புதுச்சேரி: போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்ட ஆம்புலன்ஸ் - லாவகமாக வாகனத்தை இயக்கிய ஓட்டுநர்
விபத்தில் காயமடைந்தவரை மீட்டு செல்லும்போது சாலை தடுப்புச்சுவரை லாவகமாக கடந்து மருத்துவமனையில் சேர்த்த ஆம்புலன்ஸ் டிரைவருக்கு பாராட்டுகள் குவிகிறது.
விபத்தில் காயமடைந்த நபரை மீட்டு செல்லும் போது சிக்னலில் சிக்கிக் கொண்ட 108 ஆம்புலன்ஸ், வாகனம் சாலை தடுப்பு சுவரை இலாவகமாக கடந்து மருத்துவ மனையில் நோயாளி சேர்த்து ஆம்புலன்ஸ் டிரைவருக்கு சமூக வலைதளத்தில் அவர்களுக்கு பாராட்டுகள் குவிகிறது. கடலூர் சாலையில் பகுதியில் நடந்த விபத்தில் காயமடைந்த ஒரு நபருக்கு அப்பகுதியில் உள்ள மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
Watch Annaatthe Trailer: வந்தாரு காளையன்.. மரண மாஸ்.. வெளியானது அண்ணாத்த ட்ரெய்லர்..!
பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்ல மருத்துவர்கள் பரிந்துரை செய்தன. இதையடுத்து அந்த நபரை மேல் சிகிச்சைக்காக ஏற்றிக்கொண்டு 108 ஆம்புலன்ஸ் புதுச்சேரி நோக்கி வேகமாக வந்தது 100 அடி சாலை இந்திரா காந்தி சதுக்கம் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மேம்பாலம் இறுதி வரை சாலையின் ஒரு பக்கம் வாகனங்கள் பல மணி நேரம் அணிவகுத்து நின்றன.
இந்த போக்குவரத்து நெரிசலில் மேல் சிகிச்சைக்காக நோயாளியை அழைத்துச் சென்ற போது 108 ஆம்புலன்ஸ் சிக்கிக் கொண்டது. ஆம்புலன்சில் இருப்பவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற நிலையில் 108 ஆம்புலன்ஸ் டிரைவர் சாலையின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள தடுப்பில் ஏறி மறுபக்கம் வழியாக செல்ல திட்டமிட்டார். அதன்படி அங்கிருந்தவர்கள் அவனுடன் சக்கரம் ஏறும் வகையில் சிறு சிறு கற்களை வைத்து தடுப்புச் சுவரை ஒட்டிய வாறு வைத்தனர்.
Mayiladuthurai: எனக்கு விடுப்பு கொடுத்துருங்க! திமுகவினரால் கடிதம் எழுதிய அதிகாரி
அதன் மீது ஆம்புலன்ஸ் வெற்றி லாவகமாக மறு பக்கம் கடந்து மருத்துவமனைக்கு சென்றது. பின்னர் காயமடைந்த அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டால் இந்த பதிவானது தற்பொழுது பரவி வருவதால் ஆம்புலன்ஸ் டிரைவருக்கு சமூகவலைதளங்களில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்