மேலும் அறிய

திருவெண்ணெய்நல்லூர் : முருகன் கோயிலில் ரூ.69 ஆயிரத்து 800-க்கு ஏலம்போன எலுமிச்சம்பழம்..

விழுப்புரம் : திருவெண்ணெய்நல்லூர் முருகன் கோயிலில் ரூ.69ஆயிரத்து 800-க்கு ஏலம்போன எலுமிச்சம்பழம்..

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணை நல்லூர் அருகே 31.500 ரூபாய்க்கு ஏலம்போன முருகனின் வேலில் வைத்து படைத்த ஒரு எலுமிச்சை பழம்.. குழந்தை பாக்கியம் வேண்டி எலுமிச்சை பழத்தினை ஏலத்தில் எடுக்கும் பக்தர்கள்..

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகேயுள்ள ஒட்டனந்தல் கிராமத்தில் இரட்டைக்குன்றின் மீது ரத்தினவேல் முருகன் கோவில் உள்ளது. கருவறையில் வேல் மட்டுமே உள்ள இந்த கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த மாதம் 27-ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. விழாவின் இறுதி நாளான நேற்று முன்தினம் பங்கு உத்திர திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. பங்கு உத்திர திருவிழாவை முன்னிட்டு நடத்தப்படும் உற்சவ காலங்களில் தினமும் வேலில் சொருகப்படும் 9 நாள் எலுமிச்சம் பழங்களை இடும்பன்பூஜையில் வைத்து ஏலம்விடும் நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது.

இந்த எலுமிச்சை பழத்தினை உண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் எனவும், விரைவில் திருமணம் நடைபெறும் என நம்பப்படுகிறது. இதனால் ஏல நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பல மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் வருகைப்புரிந்தனர். இடும்பன் பூஜைக்கு பிறகு கோயிலின் தலைமை பூசாமி ஆணி பதித்த காலனியின் நின்று ஏலத்தை தொடங்கினார். அதனை தொடர்ந்து பூசாரிகள் ஏலத்தை நடத்தினர். குழந்தை பாக்கியம் தரக்கூடிய முதல் எலுமிச்சம்பழம் 31.500 ரூபாய்க்கு ஏலம்போனது. இதனை புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த பிரபாகரன், ராஜலட்சுமி தம்பதி ஏலத்தில் எடுத்தனர். இரண்டாவது நாள் பழம் 6.300 ரூபாய்க்கு ஏலம் போனது.

மூன்றாவது நாள் பழம் 10,100 ரூபாய்க்கு ஏலம்போனது. தொடர்ந்து திருமண பாக்கியம் தரக்கூடிய திருமங்கள எலுமிச்சை பழம் 5000 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது. எலுமிச்சை பழத்தை ஏலம் எடுத்தவர்கள் உடலில் தண்ணீரை ஊற்றுக்கொண்டு பூசாமி முன்பு மண்டியிட்டு புடவையின் முந்தானையில் எலுமிச்சை பழத்தினை பெற்றுக்கொள்வார்கள் மேலும் தம்பதியினருக்கு இடும்பன் படையலில் இருந்து ஒரு உருண்டை சோறு வழங்கப்படும். அதனை கோயிலில் அமர்ந்து சாப்பிட வேண்டும். தொடர்ந்து ஒன்பது எலுமிச்சை பழங்கள் மொத்தம் 69 ஆயிரத்து 800 ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. கடந்த ஆண்டு 69,100 ரூபாய்க்கு எலுமிச்சை பழங்கள் ஏலம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த ஆண்டு இந்த கோயிக்கு வந்து எலுமிச்சை பழம் ஏலம் எடுத்து சாப்பிட்டு குழந்தை பாக்கியம் பெற்றவர்கள் சாட்சி சொல்லும் நிகழ்வும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து இடும்பனுக்கு படைக்கப்பட்ட கருவாட்டு குழம்பு சோறு அனைவரும் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
”ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” - கடுப்பான முதல்வர் ஸ்டாலின் 
”ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” - கடுப்பான முதல்வர் ஸ்டாலின் 
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kongu Eswaran on Aadhav Arjuna : ’’ஜாக்கிரதை திருமா!ஆதவ்-ஆல் விசிக உடையும்’’எச்சரிக்கும்  ஈஸ்வரன்Ravichandran Ashwin on CSK : ’’வாழ்க்கை ஒரு வட்டம் மீண்டும் மஞ்சள் ஜெர்சி!’’உணர்ச்சிவசப்பட்ட அஸ்வின்IPL Auction 2025 | மீண்டும் இந்திரன் சந்திரன் Combo!CSK வில் RRR கேங்!தோனியின் மாஸ் ப்ளான் | AshwinIPL Auction 2025 | ராகுலின் STATS தெரியுமா?கோட்டைவிட்ட RCB - CSK..தட்டி தூக்கிய டெல்லி | KL Rahul

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
”ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” - கடுப்பான முதல்வர் ஸ்டாலின் 
”ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” - கடுப்பான முதல்வர் ஸ்டாலின் 
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
TNPSC: தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை- ’’இதையெல்லாம் செய்தால் விடைத்தாள் செல்லாதது ஆக்கப்படும்’’
TNPSC: தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை- ’’இதையெல்லாம் செய்தால் விடைத்தாள் செல்லாதது ஆக்கப்படும்’’
TRUST Exam: பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை: ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!
TRUST Exam: பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை: ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!
TVK Vijay: பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறி: அரசுக்கு ஐடியா கொடுக்கும் தவெக தலைவர் விஜய் 
TVK Vijay: பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறி: அரசுக்கு ஐடியா கொடுக்கும் தவெக தலைவர் விஜய் 
”நாடாளுமன்றத்திற்கு உள்ளே செல்லும் முன் மோடி செய்த சம்பவம்” அதிர்ச்சியில் எதிர்க்கட்சிகள்..!
”நாடாளுமன்றத்திற்கு உள்ளே செல்லும் முன் மோடி செய்த சம்பவம்” அதிர்ச்சியில் எதிர்க்கட்சிகள்..!
Embed widget