கெட்ட காலம் தொடங்கிவிட்டது.. இனி பிரதமராலும் ஆளுநரை காப்பாற்ற முடியாது - ஆர்.எஸ்.பாரதி ஆவேசம்
கெட்ட காலம் தொடங்கி விட்டதால் பிரதமரை இனி ஆளுநராலும் காப்பாற்ற முடியாது என்று தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியுள்ளார்.
![கெட்ட காலம் தொடங்கிவிட்டது.. இனி பிரதமராலும் ஆளுநரை காப்பாற்ற முடியாது - ஆர்.எஸ்.பாரதி ஆவேசம் RS Bharti said that tomorrow I will receive the notice and file a case on behalf of DMK in the Supreme Court under Article 32 கெட்ட காலம் தொடங்கிவிட்டது.. இனி பிரதமராலும் ஆளுநரை காப்பாற்ற முடியாது - ஆர்.எஸ்.பாரதி ஆவேசம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/30/e73c4e305a89c3edfe881e94a1d014ce1688129147876113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
வேலூர் ( Vellore News): வேலூர் மாநகர திமுக மற்றும் வேலூர் சட்டமன்ற தொகுதி சார்பில் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே கலைஞர் நூற்றாண்டு விழா பொது கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்துகொண்டார். மேலும் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் பா.கார்த்திகேயன், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏபி.நந்தகுமார், வேலூர் மேயர் சுஜாதா மற்றும் துணை மேயர் சுனில் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசுகையில், அமித்ஷாவின் ஏஜென்டாக செயல்படுபவர் ஆளுநர் ஆர்.என்.ரவி. குடும்ப அரசியல் பற்றி பேசுகிறார் மோடி. மோடியின் மனைவியை ஏன் போலீஸ் பாதுகாப்போடு தனியாக வைத்துள்ளீர்கள்? என்ன காரணம்? நாகரிகமாக பேச கற்றுக்கொள்ள வேண்டும்.
பிரதமராலும் காப்பாற்ற முடியாது:
ஆளுநருக்கு சொல்கிறேன், திமுகவின் சட்டதுறை பற்றி உங்களுக்கு தெரியாது. போட்ட அத்தனை வழக்கிலும் வென்றவர்கள் திமுகவினர். இப்போதுதான் ஆளுநருக்கு கெட்ட காலம் ஆரம்பித்துள்ளது. ஆளுநரை காப்பாற்ற முடியாது. அவரை டிஸ்மிஸ் செய்ய நடவடிக்கை எடுப்போம். நான் சொன்னால் அது நடக்கும். நாளைய தினம் உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கை தொடரும்போது நரேந்திர மோடியாலும் கவர்னரை காப்பாற்ற முடியாது.
ஆளுநரை பார்த்து கேட்கிறேன் எந்த அடிப்படையில் இந்த நோட்டீஸை கொடுத்தீர்கள்? நீங்கள் யார் நோட்டீஸ் கொடுக்க? மந்திரி சபையை அமைக்கும் அதிகாரம் எந்த காலகட்டத்திலும் ஆளுநருக்கு கிடையாது. இதயம் இல்லாத ஓர் ஆள் யார் என்றால் அது எடப்பாடி தான். மெரினாவில் கலைஞருக்கு இடம் கொடுக்காமல் அலைக்கழித்து அரசு வழக்கறிஞரை விட்டுவிட்டு தனியாக அதிக பணம் கொடுத்து பிரத்தியோக வழக்கறிஞர்களை வைத்து வாதாடியவர் எடப்பாடி.
அரசியல் பிரளயம்:
கலைஞருக்கு இடம் கிடைத்தது மட்டும் தான் உங்களுக்கு தெரியும் ஆனால் அதற்கு பின்னால் நடந்தது யாருக்கும் தெரியாது. கலைஞருக்கு இடம் பெறுவதை ஒரே ராத்திரியில் நீதிமன்றம் சென்று வாங்கியவர்கள் நாங்கள். இதெல்லாம் ஆளுநர் ரவி அவர்களுக்கு தெரியாது. இன்றைக்கு மணிப்பூரில் ராகுல் காந்தியை உள்ளே விடாமல் தடுத்திருக்கிறார்கள், நாளை தினம் இந்தப் பிரச்சினை அந்தப் பிரச்சினை எல்லாம் சேர்ந்து அகில இந்திய அளவில் ஒரு மிகப்பெரிய அரசியல் பிரளயம் ஏற்படப்போகிறது.
அந்தப் பிரளயத்தில் மோடியின் ஆட்சி, எது அதிகாரம் கையில் இருக்கிறது என கருதாதீர்கள். நீதிமன்றங்கள் நினைத்தால் உன்னுடைய ஆட்சியை கலைத்தும் அதிகாரம் உள்ளது.ஏன் உங்களுக்கு இவ்வளவு அவசரம் எங்களுக்கு தேவை என்றால் மந்திரி சபையில் வைத்துக் கொள்வோம் இல்லை என்றால் எடுத்து விடுவோம் அதைப் பற்றி உங்களுக்கு என்ன கவலை?
மு.க.ஸ்டாலினுக்கு செல்வாக்கு:
ஒரு சட்ட ரீதியான நியாயம் கிடைக்க வேண்டும் என்ன என்பதற்காக தான் இந்த சட்டப் போராட்டத்தை நடத்துகிறோம். ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் வரும் காலம் பயங்கரமான காலமாக இருக்கும். எதையும் செய்யும் அளவிற்கு மோடி துணிந்து விட்டார். ஒன்றை சொல்லிக் கொள்கிறேன் அகில இந்திய அளவில் தளபதி மு க ஸ்டாலினுக்கு செல்வாக்கு அபரிமிதமாக உயர்ந்து கொண்டு வருகிறது.
இதுவரை தமிழகத்தினுடைய தலைவராக தான் மு க ஸ்டாலின் இருந்து வருகிறார். இனி நீங்கள் இப்படிப்பட்ட சட்டங்களை எல்லாம் கொண்டு வந்து எங்களை நசுக்குவீர்கள். ஆனால் மோடி உட்கார்ந்த இடத்தில் ஸ்டாலினை நீங்களாகவே கொண்டு போய் உட்கார வைக்க வேண்டாம்" என ஆர்.எஸ்.பாரதி பேசினார்.
அமித்ஷா மீது வழக்கு:
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தவர்,அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதால் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியதாக ஆளுநர் தரப்பில் கூறப்பட்டது குறித்து கேட்டதற்கு, தற்போது உள்துறை அமைச்சராக உள்ள அமித்ஷா மீது கொலை குற்றவழக்கே உள்ளது. அவரே மத்தியில் அமைச்சராக இருக்கும்போது, செந்தில் பாலாஜி வழக்கு என்பது நிலுவையில் உள்ளது முடிந்து போன வழக்கு அதற்கு உள் செல்ல நான் விரும்பவில்லை.
மேலும் 33 கேபினட் அமைச்சராக உள்ளவர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது அவர்கள் பதவியை ராஜினாமா செய்வார்களா? பிரதமர் மோடி மீது குஜராத் கொலை வழக்கு உள்ளது அவர் இந்தியாவின் பிரதமராக வரவில்லையா? இது தொடர்பாக நீதிமன்றம் செல்வது குறித்து கட்சி தலைமை முடிவு செய்யும் என கூறினார
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)