மேலும் அறிய
Advertisement
டெங்கு காய்ச்சலால் மாணவன் உயிரிழப்பு எதிரொலி; மெடிக்கலில் மருத்துவம் பார்த்த பெண் கைது
பொம்மிக்குப்பம் பகுதியில் டெங்கு காய்ச்சலால் மாணவன் உயிரிழப்பால் எதிரொலி! மெடிக்கலில் மருத்துவம் பார்த்த பெண் கைது! 5 மருந்து கடைகளுக்கு சீல்!
திரும்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பொம்மிக்குப்பம் சின்ன மாரியம்மன் கோயில் தெரு பகுதியை சேர்ந்த உதயகுமார், மணிமேகலை தம்பதியினர் இவர்களுக்கு கவியரசு(9) இவர் கதிரம்பட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த வாரம் இவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பொம்மி குப்பம் பகுதியில் உள்ள சபரி மெடிக்கலுக்கு சென்று ஊசி போட்டு உள்ளார்.
இந்த நிலையில் மாணவனுக்கு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட வந்த நிலையில் இந்த மெடிக்கலுக்கு சென்று ஊசி போடுவதும் வருவதுமாக இருந்து வந்துள்ளார்.
இதனால் டெங்கு அதிகமாக அங்கிருந்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்துள்ளார். அதன் பின்பு ரத்த அணுக்கள் குறைபாட்டால் மருத்துவர்கள் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து சிகிச்சை பலனின்றி மாணவன் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் அறிந்த மருத்துவ மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் கண்ணகி பொம்மிகுப்பம் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவம் பார்க்காமல் பொம்மி குப்பம் பகுதியில் பிரகாசம் என்பவருக்கு சொந்தமான சபரி மெடிக்கல், பாலாஜிக்கு சொந்தமான பாலாஜி மெடிக்கல், கார்த்திக் என்பவருக்கு சொந்தமான எஸ்.கே.என், மூன்று மெடிக்கல் இயங்கி வந்துள்ளது. இதில் அனைவரும் மருத்துவ படிப்பு படிக்காமல் போலியாக மருத்துவம் பார்த்து வந்தது தெரிய வந்தது.
இந்த நிலையில் இணை இயக்குனர் கண்ணகி வருவதை அறிந்த மூன்று பேரும் அங்கிருந்து தப்பி சென்றனர். இந்த நிலையில் இணை இயக்குனர் கண்ணகி தலைமையில் மூன்று மெடிக்கலுக்கும் சீல் வைக்கப்பட்டது.
அதேபோல் பசிலிகுட்டை பகுதியில் தனஜெயம் என்பவருக்கு சொந்தமாக சிவசக்தியும் மெடிக்கலும் மற்றும் நந்தினி என்பவருக்கு சொந்தமாக நந்தினி மெடிக்கல் என்ற பெயரில் மெடிக்கல் இயங்கி வந்தது. இவர்களும் அதே போல் மருத்துவ படிப்பு படிக்காமல் மருத்துவம் பார்த்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் நந்தினி என்பவரை மட்டும் இணை இயக்குனர் கண்ணகி பிடித்து திருப்பத்தூர் கிராமிய போலீசாரிடம் ஒப்படைத்தார்.
மேலும் மருத்துவ படிப்பு படிக்காமல் மெடிக்கலில் போலியாக மருத்துவம் பார்த்து வந்த நான்கு பேரும் தப்பி ஓடினர். மேலும் 5 மெடிக்கலுக்கு சீல் வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனரின் உதவியாளர் வெங்கடேசன், மருந்து ஆய்வாளர் சபரிநாதன், மருந்தாளுனர்கள் குரு ராகவேந்திரன், கார்த்திக், மற்றும் வருவாய் துறையினர் மற்றும் திருப்பத்தூர் கிராமிய போலீஸர் ஆகியோர் உடன் இருந்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
திரை விமர்சனம்
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion