மேலும் அறிய

TN Rains: திருவண்ணாமலை மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் மழை - வாகன ஓட்டிகள் அவதி

திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த கன மழையால் சாலைகளில் தேங்கிய மழை நீரால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

திருவண்ணாமலை ( Tiruvannamalai News) சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளபடி திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று மாலை முதலே  கனமழை பெய்து வருகிறது. இதனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான ஆரணி, செய்யார், பேருந்து நிலையம், வந்தவாசி, செங்கம், கலசபாக்கம், கண்ணமங்கலம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (12.07.2023) வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். 

TN Rains: திருவண்ணாமலை மாவட்டத்தில்  வெளுத்து வாங்கும் மழை - வாகன ஓட்டிகள் அவதி

 சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்

மழையின் காரணமாக திருவண்ணாமலை நகரின் சாலைகளிலும் தாழ்வான பகுதிகளான அவலூர் பேட்டை சாலை , தண்டராம்பட்டு சாலை, திண்டிவனம் சாலை, கண்ணமங்கலம் பகுதியில், தாமரை குளம் கரையோர குடியிருப்புகள், குடியிருப்பு, உள்ளிட்ட திருவண்ணாமலை நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மழை பெய்யும் என ஓரிரு நாட்களுக்கு முன்னரே சென்னை வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில், முன்னேற்பாடுகள் குறித்து நடவடிக்கை மேற்கொள்ள திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வுக் கூட்டமும் நடைபெற்று இருந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகள் என குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளில் எந்தவிதமான முன்னேற்பாடுகளையும் செய்யாததால், அப்பகுதியில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கி வருவதால், ஒருநாள் மழைக்கே பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். ஒருபுறம் மகிழ்ச்சி என்றாலும்.. சில இடங்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு. காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது, திருவண்ணாமலை மாவட்டத்தில் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.  

TN Rains: திருவண்ணாமலை மாவட்டத்தில்  வெளுத்து வாங்கும் மழை - வாகன ஓட்டிகள் அவதி

திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த கனமழையின் அளவு 

திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த மழை அதிக அளவாக தண்டராம்பட்டு 8.40 மில்லிமீட்டரும், ஆரணியில் 1.60 மில்லிமீட்டரும், வெம்பாக்கம் 00.00 மில்லிமீட்டரும், வந்தவாசி 00.00 மில்லிமீட்டரும், சேத்துப்பட்டு 9.20 மில்லிமீட்டரும், ஜமுனாமரத்தூர் 1.00 மில்லிமீட்டரும், கீழ்பெண்ணாத்தூர் 0.00, மில்லிமீட்டரும், போளூர் 6.60 மில்லிமீட்டரும், திருவண்ணாமலை 7.30 மில்லிமீட்டரும், கலசபாக்கம் 33.40 மில்லிமீட்டரும், செங்கம் 18.60 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. திருவண்ணாமலை மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கி பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மழை நீரை வெளியேற்ற மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களிலும் மழைநீர் புகுந்துள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Embed widget