மரக்காணம் அருகே கடலோரம் நிறுத்தப்பட்டிருந்த ரூ.40 லட்சம் மதிப்பிலான விசை படகு கடலில் முழ்கியது.
விழுப்புரம்: மரக்காணம் அருகே கடலோரம் நிறுத்தப்பட்டிருந்த ரூ.40 லட்சம் மதிப்பிலான விசை படகு கடலில் முழ்கியது.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பம் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன், ஜெய்கணேஷ், சிவராமன், மூன்று பேர் இணைந்து கடந்த 4 மாதத்துக்கு முன்பு ரூ.40 லட்சம் மதிப்பிலான விசை படகு வாங்கியிருந்தார். இந்த படகில் மீன் பிடிப்பதற்காக 20 பேர் செல்லலாம்.
Cuddalore: பாழடைந்த வீடு.. காதலன் கண் முன்னே கடலூரில் நடந்த கொடூரம்
அதன்படி நேற்று முன்தினம் இரவு கடலில் மீன்பிடித்து விட்டு வந்த 20 பேர் இந்த விசை படகை கடலோரம் நிறுத்தியிருந்தனர். இன்று வழக்கம் போல் மீன்பிடிக்க செல்வதற்காக வந்த போது விசை படகு திடீரென மாயமாகி இருந்தது. சந்திரன் தலைமையிலான மீனவர்கள் நிறுத்தியிருந்த இந்த விசைபடகு அந்த பகுதியில் தேடியும் கிடைக்கவில்லை. 5௦௦ மீட்டர் தொலைவில் முழுவதும் முழ்கிய நிலையில் காணப்பட்டது.
இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது. இதனால் ஏராளமான மீனவர்கள் திரண்டனர். நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டிருந்த படகு எப்படி அறுந்து கடலில் மூழ்கியது என்று ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டனர். இதுபற்றி மரக்காணம் காவல் நிலையம் மற்றும் கடலோர காவல் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விழுப்புரம் : மரக்காணம் அடுத்த எக்கியர்குப்பத்தில் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகு கவிழ்ந்தது நீருக்குள் மூழ்கியது..@abpnadu pic.twitter.com/JkjOQBy78c
— SIVARANJITH (@Sivaranjithsiva) April 1, 2022
தகவல் அறிந்த போலீசார் மற்றும் கடலோர காவல் படையினர் அங்கு விரைந்தனர். மரக்காணம் பகுதியில் கடந்த சில நாட்களாக கடலின் சீற்றம் அதிகம் காணப்படுகிறது. எனவே விசை படகின் நங்கூரத்தின் கயிறு கடல் சீற்றத்தால் அறுந்து கடலில் கவிழ்ந்ததா? அல்லது முன்விரோதம் காரணமாக யாராவது கடத்த முற்பட்டார்களா என குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில மதங்களுக்கு முன் அனுமந்தைமீனவ குப்பத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்