மேலும் அறிய
Advertisement
பேரணாம்பட்டு : ”கள்ளக்காதலை விடமுடியாதா” : தனியார் நிறுவன ஊழியரை வெட்டிக்கொலை செய்த சலவை தொழிலாளி கைது..!
சிறிய அளவில், பைனான்ஸ் செய்துவரும் கோவிந்தசாமிக்கு, லட்சுமியுடன் அறிமுகமாகியுள்ளது. நாள்போக்கில் , இவர்களது கொடுக்கல் வாங்கல் பழக்கம் , கள்ளத்தொடர்பாக மாறியுள்ளது .
ஆம்பூர் அருகே தனது மனைவியுடனான கள்ளத் தொடர்பை நிறுத்த கூறி பலமுறை எச்சரித்தும் , காதில் போட்டுக் கொள்ளாத , தனியார் நிறுவன ஊழியர் , கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார் . உமராபாத் போலீசார் வழக்கு பதிந்து குற்றவாளியைத் தேடிவந்த சூழ்நிலையில் , குற்றவாளியே , ஆம்பூர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார் .
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு பகுதியை அடுத்த பாலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் , டில்லிபாபு (47) சலவை தொழிலாளி ,இவருக்கு லட்சுமி (வயது 45 ) என்பவருடன் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று , இரண்டு மகள்கள் உள்ளனர் . கணவன் மனைவியிடையே நிலவிய கருத்துவேறுபாடு காரணமாக அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்தது .
கடந்த சில வருடங்களுக்கு முன்பு, தம்பதியினரிடையே நடந்த தகராறில் இருவரும் பிரிந்து, இதே பகுதியில் தனித்தனியே வாழ்ந்து வருகின்றனர். இதேபோல , ஆம்பூர் பாலூர் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 55 ) , இவர் இந்த பகுதியில் உள்ள தீப்பெட்டி தயாரிக்கப் பயன்படுத்தும் வஜ்ஜரம் தொழிற்சாலையில் , வேலை செய்து வருகின்றார் . இவருக்குத் திருமணம் நடைபெற்று மனைவி , ஒரு மகன் மற்றும் ஒரு மகளுடன் இதே பகுதியில் வசித்து வருகின்றார் .
ALso Read : ‛பைக்கை தூக்கி மறைக்கலாம்... டிராக்டரை எப்படிடா மறைக்க முடியும்’ எல்லை திருடர்கள் 11 பேர் கைது!
சிறிய அளவில் , பைனான்ஸ் செய்துவரும் கோவிந்தசாமிக்கு, லட்சுமியுடன் அறிமுகம் கிடைத்துள்ளது. நாள்போக்கில், இவர்களது கொடுக்கல் வாங்கல் பழக்கம் , கள்ளத்தொடர்பாக மாறியதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த லட்சுமியின் கணவர், டில்லிபாபு , பலமுறை கோவிந்தசாமியைத் தொடர்புகொண்டு தனது மனைவியுடனான கள்ளக்காதலை நிறுத்திக் கொள்ளும்படி எச்சரித்துள்ளார் . இருந்தபோதிலும் , இதைக்காதில் வாங்கிக்கொள்ளாதவாறு , லட்சுமியுடனான கள்ளத்தொடர்பைத் தொடர்ந்துள்ளார்.
இதனால் ஆத்திரத்தில் இருந்த டில்லிபாபு, கோவிந்தசாமியின் வீட்டிற்கு சென்று அவரை மிரட்டியுள்ளார். மேலும் அங்கிருந்த கோவிந்தசாமியிடம், ஏன் என் மனைவியுடனான கள்ளத்தொடர்பை கைவிட முடியாதா என்று ஆவேசமாகப் பேசியவாறே , தான் வைத்திருந்த அரிவாளைக் கொண்டு , கோவிந்தசாமியைச் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளார். கோவிந்தசாமியின் மனைவின் அலறல் சத்தம் கேட்டு அங்கு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் , கோவிந்தசாமியை மீட்டு பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும் , அதிகளவில் ரத்தம் வெளியேறியிருந்ததால் , சிறிது நேரத்திலே , மருத்துவமனையில் கோவிந்தசாமியின் உயிர் பிரிந்தது .
தகவல் அறிந்து அங்கு விரைந்த , ஆம்பூர் டிஎஸ்பி சரவணன் தலைமையிலான போலீசார் , சம்பவ இடத்தை பார்வையிட்டு கொலைக்குப் பயன்படுத்திய, அரிவாளைக் கைப்பற்றி அந்த பகுதி மக்களிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும் தலைமறைவாகி இருந்த டில்லிபாபு மீது , உமராபாத் காவல்நிலையத்தில் கொலை வழக்குப் பதிவு செய்து அவரை தேடி வந்தனர் .
இந்நிலையில் இன்றுகாலை , தலைமறைவாக இருந்த டில்லிபாபு , ஆம்பூர் நகரக் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார் . அவரை கைது செய்து ஆம்பூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர் .
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
மதுரை
இந்தியா
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion