![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
(Source: ECI/ABP News/ABP Majha)
திருவண்ணாமலை மாவட்ட காஜி நியமன தேர்வுக் குழுவில் இடம் பெற விரும்புவோர்கள் விண்ணப்பிக்கலாம்
மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் விவசாயம் பணிகளுக்காக விண்ணப்பிக்கலாம்.
![திருவண்ணாமலை மாவட்ட காஜி நியமன தேர்வுக் குழுவில் இடம் பெற விரும்புவோர்கள் விண்ணப்பிக்கலாம் Thiruvannamalai District Gazi Appointment Selection Board can apply TNN திருவண்ணாமலை மாவட்ட காஜி நியமன தேர்வுக் குழுவில் இடம் பெற விரும்புவோர்கள் விண்ணப்பிக்கலாம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/08/66962dc0f93d4887f35a394926f454b11702037593012113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
திருவண்ணாமலை மாவட்ட காஜி நியமன தேர்வுக் குழுவில் இடம் பெற விரும்புவோர்கள் மற்றும் காஜி நியமனத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது: திருவண்ணாமலை மாவட்டத்தில் முஸ்லீம் இன மக்களின் பிரதிநிதியாக மாவட்ட காஜி நியமனம் செய்வது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவரின் தலைமையில் ஏழு உறுப்பினர்களைக் கொண்ட காஜி நியமன தேர்வுக்குழு அமைக்கப்பட உள்ளது. மேற்படி மாவட்ட அளவிலான தேர்வுக் குழுவில் தலைவராக மாவட்ட ஆட்சித் தலைவரும் 5 உலமாக்கள் உறுப்பினர்களும் மற்றும் 2 முக்கிய முஸ்லீம் பிரமுகர்களும் உறுப்பினர்களாக இடம் பெறலாம். எனவே மேற்படி தேர்வு குழுவில் 5 உலமாக்கள் உறுப்பினர்களாக விண்ணப்பிக்க அரசாணை எண்.30 பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சென்னை நாள்:05.07.2002-இல் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு ஆலிம் அல்லது பாசில் அல்லது முப்தி படிப்பு படித்திருக்க வேண்டும் அல்லது அரபுக்கல்லூரியிலோ அல்லது அதற்கிணையான கல்வி நிறுவனத்திலோ விரிவுரையாளராக இருந்திருக்க வேண்டும்.
மேலும் 2 முக்கிய முஸ்லீம் பிரமுகர்களாக விண்ணப்பிக்க சமூக சேவையில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவராகவும் சமுதாய முன்னேற்றத்தில் அக்கறை உடையவராகவும் சமுதாயத்தில் நல்ல மனிதர் என்று பேசப்படுபவராகவும் இருத்தல் வேண்டும். திருவண்ணாமலை மாவட்ட காஜி நியமனத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஆலிம் படிப்பு அல்லது பாசில் படிப்பு அல்லது இஸ்லாமிய நீதித்துறை நன்கு அறிந்தவர்கள் அல்லது அரபுக்கல்லூரியிலோ அல்லது அதற்கிணையான கல்வி நிறுவனத்திலோ விரிவுரையாளராக இருந்திருக்க வேண்டும். மேற்படி தேர்வு குழுவில் இடம் பெற விரும்புவோர் மற்றும் காஜி நியமனத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர்கள் மேற்கண்ட தகுதியுடைவர்களாக இருப்பின் விண்ணப்பங்கள் மற்றும் சுயவிவரம் குறித்த விவரங்களை எழுத்து மூலமாக உரிய சான்றுகளுடன் (15.12.2023)-க்குள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்
மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.
காலதாமதமாக வரப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. காஜி நியமனம் செய்ய தேர்ந்தோர் பெயர் பட்டியலில் (Pயநெட ழக யேஅநள) இடம் பெறுவோர் மாவட்ட அளவிலான தேர்வுக் குழுவில் இடம் பெற இயலாது. மேலும் கூடுதல் விவரங்கள் தேவையெனில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 2023-2024 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் விவசாயம் மற்றும் தனிநபர் பணிகளான பண்ணைக் குட்டைகள் மண் வரப்பு கல் வரப்பு அமைத்தல் தோட்டக்கலை, செடிகள் வளர்தல், நாற்றங்கால் அமைக்கும் பணிகள் மற்றும் தனிநபர் நிலங்களில் பழவகை மரங்கள் நடுதல் ஆகிய பணிகள் மேற்கொள்ள விரும்பும் நபர்கள் கீழ்கண்ட ஆவணங்களுடன் தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் (10.12.2023)-க்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் கேட்டுக்கொண்டுள்ளார். சிறுகுறு விவசாயி சான்று நகல், நில உடமைக்கான ஆவண நகல் இலக்கு மக்கள் பட்டியல் (PஐP) எண், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பெறப்பட்ட வேலை அடையாள அட்டை நகல், ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ள வங்கி கணக்கு புத்தக நகல்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)