவர்களின் கற்றல் திறன் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, அணையேரி ஊராட்சியில், 15-வது ஊராட்சி நிதியிலிருந்து ரூ.30.00 இலட்சம் மதிப்பீட்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டு வரும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன், மேலும், இவ்வூராட்சியில் தற்பொழுதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளின் விபரம் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்ததில், 2021- 2022 ஆம் ஆண்டிற்கு 40 பணிகள் எடுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

இப்பகுதி மக்கள் சாலை வசதி, சிமெண்ட் சாலை, மதகு சீரமைத்தல் போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்திட வேண்டி வழங்கிய கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு துறை சார்ந்த அலுவலர்களிடம் கோரிக்கை மனுக்கள் வழங்கப்பட்டு, விரைந்து தீர்வு காண அறிவுறுத்தப்பட்டது. அணையேரி ஊராட்சியில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ், ரூ.11.77 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுவரும் நியாய விலைக் கட்டிடத்தினை பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதே பகுதியில், முள்ளுர் - புதூர் ஏரியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ், ரூ.11.97 இலட்சம் மதிப்பீட்டில் மதகு சீரமைப்பு மற்றும் தூர்வாரும் பணியினை பார்வையிட்டு, மழைநீரினை அதிகளவில் சேமித்திடும் வகையில் பணிகளை மேற்கொள்வதோடு, பணியினை விரைந்து முடித்திட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அணையேரி ஊராட்சியில் செயல்பட்டு வரும் நியாய விலை கடையினை பார்வையிட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களான அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களின் தரம் மட்டும் எடை அளவு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின்கீழ், இயங்கி வரும் அங்கன்வாடி மையத்தினை பார்வையிட்டு, உணவருந்திக் கொண்டிருந்த குழந்தைகளிடம் முட்டை வழங்கப்பட்டதா எனக் கேட்டறிந்ததுடன், அங்கன்வாடி மையத்தின் மேற்கூரையினை உடனடியாக சீரமைத்திடவும். பிரதம மந்திரி குடியிருப்பு வீடு கட்டும் திட்டத்தின்கீழ், ரூ.2.40 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் குடியிருப்பு என மொத்தம் ஒட்டம்பட்டு மற்றும் அணையேரி ஆகிய ஊராட்சிகளில் ரூ.64.71 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வளர்ச்சித் திட்டப்பணிகள் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்களை பெற்றுகொண்டு, மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் உள்ள வீடுகளில் கழிவுநீர் தேங்காத வண்ணம் ஒவ்வொரு தனி வீட்டிற்கும் உறிஞ்சு குழி ஒன்று அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget