“ஏதே இப்போ டீசண்டாக கருத்தரங்கு நடத்தி வருகிறோம், எங்களை....” - அன்புமணி ஆவேச பேச்சு
சாதிவாரி கணக்கெடுப்பு என்ற பெயர் தான் பிரச்சனை என்றால் சமூக கணக்கெடுப்பு என பெயரை மாற்றுங்கள். கணக்கெடுப்பு என்றால் நான் தலைகளை கணக்கெடுக்க சொல்லவில்லை.
பாட்டாளி மக்கள் கட்சி நடத்தும் "சமூக நீதிக்காக சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு" கருத்தரங்கு வேலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டார்.
அப்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில்;
இந்தியாவில் இட ஒதுக்கீடு ஜாதி அடிப்படையில் தான் வழங்கப்படுகிறது. மத அடிப்படையிலே, மாநிலம், மொழி அடிப்படையிலோ அல்ல. சாதிவாரி கணக்கெடுப்பு என்ற பெயர் தான் பிரச்சனை என்றால் சமூக கணக்கெடுப்பு என பெயரை மாற்றுங்கள். கணக்கெடுப்பு என்றால் நான் தலைகளை கணக்கெடுக்க சொல்லவில்லை. கடந்த நூறு ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளைக்காரன் எடுத்த கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே தற்போது இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. மற்ற மாநிலங்களில் எடுக்கிறார்கள் உங்களுக்கு என்ன ஆச்சு என்ன தயக்கம் ஏன் தயங்குகிறீர்கள். சமூக நீதி என மட்டும் பேசி வருகிறீர்கள். முதன் முதலில் ஜாதி வாரி இட ஒதுக்கீடு வழங்கியது தமிழகத்தில் தான். சமூக நீதியை நிலை நாட்ட வேண்டும் எனில் ஜாதிவாதி கணக்கெடுப்பு அவசியம். மகளிர்க்கு ஆயிரம் ரூபாய் வழங்கினீர்கள் அதை எந்த அடிப்படையில், 30 ஆயிரம் எந்த அடிப்படையில் நீக்கினீர்கள் இதற்கும் ஒரு கணக்கெடுப்பு தேவை அல்லவா. அதனால்தான் கணக்கெடுக்க தேவை என்ன சொல்கிறோம்.
அதிகாரிகள் முதல்வரை தவறாக வழிநடத்தி வருகிறார்கள். சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தினால் வரும் காலங்களில் கூட்டணியில் அதிக சீட்டு கேட்பார்கள் என நினைக்கிறார்கள். தமிழ்நாடு முன்னேற வேண்டும் என்றால் உடனடியாக சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த எங்களுக்கு அதிகாரம் இல்லை மத்திய அரசுக்கு தான் உள்ளது என முதல்வர் சொல்கிறார். அவருக்கு நன்றாகவே தெரியும் யாருக்கு அதிகாரம் உள்ளது என்று ஆனால் ஒரு சாக்கு சொல்லி வருகிறார். கர்நாடகா, ஆந்திரா, உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் முடியும் போது ஏன் எடுக்க முடியாது. ஜெயலலிதா கொண்டு வந்த 69% இட ஒதுக்கீடு நான் வெகுவாக பாராட்டுகிறேன். அது அந்த கட்சியினருக்கே தெரியாது. தமிழக முழுவதும் நாம் சாதிவாரி கணக்கெடுக்க வேண்டும் என கேட்டு வருகிறோம்.
ஆனால் அதிமுக வாய் கூட திறக்கவில்லை. திமுக எங்களுக்கு மனசு இருக்கிறது ஆனால் அதிகாரம் இல்லை என பொய் சொல்லி வருகிறார்கள். இப்படிப்பட்டவர்கள் தமிழ்நாடு சமூக நீதியின் பிறப்பிடம் என வசனம் பேசுவதில் என்ன இருக்கிறது, பெரியார் வாரிசுகள் என சொல்ல அவர்களுக்கு தகுதியே இல்லை. சமூக நீதி மாநாட்டை டெல்லியிலும் தமிழகத்திலும் நடத்துபவர்கள் ஆனால் சமூக மேலைநாட்டு மாட்டார்களாம். காலம் மாறி வருகிறது புரிந்துகொள்ளுங்கள் முதல்வரே. சாதியை வைத்து வாக்கு வங்கியை மட்டுமே செய்து வந்தது திராவிட கட்சிகள். 2.3 கோடி குடும்பங்கள் குறித்த எந்தெந்த சாதி என்ற விவரம் ஒவ்வொரு மாவட்டத்திலும் அவங்க மாவட்ட செயலாளர்கள் வைத்துள்ளார்கள். எதற்காக என்றால் தேர்தல் பணம் கொடுப்பதற்காக. ஒரு கிளைச் செயலாளர் கணக்கெடுப்பு நடத்தி அதை ஒன்றியத்திற்கு மாவட்டத்திற்கும் கொடுக்கிறான். சென்செஸ், சர்வேவுக்கு உள்ள வித்தியாசத்தை புரிந்துகொள்ள வேண்டும். சர்வே எடுப்பதற்க்கு மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. சர்வே எடுக்க பஞ்சாயத்து தலைவருக்கே அதிகாரம் உள்ளபோது முதல்வருக்கு இருக்காதா? அதிகாரம் இல்லை என்பது ஏமாற்று வேலை.
இனியும் தயங்காதிங்க, ஏமாற்றாதிங்க. "ஏதே இப்போ டீசண்டாக கருத்தரங்கு நடத்தி வருகிறோம் எங்களை வேறு மாதிரி சிந்திக்க வைத்து விடாதீர்கள் வீதிக்கு இறக்க விடாதீர்கள் நாடு தாங்காது" நவீன கணக்கெடுப்பு நடத்துங்க. இதில் அரசியல் காரணம் நிச்சயமாக இல்லை, அதற்கான அவசியம் எங்களுக்கு இல்லை. இது அரசியல் மேடையில சமூக நீதி மேடை. மக்களுக்கு இப்போது புரிந்து இருக்கும் அன்புமணி கேட்பது நியாயம்தான் என விரைவில் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து விரைவில் அறிவியுங்கள். நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு ஆவது கணக்கெடுப்பு நடத்துகிறோம் என்பதையாவது அறிவியுங்கள். இது ஒரு சமுதாய வளர்ச்சிக்காக அல்ல ஒட்டுமொத்த தமிழ்நாடு வளர்ச்சிக்கானது. 2011 ல் காங்கிரஸ் எடுத்த சமூக கணக்கெடுப்பை இதுவரை வெளியிடவில்லை அப்படியே பூட்டி வைத்துள்ளது. அரசு சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து விரைவில் அறிவிக்கவில்லை என்றால் பலகட்ட போராட்டங்களை முன்னெடுப்போம், இதில் பாமக மட்டுமல்ல பல கட்சிகள் இயக்கங்கள் சேரும். எங்களை அந்த அளவுக்கு போராட வைக்காதீர்கள் எங்களின் உரிமைகளை கொடுங்கள் என பேசினார்.