திண்டிவனத்தில் பாதாள சாக்கடை பள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்து - பயணிகள் அவதி
விழுப்புரம்: திண்டிவனத்தில் தரமற்ற முறையில் போடப்பட்ட பாதாள சாக்கடையில் விழுந்த பள்ளத்தில் அரசுப் பேருந்து சிக்கியதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் தர மற்ற முறையில் போடப்பட்ட பாதாள சாக்கடை பள்ளத்தில் அரசு பேருந்து சிக்கியது. திருப்பதியில் இருந்து திண்டிவனம் நோக்கி அரசு பேருந்து 50க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு திண்டிவனம் வந்து கொண்டிருந்தது. அரசு பேருந்தை திருத்தணி பகுதியைச் சேர்ந்த பரதன் என்பவர் ஓட்டிக் கொண்டு வந்தார்.
பாதாள சாக்கடையில் சிக்கிய பேருந்து:
ஞானவேல் நடத்துனராக உடன் வந்தார். பேருந்து திண்டிவனம், புது மசூதி வீதி அருகே வந்துக் கொண்டிருந்த போது தரமற்ற முறையில் போடப்பட்டிருந்த பாதாள சாக்கடை பள்ளத்தில் அரசு பேருந்து சிக்கி விபத்துக்குள்ளானது. ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் விபத்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர். இந்த விபத்தால் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
திண்டிவனத்தில் தரமற்ற முறையில் போடப்பட்ட பாதாள சாக்கடை பள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்துhttps://t.co/wupaoCzH82 | #TNgovt #Tindivanam #TNSTC pic.twitter.com/21twG21Ovb
— ABP Nadu (@abpnadu) September 30, 2023
விழுப்புரம் ஒருங்கிணைந்த மாவட்டத்தில், விழுப்புரம், திண்டிவனம், ஆகிய இரண்டு நகராட்சிகள் அமைந்துள்ளது. இதில் விழுப்புரமும், திண்டிவனமும் பழமை வாய்ந்த நகராட்சியாக உள்ளது. இதில் விழுப்புரம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் திண்டிவனம் நகராட்சிக்கு மட்டும் பாதாள சாக்கடை திட்டம் எப்போது வரும் என்று நீண்ட நாட்களாக மக்கள் மத்தியில் கேள்விக்குறியாக இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த அதிமுக ஆட்சியில் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தொடர் விபத்துகள்:
இந்த நிலையில் திண்டிவனம் நகராட்சி முழுவதும் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டம் சரிவர செய்யவில்லை எனவும் மேலும் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் மற்றும் பாதாள சாக்கடை குழாய்கள் புதைக்கப்பட்ட இடத்தில் தரமான சாலை போடாததால் அவ்வப்போது வாகனங்கள் பள்ளத்தில் சிக்கிக் கொள்ளும் நிலை ஏற்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களாகவே பள்ளிக்குச் செல்லும் வேன்கள் மட்டும் பேருந்துகள் பாதாள சாக்கடை சிகிச்சை கொண்டு விபத்துக்கு தொடர் கதையாக இருக்கிறது. எனவே துறை சார்ந்த அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்