மேலும் அறிய

விழுப்புரத்தில் 2 வருடங்களுக்குப் பின் கோலாகலமாக நடந்த ஆற்று திருவிழா

விழுப்புரத்தில் 2 வருடங்களுக்குப் பின்னர் வெகு விமரிசையாக நடைபெற்ற ஆற்று திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் 24 இடங்களில் ஆற்று திருவிழா கோலாகல கொண்டாட்டப்பட்டது. மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்த தென்பெண்ணையாறு. பல்வேறு கோயில்களில் இருந்து வந்திருந்த சுவாமிகளுக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. 

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையின் நிறைவு விழாவாக தை மாதத்தின் 5ம் நாளன்று ஆற்று திருவிழா கொண்டாடப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. குறிப்பாக விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் மட்டுமே மிகப் பெரிய அளவில் கொண்டாடப்பட்டு வரும் இந்த ஆற்று திருவிழாவானது, விவசாயத்திற்கும், குடிநீருக்கும் ஜீவாதாரணமாக விளங்கி வரும் ஆறுகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி தை மாதத்தின் 5ஆம் நாளான இன்று விழுப்புரம் மாவட்டத்தில் ஆற்று திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள தென்பெண்ணையாறு, சங்கராபரணி ஆறு, மலட்டாறு, பம்பை ஆறு, வராக நதி ஆறு உள்ளிட்ட ஆறுகள் செல்லும் இடங்களில் எல்லாம் இந்த ஆற்று திருவிழாவை பொதுமக்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். 

விழுப்புரம் மாவட்டத்தில் ஆறுகள் செல்லும் இடங்களான சின்னக் கள்ளிப்பட்டு, பிடாகம், பில்லூர், அகரம் சித்தாமூர், அய்யூர் அகரம், அரகண்டநல்லூர், வீடூர், விக்கிரவாண்டி, குயிலாப்பாளையம் உள்ளிட்ட 24 இடங்களில் நடைபெற்று வரும் இந்த ஆற்று திருவிழாவில் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள கோயில்களில் இருந்தும் மாட்டு வண்டி, டிராக்டர்கள் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் ஆற்றுப் படுகைக்கு விநாயகர், முருகர், சிவன், பார்வதி, பெருமாள், காளி உள்ளிட்ட பல்வேறு சுவாமிகள் அழைத்து வரப்பட்டு அங்குள்ள ஆற்று நீரில் தீர்த்தவாரி செய்யும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இந்த ஆற்று திருவிழாவில் பல்வேறு ஊர்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் ஆறுகளுக்கு வந்திருந்து சுவாமிகளுக்கு செய்யப்பட்ட தீர்த்தவாரி நிகழ்ச்சிகளை தரிசனம் செய்து ஆற்று தண்ணீரில் விளையாடியும், ஆடிப்பாடியும் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ஆற்றில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கடைகளில் விற்கப்பட்ட விதவிதமான பொருட்களை வாங்கியும், ராட்சத ஊஞ்சல், ரங்கராட்டினம் உள்ளிட்ட பொழுதுப்போக்கு விளையாட்டுக்களில் ஈடுபட்டும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் உற்சாகத்துடன் ஆற்று திருவிழாவை கொண்டாடி வருகின்றனர்.

குறிப்பாக சின்னக் கள்ளிப்பட்டு, பிடாகம் ஆகிய இடங்களில் உள்ள தென்பெண்ணையாறுகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் மக்கள் கூட்டத்தால் தென்பெண்ணையாறு நிரம்பி வழிந்தது. விழுப்புரம் மாவட்டத்தில் ஆற்று திருவிழா நடைபெற்று வரும் 24 இடங்களிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

என்ன செய்ய வேண்டும்? 

நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget