மேலும் அறிய

இபிஎஸ் பாதுகாப்பு வாகனத்தில் சிக்கிய அதிமுக  தொண்டரின் கால் விரல் துண்டாகி விபத்து

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டையில் இபிஎஸ் பாதுகாப்பு வாகனத்தில் சிக்கிய அதிமுக  தொண்டரின் காலில் இரண்டு விரல் துண்டிக்கப்பட்டது

உளுந்தூர்பேட்டையில் எதிர்க்கட்சித் தலைவர் பழனிச்சாமியின் பாதுகாப்பு வாகனத்தில் சிக்கிய அதிமுக  தொண்டரின் கால் இரண்டு விரல் துண்டிக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சியில் உள்ள நரிக்குறவர்கள் குடியிருப்பில் அதிமுக சார்பில் மாவட்ட செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இரா.குமரகுரு ஏற்பாட்டில் 20 குடும்பத்தாருக்கு வீடு கட்டப்பட்டு இன்று திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி திறப்பு விழாவிற்கு வருகை புரிந்தார். அப்போது அவரை வரவேற்பதற்காக திருக்கோவிலூர் ஒன்றியம் சோழபாண்டிபுரம் கிராமத்தைச் சேர்ந்த அதிமுக தொண்டர் மாயவன், பழனிசாமிக்கு கை குலுக்க முயற்சித்த போது அவருடைய வாகனம் முந்தி சென்று விட்டது. அவருக்குப் பின்னால் வந்த சிஆர்பிஎப் பாதுகாப்பு வாகன டயரில் மாயவன் மாட்டிக் கொண்டார். இதில் டயரில் மாட்டிய அவரது இடது கால் இரண்டு விரல்கள் துண்டிக்கப்பட்டது. உடனடியாக கட்சி தொண்டர்கள் அவரை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு இருசக்கர வாகனத்தில் தூக்கிச் சென்று அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகிறார். இதனால் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி பேசியதாவது:-

2023ம் ஆண்டின் சிறப்பான தொடக்கமாக இந்த நிகழ்ச்சியை பார்க்கிறேன். அ.தி.மு.க சார்பில் சிறப்பான வீடுகளை கட்டிக் கொடுத்த மாவட்ட செயலாளர் குமரகுருவை நான் பாராட்டுகிறேன். அனைவருக்கும் வீடு வேண்டும். உடுத்த உடை வேணும். சாப்பிட உணவு வேண்டும். இந்த மூன்றையும் வழங்கியவர் எம்.ஜி.ஆர். அதற்குப் பிறகு ஜெயலலிதா தொடர்ந்து பணியாற்றினார். ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்கிறோம். 20 நரிக்குறவர்களின் குடும்பங்களில் நாம் சிரிப்பை காண்கிறோம். இதுதான் அ.தி.மு.க.. இந்தியாவிலேயே உயர் கல்வி படிப்பதில் முதலிடம் தமிழ்நாடு. இதை உருவாக்கி காட்டியது அதிமுக. அரசு பொங்கல் தொகுப்பு என்கிற பெயரில் தொகுப்பு பொருட்களை தற்போது அறிவித்தார்கள்.

ஆனால் அதில் கரும்பை தவிர்த்து விட்டார்கள். கரும்பு தான் நமது பாரம்பரிய பழக்கம். ஆனால் கரும்பை கூட வழங்காமல் நிராகரித்து விட்டார்கள். ஒட்டு மொத்த விவசாயிகளின் கோரிக்கையை அ.தி.மு.க. ஏற்று போராட்டத்தினை அறிவித்தது. அதன்பின்னர்தான் தற்போது கரும்பையும் பொங்கல் தொகுப்பில் சேர்த்துள்ளனர். அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தான் பொங்கல் தொகுப்பு என்கிற திட்டம் கொண்டு வரப்பட்டது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ. 2500 அதிமுக ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்டது. அப்போது மு.க.ஸ்டாலின் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என அறிக்கை கொடுத்தார். ஆனால் தற்போது 1,000 ரூபாய் தான் வழங்குகிறார். கொரோனா காலத்தில் இருந்து மீண்டு வந்த மக்களுக்கு மு.க.ஸ்டாலின் ரூ.5000 வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன். என்றென்றும் ஏழை மக்களுக்கு அ.தி.மு.க. உறுதுணையாக இருக்கும் என எடப்பாடி பழனிசாமி பேசினார்.

என்ன செய்ய வேண்டும்? 

நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM MK Stalin:
CM MK Stalin: "35 ஆண்டுகால பிரச்சினைக்குத் தீர்வு! 10 ஆயிரம் குடும்பங்கள் பயன்" முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
Kasthuri:
Kasthuri: "நடிகை கஸ்தூரி மீது பாய்ந்தது வழக்கு" 4 பிரிவுகளில் FIR போட்ட போலீஸ்!
TN Rain Alert: உஷார்! நாளை 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - உங்க ஊரு வானிலை எப்படி?
TN Rain Alert: உஷார்! நாளை 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - உங்க ஊரு வானிலை எப்படி?
Amaran: இறுக்கமாகும் துப்பாக்கியின் பிடி! சிவகார்த்திகேயனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற அமரன்!
Amaran: இறுக்கமாகும் துப்பாக்கியின் பிடி! சிவகார்த்திகேயனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற அமரன்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Karur BJP Members Join DMK : தட்டித்தூக்கிய செந்தில் பாலாஜி ஷாக்கான அண்ணாமலை ஸ்டாலின் போடும் கணக்குPawan Kalyan Controversy Speech | ’’நிர்வாகம் சரியில்லை!’’பவன் கல்யாண் பகீர்! அதிரும் ஆந்திராTVK Vijay warning cadres | ”கட்சிக்குள் கருப்பு ஆடு”சாட்டையை சுழற்றும் விஜய் கலக்கத்தில் தவெகவினர்Rahul Gandhi slams Modi|’’மோடி BORE அடிக்கிறார்’’இறங்கி அடித்த ராகுல்! பாசமலர்களின் THUGLIFE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM MK Stalin:
CM MK Stalin: "35 ஆண்டுகால பிரச்சினைக்குத் தீர்வு! 10 ஆயிரம் குடும்பங்கள் பயன்" முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
Kasthuri:
Kasthuri: "நடிகை கஸ்தூரி மீது பாய்ந்தது வழக்கு" 4 பிரிவுகளில் FIR போட்ட போலீஸ்!
TN Rain Alert: உஷார்! நாளை 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - உங்க ஊரு வானிலை எப்படி?
TN Rain Alert: உஷார்! நாளை 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - உங்க ஊரு வானிலை எப்படி?
Amaran: இறுக்கமாகும் துப்பாக்கியின் பிடி! சிவகார்த்திகேயனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற அமரன்!
Amaran: இறுக்கமாகும் துப்பாக்கியின் பிடி! சிவகார்த்திகேயனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற அமரன்!
இந்தாண்டு பருவமழை தண்ணீர் எங்கே நிக்குதுன்னு பாக்குறேன் - ஆட்சியர் அதிரடி..!
இந்தாண்டு பருவமழை தண்ணீர் எங்கே நிக்குதுன்னு பாக்குறேன் - ஆட்சியர் அதிரடி..!
மாதம் ரூ.25 ஆயிரம் உதவித்தொகை; தொல்குடியினர்‌ புத்தாய்வு திட்டம்‌ அறிமுகம்- என்ன தகுதி?
மாதம் ரூ.25 ஆயிரம் உதவித்தொகை; தொல்குடியினர்‌ புத்தாய்வு திட்டம்‌ அறிமுகம்- என்ன தகுதி?
Breaking News LIVE 5th NOV 2024: 2026ம் ஆண்டு மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைக்கும் - மு.க.ஸ்டாலின் பேட்டி
Breaking News LIVE 5th NOV 2024: 2026ம் ஆண்டு மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைக்கும் - மு.க.ஸ்டாலின் பேட்டி
உலகமே எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது: முடிவு எப்போது ?
உலகமே எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது: முடிவு எப்போது ?
Embed widget