வன விலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டு தயாரித்த 3 நபர்கள் படுகாயம்
’’காவல் மற்றும் வனத்துறையினர் ரோந்து பணிகளை நடத்த பொதுமக்கள் கோரிக்கை’’
திருவண்ணாமலை மாவட்டம் தச்சம்பட்டு அடுத்த நவம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட இருதயபுரம் பகுதியைச் சேர்ந்த அமிர்தராஜ் மகன் கிளியோ பெனிக்ஸ் (25) இவர் படித்து விட்டி வீட்டில் உள்ளார், அலெக்சாண்டர் (23) இவர் விவசாயம் செய்து வருகிறார், இவர்களுடைய அத்தை மகன் ஜான் போஸ்கோ (35) டிரைவராக வேலை செய்து வருகிறார். தச்சம்பட்டு பகுதிக்கு உட்பட்ட பழையனூர், காட்டாம்பூண்டி ஆகிய ஊர்களில் காட்டுப்பகுதியில் மான்கள், காட்டு பன்றிகள், முயல்கள் உள்ளிட்ட உயிரினங்கள் வசித்து வருகின்றனர். இந்த வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக மூவரும் சேர்ந்து நாட்டு வெடிகுண்டு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக தயாரிக்கும் போது நாட்டு வெடிகுண்டு அதிக சத்துடன் வெடித்ததில் 3 நபர்களும் படுகாயம் அடைந்தனர். அதிக சத்தம் கேட்டதில் அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்கள் ஓடி வந்து பார்த்தனர் அப்போது வெடி வெடித்தில் வீடு தரைமட்டமாகி கிடந்தது, அதனை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் வீடு இடிந்ததில் மூன்று நபர்கள் மீது கட்டிடம் விழுந்துள்ளது. அதனை தொடர்ந்து அங்குவந்த பொதுமக்கள் அவர்களை இடிந்த வீட்டினுள் தேடி உள்ளனர். அப்போது 3 நபர்களும் சத்தம் போட்டுள்ளனர். அதன் பின்னர் 3 நபர்களையும் பொது மக்கள் மீட்டு 108 ஆம்லன்ஸக்கு தகவல் தெரிவித்து அதன் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அதனையடுத்து அங்கு இருந்த பொதுமக்கள் தச்சம்பட்டு காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இது குறித்து காவல்துறையினர் அங்குள்ள பொதுமக்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் 3 நபர்கள் படுகாயம் அடைந்துள்ளதாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பிரியங்கா கொடுத்த தகவலின் பேரில் தாசில்தார் சுரேஷ் வருவாய் ஆய்வாளர், வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இந்நிலையில் தச்சம்பட்டு பொதுமக்கள் கூறுகையில் எங்கள் பகுதி மிகவும் காடு அதிகமாக உள்ளது. இங்கு உள்ள காடுகளில் இரவு நேரங்களில் வேட்டை ஆடி வருகின்றனர் மற்றும் வீடுகளிலும் கொள்ளை சம்பவமும் அதிக அளவில் நடைபெற்று வருகின்றது இதனால் காவல்துறையினர் மற்றும் வன துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டால் இதுபோன்ற குற்ற சம்பவங்களை தடுக்க முடியும் என்று கூறினர்.