வீட்டில் தனியாக இருந்த மாணவியிடம் நூதன முறையில் பணம், நகை கொள்ளை
விழுப்புரம் அருகே வீட்டில் தனியாக இருந்த பள்ளி மாணவியிடம் நூதன முறையில் பேசி நகை- பணம் கொள்ளை.
![வீட்டில் தனியாக இருந்த மாணவியிடம் நூதன முறையில் பணம், நகை கொள்ளை A student who was alone at home in Villupuram was robbed of money and jewelery in a traditional manner TNN வீட்டில் தனியாக இருந்த மாணவியிடம் நூதன முறையில் பணம், நகை கொள்ளை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/27/bd716fd0c6723abd42b8eb3fb0e14b971672126958216194_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
விழுப்புரம் அருகே வீட்டில் தனியாக இருந்த பள்ளி மாணவியிடம் நூதன முறையில் பேசி நகை, பணத்தை கொள்ளையடித்த போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் அசோகபுரி கிராமத்தை சேர்ந்தவர் பிரபு (வயது 40), இவர் கட்டிட மேற்பார்வையாளராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி கட்டிடப்பணிக்கு சித்தாள் வேலையாக உடன் சென்று வருவார். இவருடைய மகன் நவீன்ராஜ் (16) தும்பூரில் உள்ள அரசு பள்ளியில் 11ம் வகுப்பும், நதியா 9-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். இந்த நிலையில் பிரபுவும், அவரது மனைவியும் வழக்கம் போல் கட்டிட வேலைக்கு சென்று விட்டனர்.
அவர்களது மகன் வெளியே விளையாட சென்றுவிட்டார். வீட்டில் நதியா மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது அங்கு ஹெல்மெட் அணிந்தபடி இருசக்கர வாகனத்தில் வந்து இறங்கிய நபர், பிரபு வீட்டிற்கு சென்று அங்கிருந்து நதியாவிடம் சீட்டுப்பணம் கட்டுவதற்காக ரூ.35 ஆயிரத்தை வாங்கிக்கொள்ளும்படி உனது பெற்றோர் அனுப்பியதாக அந்த நபர் கூறினார். இதை நம்பிய நதியா, வீட்டில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த பணம் இருக்கும் மஞ்சப்பையை அந்த நபரிடம் கொடுத்துள்ளார்.
அப்போது நதியாவிடம் அந்த நபர் நைசாக பேச்சு கொடுத்தபடி அவரது கவனத்தை திசை திருப்பி பீரோவில் இருந்த 9 பவுன் நகை மற்றும் அந்த மஞ்சப்பையில் இருந்த ரூ.50 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து அந்த நபர் தப்பிச்சென்றுவிட்டார். இதன் மொத்த மதிப்பு ரூ.3 லட்சத்து 50 ஆயிரமாகும். இதுகுறித்து பிரபு, கெடார் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை கொள்ளையடித்த நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
உங்கள் கண்முன்னே நடக்கும் அநியாயங்களைத் தட்டிக் கேட்கத் தயக்கமாக இருக்கிறதா? காலங்காலமாக மாறவே மாறாத ஒன்றை, நாம் என்ன மாற்றத்தைக் கொண்டு வந்துவிட முடியும் என்று மலைப்பாக இருக்கிறதா?
என்ன செய்ய வேண்டும்?
நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)