மேலும் அறிய
Advertisement
Amma Mini Clinic: மூடப்படுகிறதா அம்மா மினி க்ளினிக்குகள் - இனி பணிக்கு வரவேண்டாம் என மெசேஜ் வந்ததால் மருத்துவர்கள் போராட்டம்
அம்மா மினி கிளினிக்குகளில் பணி புரியும் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் மார்ச் மாதம் 31 ஆம் தேதி வரை பணிக்கு செல்லலாம் பின்னர் அவர்களுக்கு மாற்று வேலை ஏற்பாடு செய்யப்படும் என அறிவித்து இருந்தது
இனி பணிக்கு வர வேண்டாம் என கைபேசிக்கு குறுந்தகவல், அம்மா மினி க்ளினிக் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் கடலூர் பொது சுகாதாரத் துறை துனை இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம். கடந்த அதிமுக ஆட்சியில் ஏழை, எளிய மக்கள் கிராமப்புறங்களிலும், நகரப் பகுதிகளிலும், தாங்கள் குடியிருக்கும் பகுதிக்கு உடனடியாக அருகிலேயே சிகிச்சை பெறுவதற்காக அம்மா மினி க்ளினிக் திட்டம் துவங்கப்பட்டது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள அம்மா மினி க்ளினிக்குகள் மூடப்படுகின்றன, என தற்பொழுது தமிழக அரசு அறிவித்தது.
மேலும், 2,000 மினி க்ளினிக்குகளை மூட சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து உள்ளது.
அம்மா மினி க்ளினிக்குகள் தற்காலிகமாகவே தொடங்கப்பட்டன. அதில் பணியாற்றியவர்கள் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு உள்ளனர் என கடந்த ஐனவரி 4 ஆம் தேதி தமிழக மருத்துவதுறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார். அதன் அடிப்படையில் தமிழகத்தில் 2000 அம்மா மினி க்ளினிக்குகள் சமிபத்தில் மூடப்பட்டன. பின்னர் அதில் பணியாற்றிய மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மாற்றுப் பணி வழங்குவதாக சுகாதாரத் துறை அறிவித்து இருந்தது. இதன்படி கடலூர் மாவட்டத்தில் உள்ள அம்மா மினி க்ளினிக்கில் 58 மருத்துவர் மற்றும் 66 பணியாளர்கள் பணி செய்து வந்து உள்ளனர்.
இந்த நிலையில் கடலூர் மாவட்ட பொது சுகாதாராதுறை இனை இயக்குநர் அவர்கள் மூலம் 58 மருத்துவர்கள் மற்றும் 66 பணியாளர்களுக்கு இனி உங்களுக்கு பணி இல்லை நீங்கள் வேலை செய்ய வர வேண்டாம் என குறுந்தகவல் அனுப்பட்டு உள்ளது இதனால் மன வேதனை அடைந்த மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் கடலூர் பொது சுகாதாரதுறை இனை இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். மேலும் சிறுது நேரத்திற்கு பிறகு இனை இயக்குநரை சந்தித்து பேசினர் அப்போது அவர் கூறுகையில் தமிழக அரசு உங்களை பணி நீக்கம் செய்து உள்ளது, இது குறித்து எனக்கு எதுவும் தெரியிவில்லை என கூறியாதால், மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் மீண்டும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
பின்னர் அவர்கள் கூறுகையில் தமிழக அரசு அம்மா மினி க்ளினிக்குகளில் பணி புரியும் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் மார்ச் மாதம் 31 ஆம் தேதி வரை பணிக்கு செல்லலாம் பின்னர் அவர்களுக்கு மாற்று வேலை ஏற்பாடு செய்யப்படும் என அறிவித்து இருந்தது. ஆனால் எங்களை தற்பொழுது திடீர் என்று வேலையைவிட்டு நிறுத்துவது எந்த விதத்தில் நியாயம் என கேள்வி எழுப்பினர். கடலூரில் மினி க்ளினிக்கில் பணி புரியும் மருத்துவர்கள் மற்றும் பல் நோக்கு பணியாளர்கள் பொது சுகாதாரத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பபட்டது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
க்ரைம்
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion