மேலும் அறிய

ஜெய்பீம் பட பாணியில் இருளர் இன சிறுவன் மீது 4 பொய் வழக்குகள் பதிவு ?- காவல் துறை மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

’’மீட்கப்பட்ட இருளர் இன குடும்பத்திற்கு கள்ளக்குறிச்சி ஆட்சியர் 5000/- நிவாரணம், அரிசி, காய்கறி, வேட்டி, சேலை, பாய், தலையணை மற்றும் கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்டதற்கான சான்றிதழ் வழங்கி உள்ளார்’’

உளுந்தூர்பேட்டை அருகே  கொத்தடிமையாக இருளர் இன மக்கள்  வேலை பார்த்து வந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தைச் சேர்ந்த விழுப்புரம் பி.வி.ரமேஷ், வழக்கறிஞர் பிரிடா ஞானமணி ஆகியோர் கொத்தடிமையாக இருந்த இருளர் இனக் குடும்பத்தை மீட்க முயற்சி எடுத்தனர். மீட்கப்பட்ட இருளர் இன குடும்பத்திற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ரூபாய் 5000/- நிவாரணம், அரிசி, காய்கறி, வேட்டி, சேலை, பாய், தலையணை மற்றும் கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்டதற்கான சான்றிதழ் வழங்கியுள்ளார்.

ஜெய்பீம் பட பாணியில் இருளர் இன சிறுவன் மீது 4 பொய் வழக்குகள் பதிவு ?- காவல் துறை மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

இந்த நிலையில் இக்குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் தன் தாயிடம் கோபித்துக் கொண்டு ஆட்சியர் வழங்கிய ரூபாய் 5000 மற்றும் வீட்டில் இருந்த ரூ.2000 என மொத்தம் 7000 பணத்தோடு விருத்தாசலம் சென்று இரவில் சுற்றிக் கொண்டிருந்த போது கடந்த டிசம்பர் மாதம் 27ஆம் தேதி  அதிகாலை 2.45 மணிக்கு விருத்தாசலம் போலீசார் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர், காலையில் அச்சிறுவனை விசாரித்த விருத்தாசலம் காவல்நிலைய குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் மற்றும் குற்றப்பிரிவு காவலர்கள் அச்சிறுவன் இருளர் இனத்தைச் சேர்ந்தவர் என்பதை அறிந்து கொண்ட பின் அவனை அடித்து உதைத்து சித்தரவதைச் செய்ததாக கூறப்படுகிறது. திருடியதாக ஒப்புக்கொள்ள சொல்லி அடித்து துன்புறுத்தியுள்ளனர்.

"14 வயது 'இருளர்' பாலகனும் விருத்தாசல காவல் நிலைய கதையாசிரியர் கமலகாசனும்!"

உளுந்தூர்பேட்டை 14 வயது இருளர் சிறுவன் மீது நான்கு பொய் வழக்குகள் போட்டு செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ளாவிட்டால் கொன்று விடுவோம் என மிரட்டி விருத்தாசல காவல் நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் இதர (1/n)

— Chaotic Dude (@chaotic_dood) January 14, 2022

">

பின்னர் விருத்தாசலத்தில் உள்ள நான்குக் கடைகளில் பூட்டை உடைத்து தனித்தனியே ரூ.5000, ரூ.1000, ரூ.1000, ரூ.340 பணம் திருடியதாக பொய் வழக்குகள் (Cr.Nos. 1589/2021, 1590/2021, 1591/2021, 1592/2021 u/s 457, 380 IPC) போட்டு சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்துள்ளனர். அச்சிறுவன் கூர்நோக்கு இல்லத்தில் 12 நாட்கள்  (28.12.2021 - 10.01.2022) இருந்து விட்டுப் பிணையில் வெளியே வந்துள்ளான்.

