மேலும் அறிய
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
ஏலகிரி மலையில் கட்டணமில்லா பேருந்து சேவை தொடக்கம்; கண்டக்டர் ஆக மாறிய எம்எல்ஏ
ஏலகிரியில் மகளிருக்கான இலவச பேருந்து சேவை தொடங்கியதால் கிராம மக்கள் மகிழ்ச்சி.
ஏலகிரி மலையில் கட்டணமில்லா பேருந்துங்க இலவச டிக்கெட் வாங்கிக்கங்க என பேருந்தில் பயணம் செய்த மகளிருக்கு இலவச பேருந்து சீட்டை கொடுத்து கண்டக்டர் ஆக மாறிய எம்எல்ஏ.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் ஏலகிரி மலை கிராமம் அமைந்துள்ளது. இந்த மலை கிராமத்தில் 14 கிராமங்கள் உள்ளன மலை கிராமப் பகுதிகளில் இருந்து மருத்துவம், அரசு அலுவலகம் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக நாள்தோறும் நூற்றுக்கணக்கான பெண்கள் சுமார் 25 கிலோமீட்டர் தூரம் உள்ள ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் நகர் பகுதிக்கு வந்து செல்கின்றனர்.
இவர்களுக்கு அரசு பேருந்து வசதி இருந்தாலும் தமிழகத்தில் மற்ற நகர்ப்புற பகுதிகளில் இயக்கப்படும் மகளிருக்கான இலவச பேருந்து இது நாள் வரை இயக்கப்படாமல் இருந்த நிலையில் மலை கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று ஏலகிரி மலை, அத்தனாவூரில் இருந்து திருப்பத்தூர், ஜோலார்பேட்டைக்கு மகளிருக்கான காண இலவச பேருந்து சேவையை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜி இன்று முதல் கொடியசைத்து துவக்கி வைத்து.
இந்தநிகழ்ச்சி ஒன்றி குழு உறுப்பினர்கள், மற்றும் போக்குவரத்து துறை சார்ந்த அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion