நிலநடுக்கத்தின் போது கட்டிடங்களில் சிக்கியவர்களை எப்படி மீட்பது? - தேசிய பேரிடர் மீட்புப் படை ஒத்திகை
நிலநடுக்கம் ஏற்படும் போது அரசு அலுவலக கட்டிடங்களில் சிக்கிக் கொள்பவர்களை எப்படி காப்பாற்றுவது குறித்த ஒத்திகையை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் துவக்கி வைத்தார்.
![நிலநடுக்கத்தின் போது கட்டிடங்களில் சிக்கியவர்களை எப்படி மீட்பது? - தேசிய பேரிடர் மீட்புப் படை ஒத்திகை tiruvannamalai National Disaster Response Force drills on how to rescue people in distress during disasters TNN நிலநடுக்கத்தின் போது கட்டிடங்களில் சிக்கியவர்களை எப்படி மீட்பது? - தேசிய பேரிடர் மீட்புப் படை ஒத்திகை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/29/0063cdf659221b473722da69c3aa76f31680100596706109_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
அரக்கோணத்தைச் சேர்ந்த தேசிய பேரிடர் மீட்பு படை குழுவினர் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் தீவு மற்றும் லட்சத்தீவு போன்ற இடங்களில் ஏற்படும் பேரிடர்களுக்கு விரைந்து சென்று மீட்பு பணிகள் செய்கின்ற பொறுப்பை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடத்தில் பேரிடர் காலங்களில் கட்டிடங்களில் உள்ளே சிக்கிக் கொள்பவர்களை எப்படி மீட்டெடுப்பது என்பது குறித்து ஒத்திகையை செயல்முறைகள் மூலம் 50-க்கும் மேற்பட்ட வீரர்கள் செய்து காட்டி அரசு அலுவலர்களுக்கும் ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். குறிப்பாக மழை வெள்ளம், நிலநடுக்கம் கட்டிடங்கள் இடிந்து விழும் நேரங்களில் இடர்பாடுகளில் சிக்கிக் கொள்பவர்களை எப்படி மீட்டெடுத்து காப்பாற்றுவது என்ற ஒத்திகையை பேரிடர் மீட்புப்படையினர் செய்து காண்பித்தனர்.
அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டிட இடர்பாடுகளில் சிக்கிக் கொள்பவர்களை எந்தெந்த இடத்தில் இடர்பாடுகளில் சிக்கி உள்ளார்கள் என்பதை அவர்களை எப்படி கண்டறிவது கண்டுபிடித்த பிறகு எப்படி மீட்டெடுப்பத பிறகு முதலுதவி அளித்து காப்பாற்றுவது போன்ற ஒத்திகையினை சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக செய்து காண்பித்தனர். அதோடு மட்டுமல்லாமல் நிலநடுக்கத்தின் போது செய்யக்கூடாதவை மற்றும் செய்யக்கூடியவைகள் என்ன என்பதை பற்றியும், வீட்டிற்கு உள்ளேயும் ஒவ்வொரு அறையிலும் மற்றும் வெளியில் உள்ள பாதுகாப்பான பகுதிகளை கண்டு தெரிந்து கொள்ள வேண்டியவை குறித்தும் தெரிவித்தனர். மேலும் வீட்டில் உள்ள அபாயகரமான பகுதிகளை கண்டு தெரிந்து வைத்திருக்க வேண்டும், அங்கிருந்து உடனடியாக வெளியே செல்லக்கூடிய வழியை கண்டறிந்து இருக்க வேண்டும் என்பதன் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும் தேசிய பேரிடர் மீட்பு படை குழுவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மரக்கன்றுகளை நட்டனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்களிடம் விழிப்புணர்வு குறித்து பேசினர். அவர்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படை குழுவினர் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தனர். அனைவரும் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்றும் தெரிவித்தனர்.
நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)