மேலும் அறிய

Vellore: ‘என்னை மன்னித்து விடுங்கள்’ ; திருடிய பணத்தை உண்டியலில் போட்டு சென்றார் - காரணம் என்ன..?

ராணிப்பேட்டை காஞ்சனகிரி பகுதியில் அமைந்துள்ள மலைக்கோவிலின் உண்டியலிலிருந்து 10,000 ரூபாய் பணத்தை திருடியவர் மன்னிப்பு கடிதத்துடன் பணத்தை உண்டியலில் திருப்பி செலுத்திய ருசீகர சம்பவம் நடைபெற்றுள்ளது.

ராணிப்பேட்டை காஞ்சனகிரி பகுதியில் அமைந்துள்ள மலைக்கோவிலின் உண்டியலிலிருந்து 10,000 ரூபாய் பணத்தை திருடியவர் மன்னிப்பு கடிதத்துடன் பணத்தை உண்டியலில் திருப்பி செலுத்திய ருசீகர சம்பவம் அரங்கேறியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம், லாலாபேட்டை அருகே புகழ்பெற்ற காஞ்சனகிரிமலையில் ஈஸ்வரன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த சித்திரை மாதம் சித்ரா பௌர்ணமி விழா மிக சிறப்பாக நடைபெற்றது. இக்கோவிலின் வளாகத்தில் 1008 சுயம்பு லிங்கங்கள் உள்ளது. சித்ரா பௌர்ணமி அன்று நடைபெற்ற சில தினங்களுக்குள், கோவிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்து பணம் திருடு போனது. பின்னர் கோவில் நிர்வாகத்தினர் காலையில் சென்று கோவிலில் பார்த்தபோது கோவில் உண்டியல் உடைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து கோவில் நிர்வாகத்தினர் சிப்காட் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

Vellore: ‘என்னை மன்னித்து விடுங்கள்’ ; திருடிய பணத்தை உண்டியலில் போட்டு சென்றார் - காரணம் என்ன..?

இந்நிலையில் நேற்று கோவில் நிர்வாகத்தினர் 1008 சுயம்பு லிங்கங்கள் முன்பு வைக்கப்பட்டு இருந்த உண்டியலை திறந்து அதிலிருந்த பக்தர்கள் காணிக்கையிட்ட பணத்தினை எடுத்தனர். அப்போது உண்டியலில் பக்தர்கள் செலுத்திய பணத்துடன், மேலும் ஒரு கடிதமும் அதனுள்ளே 500 ரூபாய் நோட்டுகள் 20 இருந்தது. (ரூ 10,000). அதனைத்தொடர்ந்து கோவில் நிர்வாகிகள் அந்த சீட்டீனை பிரித்துப் பார்த்தனர். அப்போது அதில், ’என்னை மன்னித்து விடுங்கள். சித்ரா பௌர்ணமி கழித்து, நான் தெரிந்தே கோயில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி விட்டேன். அப்போது இருந்து எனக்கு மனசு சரியில்லை, நிம்மதியில்லை, அப்புறம் வீட்டில் நிறைய பிரச்னை வருகிறது. எனவே நான் மனம் திருந்தி எடுத்த பணத்தை அதே உண்டியலில் ரூபாய் 10,000 போட்டு விடுகிறேன்.

Vellore: ‘என்னை மன்னித்து விடுங்கள்’ ; திருடிய பணத்தை உண்டியலில் போட்டு சென்றார் - காரணம் என்ன..?

எல்லோரும் என்னை மன்னித்து விடுங்கள். கடவுளும் என்னை மன்னிப்பாரா என தெரியாது’ என குறிப்பிட்டிருந்தது. இதனையடுத்து ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்த கோவில் நிர்வாகத்தினர். இந்த கடிதத்தை சிப்காட் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடியவர் மனம் திருந்தி மீண்டும் பணத்தை உண்டியலில் மன்னிப்பு கடிதத்துடன் செலுத்தியது பரபரப்பையும், இறை பக்தியின் பெருமையை உணரச் செய்வதாகவும் இருந்தது என அப்பகுதி மக்கள் நெகிழ்ச்சியுடன் கூறினர்.

