திருவண்ணாமலையில் ஒரே நாளில் 57,225 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது
’’திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை 60% பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன’’
நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளில் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இலட்சக்கணக்கான மக்கள் இந்த தொற்றின் காரணமாக இதுவரை உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தொற்றில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு மத்திய மாநில அரசுகள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என தொடர்ந்து பொதுமக்களை அறிவுறுத்தி வருகிறது. அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு ஊசி மாபெரும் முகாமை ஏற்பாடு செய்து பொதுமக்களுக்கு தடுப்பூசியை சுகாதாரத்துறை சார்பில் செலுத்தி வருகிறது. ஏற்கனவே தமிழ்நாட்டில் மூன்று மாபெரும் தடுப்பூசி முகாம் நிறைவு பெற்றுள்ள நிலையில், நேற்று தமிழ்நாடு முழுவதும் 4 ஆவது மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் இதுவரை தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாத நபர்கள் அனைவரும் தடுப்பு ஊசி செலுத்தி கொள்வதற்காக இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த முதல் கட்ட சிறப்பு முகாமில் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 325 நபர்களுக்கும், இரண்டாவது கட்ட தடுப்பூசி சிறப்பு முகாமில், 77ஆயிரத்து 85 நபர்களுக்கும். 3வது கட்ட தடுப்பூசி முகாமில் 75 ஆயிரத்து 896 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்திக் கொண்ட நிலையில் இதுவரை மாவட்டத்தில் 60% பேர் தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் நேற்றையதினம் திருவண்ணாமலையில் நடத்தப்பட்ட 4 ஆவது கட்ட மெகா தடுப்பூசி சிறப்பு முகாமானது 1,017 மையங்களில் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கி, இரவு 7 மணி வரையில் இந்த முகாம்கள் நடைப்பெற்றன. இதில் பெரும்பாலான முகாம்களில் கையிருப்பில் இருந்த தடுப்பூசிகள் முழுமையாக பொதுமக்களுக்கு செலுத்தியதால் மாலை 3 மணிக்குள் முகாம் முடிந்தது மேலும், மழை காரணமாக, சில இடங்களில் மக்களின் வருகை சற்று குறைவாக இருந்தது. ஒவ்வொரு முகாமிலும், செவிலியர். மருத்துவ உதவியாளர் மற்றும் ஆசிரியர்கள். தன்னார்வலர்கள். அங்கன்வாடி ஊழியர்கள் உள்ளிட்டோர் இந்த சிறப்பு முகாம் பணியில் ஈடுபட்டனர். முகாம்களை கண்காணிக்கும் பணியில் 32 மாவட்ட அளவிலான அதிகாரிகளும். 5 முகாம்களுக்கு ஒருவர் வீதம் 184 ஒருங்கிணைப்பாளர்களும் ஈடுபட்டனர்.
இந்நிலையில், திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி முகாமை. மாவட்ட ஆட்சியர் முருகேஷ் துவங்கி வைத்தார். அப்போது அங்கு தடுப்பூசி செலுத்த வந்தவர்களிடம் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் தவறாமல் 2வது தவணை தடுப்பூசியையும் செலுத்தி, கொள்ளை வேண்டும் ஏனென்றால் அப்போது தான் நம்பளை கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும் என்று அங்கிருந்த பொதுமக்களிடம் மாவட்ட ஆட்சியர் அதனைத்தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் இம்மாத இறுதிக்குள் நூறு சதவீதம் தடுப்பூசி செலுத்திட மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது என்றார்
அதைத்தொடர்ந்து, மேலத்திகான், நல்லவன்பானையம், கீழ் செட்டிப்பட்டு உள்ளிட்ட இடங்களில் கொரோனா தடுப்பூசி நடந்த முகாம்களை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார் மேலும், திருவண்ணாமலை சுகாதார மாவட்டத்தில் 34,115 நபர்களுக்கும், செய்யாறு சுகாதார மாவட்டத்தில் 23,110 நபர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் நேற்று நடந்த 4வது கட்ட சிறப்பு முகாம்களில், 57 ஆயிரத்து 225 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )