மேலும் அறிய

Ponmudi ED Raid: 'என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டுமே’ - ED ரெய்டுக்கு பாட்டில் பதிலளித்த அமைச்சர் துரைமுருகன்

‘என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டுமே" - என அமைச்சர் பொன்முடி வீட்டில் நடைபெற்று வரும் அமலாக்குத்துறை சோதனை குறித்து கேட்டதற்கு வேலூரில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டி.

வேலூர் ( Vellore News): வேலூர் மாவட்டம் காட்பாடியில் 36 ஏக்கரில் கட்டப்பட்டுள்ள மாவட்ட விளையாட்டு மைதானம், பல்நோக்கு உள் விளையாட்டு அரங்கம் மற்றும் நீச்சல் குளம் உள்ளிட்டவற்றை விளையாட்டு மேம்பாட்டு துறை மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது காட்பாடி சட்டமன்ற உறுப்பினரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு , அமைச்சர் செஞ்சி மஸ்தான் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆகியோர் உடன் இருந்தனர். இந்த ஆய்வின்போது விளையாட்டு அரங்கு மற்றும் மைதானத்தின் கட்டமைப்புகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டு அமைச்சர் உதயநிதி அறிந்தார். மேலும் விளையாட்டு மைதானம் குறித்து எடுக்கப்பட்டுள்ள முன் நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையை தனக்கு தாக்கல் செய்யும்படியும் அறிவுறுத்தினார்.

Ponmudi ED Raid: 'என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டுமே’ - ED ரெய்டுக்கு பாட்டில் பதிலளித்த அமைச்சர் துரைமுருகன்

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் துரைமுருகன், காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்திற்கு சுற்றுச்சுவர் வேண்டும் என கேட்டுள்ளோம், நீச்சல் குளத்திற்கு அருகில் உள்ள நீர் தேக்கத் தொட்டியில் இருந்து நீர் வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளோம், அதேபோல விளையாட்டு வீரர்களுக்கு இதே மைதானத்தில் நிரந்தரமான தங்கும் விடுதி கட்டித் தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம், தற்போது உள்ள ஆட்கள் போதாது என்பதால் கூடுதல் ஆட்களை நியமிக்க வேண்டும் என கேட்டுள்ளோம் என்றார்.

Ponmudi ED Raid: 'என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டுமே’ - ED ரெய்டுக்கு பாட்டில் பதிலளித்த அமைச்சர் துரைமுருகன்

அமைச்சர் பொன்முடியின் வீட்டில் காலையிலிருந்து அமலாக்க துறை சோதனை நடைபெற்று வருவது குறித்து கேட்டதற்கு, எனக்கு தெரியாது என முதலில் பதில் அளித்தார். வேலூர் விளையாட்டு மைதானத்தை தமிழகத்தில் உள்ள ஒன் ஆப் தி பெஸ்ட் விளையாட்டு மைதானமாக மாற்றிக் காட்டுவேன் எனவும், தொடர்ச்சியாக இரண்டு அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவது குறித்த கேள்விக்கு மீண்டும் பதில் அளித்தவர், "என்னதான் நடக்கும் நடக்கட்டுமே, இருட்டினில் நீதி மறையட்டுமே" என்ற பாடலை பாடி பதிலளித்தார். மேலும் இது பழி வாங்கும் நடவடிக்கையா என கேட்டதற்கு பின்ன என்ன எல்லாமே அரசியல் தாங்க என அமைச்சர் துரைமுருகன் சிரித்துக்கொண்டு கூறினார். 

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

தலைப்பு செய்திகள்

Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Maruti Brezza Vs Renault Kiger: மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
Maruti XL6 Facelift: செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
Innova Hycross on EMI: ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
Embed widget