மேலும் அறிய
Advertisement
‛பைக்கை தூக்கி மறைக்கலாம்... டிராக்டரை எப்படிடா மறைக்க முடியும்’ எல்லை திருடர்கள் 11 பேர் கைது!
இந்த 11 பேரும் ஒரே கும்பலைச் சேர்ந்தவர்கள். மது, கஞ்சா உள்ளிட்ட தீயப் பழக்கங்களுக்கு அடிமையான இவர்கள் , சொகுசு வாழ்க்கை வாழ ஆந்திரா, கர்நாடகாவில் வாகனங்களை திருடி வந்ததும் தெரியவந்தது.
தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த தமிழ் நாட்டை சேர்ந்த 4 பேர் உட்பட , 11 பேரை ஆந்திர மாநிலம் சித்தூர் போலீசார் நேற்று கைது செய்தனர் . அவர்களிடமிருந்து 1 கோடி மதிப்பிலான 107 இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு டிராக்டரை பறிமுதல் செய்து, சித்தூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் S செந்தில் குமார் தலைமையிலான போலீசார் , குற்றவாளிகளிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் .
ஆந்திர மாநிலம் , சித்தூர் மாவட்டத்திற்குட்பட்ட புத்தூர் மற்றும் பலமனேரி காவல் சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் , அடையாளம் தெரியாத கொள்ளையர்கள் தொடர் வாகன திருட்டில் ஈடுபட்டுவருவதாகவும் , அவர்களைப் பிடிப்பதில் பெரும் சாவல் நிலவுவதாகவும் , காவல் துறை அதிகாரிகள் , அண்மையில் சித்தூர் காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் நடந்த மீளாய்வுக் கூட்டத்தில் (ரிவியூ மீட்டிங்) தெரிவித்தனர் .
அப்பொழுது சித்தூர் ,புத்தூர் மற்றும் பலமனேரி பகுதிகளில் மட்டும் 100 க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன திருட்டுகள் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர் . இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த , சித்தூர் எஸ்பி உடனடியாக , சித்தூர் மாவட்டத்தின் அணைத்து பகுதிகளிலும் வாகன சோதனையைத் தீவிரப்படுத்தும்படி , உத்தரவிட்டிருந்தார் .
இந்நிலையில் நேற்று சித்தூர் மாவட்டம் முழுவதும் நடந்த திடீர் வாகன சோதனையில் , சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையிலும் மற்றும் வாகனத்தின் உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனத்தை ஓட்டிச்சென்ற , சித்தூர் மாவட்டம் அதரப்பள்ளி கிராமத்தை சேர்ந்த , வினோத்குமார் (25) , கீனாட்டம்பள்ளி கிராமத்தை சேர்ந்த ராஜி (47 ) , பராசக்தி நகர் பகுதியை சேர்ந்த , ரவிச்சந்திரன் (32 ) , கரிப்பக்கம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேஷ் (27 ) மற்றும் சுப்பிரமணியம் (18 ) , யாதமரி அடுத்த அட்டிகாரிப்பள்ளி கிராமத்தை சேர்ந்த ஜோதி (50 ) , சத்தியவேடு பகுதியை சேர்ந்த யுகாந்தர் (26 ) , மற்றும் தமிழ்நாட்டின் , திருவள்ளுவர் மாவட்டத்தை சார்ந்த , சதீஷ்குமார் (27 ) , சென்னை ரெட் ஹில்ஸ் பகுதியை சேர்ந்த ஜெயச்சந்திரன் (55 ) , வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு பகுதியை சேர்ந்த முரளி (25 ) மற்றும் குமரேசன் (34 ) ஆகிய 11 பேரை கைது செய்தனர் .
விசாரணையில் , இந்த 11 பேரும் ஒரே கும்பலைச் சேர்ந்தவர்கள் என்றும் , மது , கஞ்சா உள்ளிட்ட தீய பழக்கங்களுக்கு அடிமையான இவர்கள் , சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காக , பலமனேரி , சித்தூர் , புத்தூர் , ஸ்ரீசிட்டி ஆகிய பகுதிகளில் , கடை , வணிக வளாகம் , மார்க்கெட் , ஹோட்டல் மற்றும் வீட்டிற்கு வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் , இருசக்கர வாகனங்களை நோட்டமிட்டு , திருடி விற்பனை செய்துள்ளனர் .
அதிக விலைக்கு விற்பனை செய்தால் போலீசிடம் மாட்டிக் கொள்வோம் என்று , விலையுயர்ந்த ,இருசக்கர வாகனங்களையும் , குறைந்த விலைக்கே விற்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளனர் .
இதுகுறித்து சித்தூர் எஸ்பி செந்தில்குமார் தெரிவிக்கையில் , ஆந்திர , கர்நாடக மாநிலத்தில் திருடப்பட்ட இந்த வாகனங்களை , தமிழ் நாட்டில் உள்ள அவர்களது நண்பர்கள் மூலமாக விற்பனை செய்துள்ளனர் . மேலும் தற்சமயம் அவர்களிடமிருந்து , 1 கோடி மதிப்பிலான 107 இருசக்கர வாகனங்களும் , ஒரு டிராக்டரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது . இந்த குற்றச் சம்பவத்தில் தொடர்புடைய இவர்களது கூட்டாளிகளைத் தொடர்ந்து தேடி வருகிறோம் , என்று தெரிவித்தார் .
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion