மேலும் அறிய
சித்திரை முழுநிலவு மாநாடு; பாமகவிற்கு யாரும் எதிரி கிடையாது.... பக்கா பிளான் போடும் அன்புமணி
சித்திரை முழுநிலவு இளைஞர் பெருவிழா மாநாட்டில் பட்டியலின சமூக தலைவர்கள் கலந்து கொள்ள வேண்டும்.

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் - தலைவர் அன்புமணி ராமதாஸ்
Source : ABP NADU
விழுப்புரம்: சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி ஆட்சி தான் அமையும் பாமகவிற்கு யாரும் எதிரி கிடையாது, கும்பாபிஷேகம் போல் சித்திரை முழுநிலவு மாநாடு நடத்தப்படுமென்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
வன்னியர் சங்கம் சார்பில் மாமல்லபுரத்தில் சித்திரை முழுநிலவு இளைஞர் பெருவிழா மாநாடு மே 11 ஆம் தேதி நடைபெறுவது தொடர்பான ஆலோசனை கூட்டம் திண்டிவனத்திலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் கெளரவ தலைவர் ஜி கே மணி, வழக்கறிஞர் பாலு பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அப்போது ஆலோசனை கூட்டத்தில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி ஆட்சி தான் அமையும் பிரச்சனைகள் இல்லாமல் மாநாட்டினை நடத்த வேண்டும் பாமகவிற்கு யாரும் எதிரி கிடையாது பாமக நிறுவனர் ராமதாஸ் அணைத்து சமுதாயத்திற்கும் சமமானவர் பிராமனவர் சமுதாயத்திலிருந்து பட்டியலின சமூகம் வரை அனைவருக்கும் சமமானவராக உள்ளதாக தெரிவித்தார். சாதிவாரி கணக்கெடுப்பு இடஒதுக்கீடு குறித்த பல்வேறு தீர்மானங்கள் இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட உள்ளதாகவும், 12 ஆண்டுகளுக்கு பிறகு மாநாடு நடைபெறுவதால் கோவில் கும்பாபிஷேகம் போல் நடத்தப்பட வேண்டுமென அன்பு மணி வலியுறுத்தினார்.
சித்திரை முழுநிலவு இளைஞர் பெருவிழா மாநாட்டில் பட்டியலின சமூக தலைவர்கள் கலந்து கொள்ள வேண்டும்!
ஆலோசனை கூட்டத்தில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ்...., அனைத்து மக்களுக்காக பாடு படுகின்ற கட்சியாக பாமக உள்ளதாகவும் 18 சதவீத இடஒதுக்கீட்டை 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினோம் இப்போதுள்ள பட்டியலின தலைவர்களை கேட்டுக்கொள்வது நீங்களும் மாநாட்டில் கலந்துக்கொள்ளுங்கள் பட்டியல் சமூக தலைவர்கள் மாநாடு நடத்தினால் பாமக, வன்னியர் சங்க நிர்வாகிகள் கலந்துக்கொள்வார்கள் என தெரிவித்தார். அரசும், காவல்துறையும் வழிகாட்டுதலின் பேரில் இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி காவல்துறையும், அரசும் பாராட்டும் அளவில் மாநாடு நடைபெறும் என்றும் அண்ணா சொன்னது போல் கடமை, கன்னியம், கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் .
மாநாட்டிற்கு வரும் பட்டியல் சமூகத்தினரை வாழ்த்து சொல்லி அனுப்புங்கள் என கூறினார். தமிழ்நாட்டு மக்களின் பிரச்சினைகளை அலசி ஆராய்ந்து பேசி வருவதாகவும் எல்லா சமூகத்தினருக்கும் பாடுபடும் ஊழியனாக தான் உள்ளதாகவும் 45 ஆண்டுகளாக போராடி வருவதாக தெரிவித்தார். 10.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கு மட்டுமல்ல, சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவு கொடுக்க கேட்டுக்கொள்வதாகவும் தமிழ்நாட்டில் 364 சாதிகள் உள்ளது. அத்தனை மக்களுக்காகவும் என்னை போல் பாடுபட்ட தலைவரை சொல்லுங்கள் ஆட்சியில் அமராமல் இந்த மக்களுக்கு, அவர்களின் பிரச்சினைகளுக்கு பாடுபட்டவர்களை சொல்ல முடியுமா இந்த மாநாடு 364 சமுதாயத்திற்கும் ஒரு செய்தியை சொல்லும்.
அவர்களுக்கு அரனாக இருக்கும் என்றும் வன்னியர் மாநாட்டிற்கு நாம் எப்படி செல்வது என யோசிக்காதீர்கள், முடிந்த அளவு நீங்களும் வாருங்கள். 364 சமுதாய மக்களுக்கும் அழைப்பு விடுக்கிறேன். நீங்களும் கலந்துக்கொள்ளுங்கள். பல சமுதாய தலைவர்களை நாங்கள் அழைப்பதுண்டு. 1998-ல் மாநாட்டுக்கு ஜெயலலிதா வாழ்த்து செய்தி அனுப்பியிருந்ததாக கூறினார். அரசுக்கும், காவல்துறைக்கும் வேண்டுகோளாக வைப்பது மாநாடு நடத்த உங்களின் ஒத்துழைப்பு தேவை என்றும் இப்படி ஒரு மாநாடு நடைபெற்றதில்லை என கூறும் அளவுக்கு நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
சென்னை
ஐபிஎல்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion