அதிமுக ஆட்சிக்கு வந்தால் ரூ.5000 ரூபாய் ! களத்தில் இறங்கி அடிக்கும் சி.வி. சண்முகம்.... கலக்கத்தில் திமுக
இந்தி திணிப்பு எனக்கூறி மாநில மக்களை உணர்ச்சி பூர்வமாக தூண்டிவிட்டு, தேர்தலில் ஆதாயம் தேட முயற்சிக்குறது திமுக - சி.வி.சண்முகம்

இந்தி திணிப்பு எனக்கூறி மாநில மக்களை உணர்ச்சி பூர்வமாக தூண்டிவிட்டு, தேர்தலில் ஆதாயம் தேட முயற்சிக்குறது திமுக என விழுப்புரத்தில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
விழுப்புரம் அடுத்த அத்தியூர் திருவாதி கிராமத்தில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் பேசியதாவது: தேர்தலின் போது அதிமுக ஆட்சிக்கு வந்தால் 1500 ரூபாய் தருவோம் என கூறினோம், ஆறு சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என கூறினோம் நான்கு சிலிண்டரை பயன்படுத்தியிருந்தாலும் இரண்டு சிலிண்டரை கள்ள சந்தையில் விற்டிருக்கலாம். தேர்தலின் போது திமுக கொள்ளையடித்த பணத்தை எடுத்துக்கொண்டு வருவார்கள் ஓட்டுக்கு பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள் அது உங்கள் பணம் ஆனால் ஓட்டை இரட்டை இலைக்கு போடுங்கள். அதிமுகவுக்கு வாக்களித்தால் ஆயிரம் என்ன 2500 கொடுப்போம், ஏன் ஐயாயிரம் ரூபாய் கூட கொடுப்போம். இதனை என்னால் இப்போது சொல்ல முடியாது எங்கள் பொதுச் செயலாளரால் தான் சொல்ல முடியும். அதிமுக ஆட்சியில் நல்லதே நடக்கும். நம்பி ஓட்டு போடுங்கள் அதிமுகவினர் என்றும் ஏமாற்ற மாட்டார்கள்.
திமுகவும், பாஜகவும் சேர்ந்து நாடகம் நடத்துகிறார்கள்...
திமுகவும், பாஜகவும் சேர்ந்து நாடகம் நடத்துகிறார்கள். இருவரும் சேர்ந்து கள்ள உறவு இல்லை, நேரடியாக கூட்டணி வைத்துக் கொண்டுள்ள இயக்கம் திமுகவும், பாஜகவும். செந்தில் பாலாஜியை அமைச்சராக்கவும், உதயநிதியை துணை முதலமைச்சர் ஆக்கவும் மோடியையும், ஆளுநரையும் சென்று பார்ப்பார்கள். இப்போது பள்ளிக்கு நிதி தரவில்லையென கூறுகிறார்கள். மத்திய கல்வித் துறை அமைச்சர் திட்டத்துக்கு ஒத்துக்கொண்டு கையெழுத்து போட்டார்கள் என கூறியுள்ளார். உண்மையில் திமுக இந்தியை எதிர்கிறது என்றால் ஏன் புதிய கல்விக்கொள்கை சட்டத்தில் கையெழுத்திட போட்டீர்கள்?. நான் கல்வி அமைச்சராக இருந்தபோது பலமுறை மத்திய அரசிடம் இருந்து நவோதயா பள்ளியை திறக்க வேண்டும் என பலமுறை எங்களுக்கு அழுத்தம் கொடுத்தது, வற்புறுத்தியது. நவோதையா பள்ளியை திறக்கவில்லை என்றால் நிதியை தர மாட்டோம் என கூறினார்கள் ஆனால் கடைசிவரை ஜெயலலிதாவும், எடப்பாடி பழனிச்சாமியும் உறுதியாக இருந்து எந்த காலத்திலும் தமிழ்நாட்டில் இந்திய நுழைவிட மாட்டோம் என்றும், நவோதையா பள்ளியை அனுமதிக்க மாட்டோம் என தைரியமாக சொன்ன ஆட்சி அதிமுக ஆட்சி.
அதிமுக ஆட்சிக்கு வந்தால் ஐந்தாயிரம் ரூபாய் கொடுப்போம்
விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு பிரச்சினை மற்றும் பெண்களின் பாதுகாப்பு போன்றவற்றை திசை திருப்பவே மாநில மக்களை உணர்ச்சி பூர்வமாக தூண்டிவிட்டு திசை திருப்பப் பார்க்கிறார்கள். தேர்தலில் ஆதாயம் தேடுவதற்காக நடித்துக் கொண்டிருக்கிறார்கள். என்றைக்கெல்லாம் திமுக தமிழ், தமிழ் உரிமை என்று பேசுகிறதோ அன்றைக்கெல்லாம் மிகப்பெரிய நாடகத்தை நடத்த போகிறார்கள் என்று அர்த்தம். ஒவ்வொரு முறையும் தமிழ் உரிமை என்று பேசுகிற போதெல்லாம் தமிழ்நாட்டில் உரிமையை விட்டுக் கொடுக்கப் போகிறார்கள் என்று அர்த்தம்.
காலுக்கு செருப்பு முதல் லேப்டாப் வரை கொடுத்தவர் அம்மையார் ஜெயலலிதா அவர்கள், ஏன் மாணவர்களுக்கு லேப்டாப் தரவில்லை என்ற நியாயமான காரணத்தை முதல்வரால் சொல்ல முடியுமா? தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சியில் என்ன குறை கண்டுபிடித்தார் முதல்வர். ஏன் அந்த திட்டத்தை நிறுத்தினார். அதிமுக ஆட்சியில் 47 லட்சம் பேருக்கு ஓய்வூதியம் கொடுத்தோம் ஆனால் இன்றைக்கு 17 லட்சம் பேருக்கு தான் வழங்கப்படுகிறது. மாதம் ஆயிரம் எல்லோருக்கும் கொடுப்போம் என கூறினார்கள் தமிழ்நாட்டில் இரண்டரை கோடி குடும்ப அட்டை உள்ளது இவற்றில் ஒரு கோடியே 4 லட்சம் பேருக்கு தான் கொடுக்கப்படுகிறது அதுவும் முழுசாக வழங்கப்படவில்லை.
ஓட்டுக்கு பணம் கொடுத்தால் வாங்கிக்கொள்ளுங்கள் அது உங்கள் பணம். அதிமுக ஆட்சிக்கு வந்தால் ஐந்தாயிரம் ரூபாய் கொடுப்போம். அது குறித்து தலைமை முடிவு செய்யும். நம்பி ஓட்டு போடுங்கள் அதிமுக நன்மையே செய்யும். இவ்வாறு அவர் பேசினார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