ஜெய்பீம் பட பாணியில் இருளர் இன சிறுவன் மீது 4 பொய் வழக்குகள் பதிவு ?- காவல் துறை மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

இது குறித்து பேராசிரியர் பிரபா. கல்விமணி எனும் கல்யாணி அச்சிறுவனின் ஊருக்கே சென்று விசாரித்துவிட்டு வந்து, அச்சிறுவன் மூலம் விரிவான புகார் ஒன்றை தமிழக காவல்துறை மற்றும் அரசு உயரதிகாரிகளுக்கு அனுப்பி உள்ளார். அதில் பழங்குடி இருளர் இனச் சிறுவன் பொய் வழக்குப் போட்ட விருத்தாசலம் காவல்நிலைய குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் கமல்காசன் மற்றும் காவலர்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படி நடவடிக்கை எடுக்க கேட்டுள்ளார் இருளர், குறவர் இன மக்களுக்கு பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வரும் தமிழக முதல்வர் இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஃபெங்கல் புயலால் சேதமடைந்த புத்தம் புது பாலம்; ஏன்? - காரணத்தை கூறும் தமிழக அரசு 
ஃபெங்கல் புயலால் சேதமடைந்த புத்தம் புது பாலம்; ஏன்? - காரணத்தை கூறும் தமிழக அரசு 
TN Rain: 12 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு.!
TN Rain: 12 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு.!
இதுதான் தீர்வா? - திமுகவை சரமாரியாக சாடி தோழர்களுக்கு வேண்டுகோள் வைத்த விஜய் 
இதுதான் தீர்வா? - திமுகவை சரமாரியாக சாடி தோழர்களுக்கு வேண்டுகோள் வைத்த விஜய் 
தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காத மத்திய அரசு! - பாஜக மாநிலங்களுக்கு எவ்வளவு? வெளியான பரபரப்பு தகவல்!
தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காத மத்திய அரசு! - பாஜக மாநிலங்களுக்கு எவ்வளவு? வெளியான பரபரப்பு தகவல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay  : ”நேர்ல வர முடியாதா விஜய்? CM சீட் மட்டும் வேணுமா!” திட்டித் தீர்க்கும் மக்கள்DMK Cadre vs Women : நிவாரணம் வழங்கிய உதயநிதி! முண்டியடித்து வந்த பெண்கள்..அத்துமீறிய திமுக நிர்வாகிAnnamalai vs ADMK: இரண்டாக உடையும் அதிமுக?அண்ணாமலையின் புது ரூட்! கலக்கத்தில் EPSTiruvannamalai Landslide : ”ஒரு SECOND தான் மொத்தமா புதைஞ்சிருப்போம்” மண்சரிவில் தப்பிய பெண் திக்திக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஃபெங்கல் புயலால் சேதமடைந்த புத்தம் புது பாலம்; ஏன்? - காரணத்தை கூறும் தமிழக அரசு 
ஃபெங்கல் புயலால் சேதமடைந்த புத்தம் புது பாலம்; ஏன்? - காரணத்தை கூறும் தமிழக அரசு 
TN Rain: 12 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு.!
TN Rain: 12 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு.!
இதுதான் தீர்வா? - திமுகவை சரமாரியாக சாடி தோழர்களுக்கு வேண்டுகோள் வைத்த விஜய் 
இதுதான் தீர்வா? - திமுகவை சரமாரியாக சாடி தோழர்களுக்கு வேண்டுகோள் வைத்த விஜய் 
தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காத மத்திய அரசு! - பாஜக மாநிலங்களுக்கு எவ்வளவு? வெளியான பரபரப்பு தகவல்!
தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காத மத்திய அரசு! - பாஜக மாநிலங்களுக்கு எவ்வளவு? வெளியான பரபரப்பு தகவல்!
Shalini Ajith: ரேஸ் கார் ஓட்டிய ஷாலினி! தல-யை பார்த்து என்ன சொன்னாங்க தெரியுமா? அஜித்தின் தோழி பகிர்ந்த தகவல்!
Shalini Ajith: ரேஸ் கார் ஓட்டிய ஷாலினி! தல-யை பார்த்து என்ன சொன்னாங்க தெரியுமா? அஜித்தின் தோழி பகிர்ந்த தகவல்!
பேரிடர்களுக்கு இனி இயற்கையை குறை சொல்ல முடியாது; நாமே காரணம் - சென்னை உயர்நீதிமன்றம் சொன்னது என்ன? 
பேரிடர்களுக்கு இனி இயற்கையை குறை சொல்ல முடியாது; நாமே காரணம் - சென்னை உயர்நீதிமன்றம் சொன்னது என்ன? 
School Colleges Leave: நாளை 2 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.!
School Colleges Leave: நாளை 2 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.!
''இது நியாயமா? புயல் பாதிப்புக்கு மத்தியில் தேர்வா?'' அரசிடம் கல்வியாளர்கள் கேள்வி
''இது நியாயமா? புயல் பாதிப்புக்கு மத்தியில் தேர்வா?'' அரசிடம் கல்வியாளர்கள் கேள்வி
Embed widget