மாநிலங்கள் உரிமைகள் மீது சிறிதும் அக்கறையற்ற கட்சி பாஜக: விசிக சிந்தனை செல்வன்
மாநிலங்கள் உரிமைகள் மீது சிறிதும் அக்கறையற்ற கட்சியாக பாஜக தொடர்ந்து வெளிப்படுத்திவருகிறது என விசிக கட்சி மாநில பொதுச் செயலாளர் சிந்தனை செல்வன் பேட்டியளித்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதிக்கு உட்பட்ட வீரளூரில் அருந்ததி காலனி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பொது வழியில் சடலத்தை எடுத்து செல்ல எதிர்ப்பு தெரிவித்து. வீரளூர் அருந்ததி காலனி பகுதியில் ஆதிக்க சாதியினர் தாக்குதலின் ஈடுபட்டு சூறையாடப்பட்டது. அதில் 50க்கும் மேற்பட்ட வீடுகள், 30க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் பெரும் சேதம் ஏற்பட்டு அப்பகுதி போர்க்களம் போல் காட்சியளித்தது. இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில் இச்சம்பவம் நடந்து 6 மாதத்திற்கு பிறகு அப்பகுதியில் நேரில் சென்று பொதுமக்களிடம் தற்போது உள்ள சூழ்நிலையை விடுதலை சிறுத்தை கட்சியின் பொதுச் செயலாளரும் காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினருமான சிந்தனைச் செல்வன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பு.செல்வம் முன்னிலையில் அப்பகுதியில் பொதுமக்களிடம் கருத்துகளை கேட்டறிந்தவுடன் அங்குள்ள கள நிலவரங்களை ஆய்வு மேற்கொண்டார்.
விடுதலை சிறுத்தை கட்சி மாநில பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன் பேட்டியளிக்கையில்;
கொரோனா பெருந் தொற்று காலத்தில் ஆட்சி பொறுப்பேற்ற திராவிட முன்னேற்ற கழகம், தமிழகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு சென்று தமிழகத்தில் அமைதி பூங்காவாக வழிநடத்தி கொண்டிருகிறது. அதை விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் மனப்பூர்வமாக பாராட்டுவதாக அவர் தெரிவித்தார். அண்மையில் காவல் நிலையத்தில் ஏற்பட்ட மரணங்கள் மற்றும் வீரளூர் கலவரம் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களை அரசு இயந்திரம் சரியாக கையாளவில்லை என்றும், இதை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வது தோழமைக் கட்சி என்ற கடமை என்ற அடிப்படையில் தெரிவிக்க விரும்புதாகவும் அவர் தெரிவித்தார்.
விரளூர் அருந்ததிய சமூக மக்களுக்கு 70க்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் உள்ளதாகவும், அதில் விவசாயம் பண்ண முடியாத சூழல் அங்கு ஏற்பட்டுள்ளது. இதில் உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இரு தரப்பினிடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு நல்லிணக்கத்தை கொண்டு வரவேண்டும். அருந்ததிர் சமூகத்திற்கு சொந்தமான இடங்களில் மீண்டும் விவசாயம் மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் உடனடியாக இதை உயிர்புள்ள பிரச்சினையாக மாவட்ட நிர்வாகம் கையில் எடுத்து இதற்கு தீர்வு காண வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் வீரளூரில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், அவர்கள் சட்டத்தின் முன்பு தண்டிக்கப்பட வேண்டும் என்றும். தயவு தாட்சண்யம் இல்லாமல் விடுபட்ட அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய வேண்டும் என்றும், மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டவர்களிடம் அவர் கேட்டுக் கொண்டார்.
மாநிலங்கள் உரிமைகள் மீது சிறிதும் அக்கறையற்ற கட்சியாக பாஜக தொடர்ந்து வெளிப்படுத்தி கொண்டு உள்ளதாகவும், அரசியலமைப்புக்கு எதிராக பாஜக பேசி வருவதாகவும் பரபரப்பு அரசியலுகாகவே தமிழகத்தை திண்டாட வேண்டும் என்ற கருத்தை பாஜக முன்வைக்கின்றது. இந்த கருத்தை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றும், இத்தகைய பரபரப்பு அரசியல் தமிழகத்தில் எடுபடாது என்றும் அவர் தெரிவித்தார்.
குரும்பன்ஸ் இன மக்களின் பண்பாட்டை மற்றும் கலாச்சார முறையாக ஆய்வு செய்து அவர்களுக்கு உடனடியாக ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும், நீலகிரி மாவட்டத்தில் உள்ள பண்பாட்டு ஆராய்ச்சி மையத்தை விரிவு படுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கையை வைத்துள்ளார். மேலும் குருமன்ஸ் இன கோரிக்கையை மாவட்ட ஆட்சியர் கனிவுடன் பரிசளித்து உரிய சான்றிதழ் வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.