மேலும் படிக்க: Annapurani Arasu Amma: ஆன்மீகம் என்பது....என்னை நம்பி வந்தவர்கள்... அன்னபூரணி அம்மாவின் அதிரடி பேட்டி

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

CM Stalin Speech: “அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கண்களில் ரத்தக் கண்ணீர் வரவழைத்தது அதிமுக ஆட்சி“: மு.க. ஸ்டாலின்
“அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கண்களில் ரத்தக் கண்ணீர் வரவழைத்தது அதிமுக ஆட்சி“: மு.க. ஸ்டாலின்
Chennai: மக்களே! சென்னையில் நாளை தண்ணீர் வராது - எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?
Chennai: மக்களே! சென்னையில் நாளை தண்ணீர் வராது - எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?
TVK Vijay: ரத்து செய்யப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வு: தேர்தலில் பாடம் புகட்டுவது உறுதி - விஜய் ஆவேசம்
TVK Vijay: ரத்து செய்யப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வு: தேர்தலில் பாடம் புகட்டுவது உறுதி - விஜய் ஆவேசம்
TVK PMK: ராமதாசை நேரில் சந்திக்கிறாரா செங்கோட்டையன்? விஜய்யுடன் கூட்டணி வைப்பாரா?
TVK PMK: ராமதாசை நேரில் சந்திக்கிறாரா செங்கோட்டையன்? விஜய்யுடன் கூட்டணி வைப்பாரா?
ABP Premium

வீடியோ

US Trade India | ஜவுளி முதல் நகைகள் வரை இந்தியப் பொருட்களுக்கு 0% வரி நண்பருக்காக இறங்கிய டிரம்ப்
MK Stalin Angry | ஆப்சென்ட் ஆன அமைச்சர் டோஸ் விட்ட முதல்வர் பரபரப்பு வீடியோ | Minister Gandhi | DMK
Gold Price Drop Reason | மீண்டும் ஏறும் தங்கம் தலைகீழாய் மாற வாய்ப்பு பிப்ரவரியில் TWIST |Trump
US India | இந்தியா - அமெரிக்கா டீல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin Speech: “அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கண்களில் ரத்தக் கண்ணீர் வரவழைத்தது அதிமுக ஆட்சி“: மு.க. ஸ்டாலின்
“அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கண்களில் ரத்தக் கண்ணீர் வரவழைத்தது அதிமுக ஆட்சி“: மு.க. ஸ்டாலின்
Chennai: மக்களே! சென்னையில் நாளை தண்ணீர் வராது - எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?
Chennai: மக்களே! சென்னையில் நாளை தண்ணீர் வராது - எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?
TVK Vijay: ரத்து செய்யப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வு: தேர்தலில் பாடம் புகட்டுவது உறுதி - விஜய் ஆவேசம்
TVK Vijay: ரத்து செய்யப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வு: தேர்தலில் பாடம் புகட்டுவது உறுதி - விஜய் ஆவேசம்
TVK PMK: ராமதாசை நேரில் சந்திக்கிறாரா செங்கோட்டையன்? விஜய்யுடன் கூட்டணி வைப்பாரா?
TVK PMK: ராமதாசை நேரில் சந்திக்கிறாரா செங்கோட்டையன்? விஜய்யுடன் கூட்டணி வைப்பாரா?
Honda Shine vs Hero HF Deluxe: ஹோண்டா ஷைனா.? ஹீரோ HF டீலக்ஸா.? விலை, மைலேஜ் அடிப்படையில் எந்த பைக் சிறந்தது.? அலசுவோம்
ஹோண்டா ஷைனா.? ஹீரோ HF டீலக்ஸா.? விலை, மைலேஜ் அடிப்படையில் எந்த பைக் சிறந்தது.? அலசுவோம்
Gaming Mobiles Under 15000: நீங்க செல்போன்ல கேம் ஆடுறவங்களா.? ரூ.15,000-க்கும் குறைவான Gaming மொபைல்கள் முழு லிஸ்ட் இதோ
நீங்க செல்போன்ல கேம் ஆடுறவங்களா.? ரூ.15,000-க்கும் குறைவான Gaming மொபைல்கள் முழு லிஸ்ட் இதோ
இளையராஜா இசையில் நடிக்க ஆசைப்பட்ட எம்ஜிஆர் - அடுத்து நடந்தது என்ன தெரியுமா?
இளையராஜா இசையில் நடிக்க ஆசைப்பட்ட எம்ஜிஆர் - அடுத்து நடந்தது என்ன தெரியுமா?
NEET UG 2026: 2026ம் ஆண்டுக்கான நீட் தேர்வு தேதி அறிவிப்பு.. விண்ணப்பிப்பது எப்படி?
NEET UG 2026: 2026ம் ஆண்டுக்கான நீட் தேர்வு தேதி அறிவிப்பு.. விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget