மேலும் அறிய

‘மோடி அரசின் 9 ஆண்டுகால சாதனை தமிழகத்தை வஞ்சிப்பது தான்’ - அமைச்சர் எ.வ.வேலு குற்றச்சாட்டு

திமுக ஆட்சி செய்யும் பொழுதுதான் தமிழ்நாடும், திருவண்ணாமலையும் வளர்ச்சி பெற்று உள்ளது.

திருவண்ணாமலைக்கு பௌர்ணமி உள்ளிட்ட நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் வருகை புரிந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்து வருகின்றனர். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தருகின்றனர். மேலும் அண்ணாமலையார் கோயிலை சுற்றிலும் மாட வீதியில் கார்த்திகை தீப திருவிழா காலங்களில் தினம்தோறும் சாமி வீதி உலா மற்றும் தீபத் திருவிழாவின் ஏழாம் நாள் தேர் திருவிழாக்கள் நடைபெறும். இந்த தேரோடும் வீதியை திருப்பதி போல் சிமெண்ட் சாலை அமைக்கப்படும் என தேர்தல் வாக்குறுதியாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரூபாய் 15 கோடி மதிப்பீட்டில் மாட வீதி முழுவதும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டி பூமி பூஜை நடைபெற்றது.

‘மோடி அரசின் 9 ஆண்டுகால சாதனை  தமிழகத்தை வஞ்சிப்பது தான்’ - அமைச்சர் எ.வ.வேலு குற்றச்சாட்டு

அப்பொழுது தீபத் திருவிழா நடைபெற உள்ளதால் இந்த பணியை மூன்று மாத காலத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டது. தற்பொழுது மீண்டும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி தற்போது தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக திருவூடல் தெரு திரௌபதி அம்மன் கோவில் முதல் பேகோபுர மேடு வட ஒத்தவாடை தெரு வரை சிமெண்ட் சாலை அமைப்பதற்காக ஒரு மீட்டர் ஆழத்திற்கு ஏற்கனவே போடப்பட்டிருந்த தார் சாலையை தோண்டி எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சிமெண்ட் சாலையில் ஒருங்கிணைந்த குடிதண்ணீர் வடிகால் வாரியம் மின் இணைப்புகள் அனைத்தும் சாலைக்கு அடியிலேயே அமைக்கப்படவுள்ளது. இரவு பகலாக நடைபெற்று வரும் இந்த பணியை இன்று துறை அதிகாரிகளுடன் ஆய்வு செய்த அமைச்சர் எ.வ.வேலு பல்வேறு ஆலோசனைகளையும் அதிகாரிகளுக்கு வழங்கினார்.

‘மோடி அரசின் 9 ஆண்டுகால சாதனை  தமிழகத்தை வஞ்சிப்பது தான்’ - அமைச்சர் எ.வ.வேலு குற்றச்சாட்டு

 பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு பத்திரிகையாளர்களிடம் பேட்டியளிக்கையில்; 

தமிழக முதல்வர் அறிவித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் இந்த சிமெண்ட் சாலை பணியானது தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. நீண்ட நாட்களாக சாலைகளில் வழிந்து ஓடும் தண்ணீர் பேகோபுரம் வழியாக கோவிலுக்குள் சென்று கலப்பதாக ஒரு குற்றச்சாட்டு இருந்து வந்தது. இது ஆன்மீக பொதுமக்கள் மத்தியில் கோவில் உள்ளே செல்லும் கழிவு நீர், மழை நீரை தடுக்க வேண்டும் என்று கோரிக்கை இருந்தது. அந்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தற்போது இந்த சிமெண்ட் சாலையானது பேகோபுரம் வழியாக கழிவு நீர் உள்ளிட்ட எந்த வகையான நீரும் கோவிலுக்குள் செல்லாத வகையில் தற்போது அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் வருகிற தீபத் திருவிழாக்களுக்குள் முடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பணியானது இரவு பகலாக நடைபெற உள்ளது. வாரம் தோறும் சனிக்கிழமைகளில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் எந்தெந்த பணி நடைபெற்று வருகிறது என நெடுஞ்சாலை துறை மின்சார துறை, நகராட்சி உள்ளிட்ட அதிகாரிகள் கூட்டாக ஆய்வு கூட்டம் நடத்தி பணியை விரைவு படுத்த உள்ளனர்.

‘மோடி அரசின் 9 ஆண்டுகால சாதனை  தமிழகத்தை வஞ்சிப்பது தான்’ - அமைச்சர் எ.வ.வேலு குற்றச்சாட்டு

நரேந்திர மோடி அரசின் ஒன்பது ஆண்டுகால சாதனை என்னவென்றால் தமிழகத்தை வஞ்சிப்பது தான், குறிப்பாக மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார். இதுவரை அந்த திட்டம் நிறைவேற்றப்படவில்லை என்பது ஒரு எடுத்துக்காட்டாகும்.  அதேபோல் திண்டிவனம் திருவண்ணாமலை ரயில் பாதை திட்டம், திருவண்ணாமலை ஜோலார்பேட்டை ரயில் பாதை திட்டம், திண்டிவனம் நகரி ரயில் பாதை திட்டம் ஆகிய மூன்று திட்டங்களுக்கும் பணம் ஒதுக்கீடு செய்து நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு இதுவரை எந்த பணிகளும் நடைபெறவில்லை. தொல்லியல் துறையிடம் இருந்து திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் கலைஞர் தலைமையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப் பிறகு மீட்கப்பட்டது. தூய்மை பாரதம் என்ற திட்டத்தை பாஜக அரசு அறிவித்து மத்திய மாநில அமைச்சர்கள் ஒரு நாள் மட்டும் விளம்பரத்திற்காக மட்டுமே தூய்மை இந்தியா என்று திட்டத்திற்கு சுத்தம் செய்துவிட்டு மேலும் அந்தத் திட்டத்தை அவர்கள் நடைமுறைப்படுத்தப்படவில்லை . இதன் மூலம் எந்த நகரம் தூய்மையானது . ஒட்டுமொத்தமாக பாஜக அரசு ஆன்மீகம் மற்றும் இந்து என்ற பெயரில் கட்சியை வளர்க்க முயற்சிகள் நடைபெற்றதே தவிர, அதனால் எந்த நகருக்கும் மாவட்டத்திற்கும் மாநிலத்திற்கும் எந்த வளர்ச்சியும் இல்லை. திராவிட இயக்கங்கள் ஆளும் பொழுது திமுக ஆட்சி செய்யும் பொழுது தான் தமிழ்நாடும், திருவண்ணாமலையும் வளர்ச்சி பெற்று உள்ளது. தமிழக ஆளுநருக்கும், திமுக அரசுக்கும் எந்த விதமான தனிப்பட்ட விரோதம் இல்லை.

‘மோடி அரசின் 9 ஆண்டுகால சாதனை  தமிழகத்தை வஞ்சிப்பது தான்’ - அமைச்சர் எ.வ.வேலு குற்றச்சாட்டு

ஆளுநர் தமிழ்நாட்டை தானும் ஆள வேண்டும் என்று முயற்சி செய்கிறார். மாணவர்கள் பட்டமளிப்பு விழா பட்டப்படிப்பு முடித்த மாணவர்களுக்கு பட்டத்தினை இணை வேந்தர் துணைவேந்தர்கள் வழங்கலாம் என்று சட்டம் இருந்த நிலையில், தான் பட்டம் வழங்க வேண்டும். தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் மாணவர்களுக்கு பட்டம் வழங்காமல் காத்திருக்க வைப்பது அவரின் குணத்திற்கு இதுவே சான்றாகும். மக்களுக்கு தேவையான புரட்சிகளை செய்யும் திராவிட மாடல் ஆட்சியை ஆளுநர் சிறுமைப்படுத்த முயற்சிக்கிறார். இது எக்காலத்திலும் எடுபடாது. ஆளுநரை போன்ற பலரை திமுக பார்த்துள்ளது. தொடர்ந்து ஐந்து முறை திராவிட அரசு தமிழகத்தை ஆளும். உலகப் புகழ்பெற்ற அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு அறங்காவலர் குழு தேர்வு செய்வதற்கு பலர் விண்ணப்பித்துள்ளனர். தகுதியான நபர்களை தேர்வு செய்து இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் அறிவிப்பார். இவ்வாறு கூறினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
இனி ட்ரீப் போக முடியாதோ! லடாக் யாருக்கு சொந்தம்? சீனா செய்த செயலால் இந்தியா அதிர்ச்சி!
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tamilisai vs Annamalai : EPS-ஐ வைத்து அ.மலைக்கு ஸ்கெட்ச்!டெல்லிக்கே போன தமிழிசை! பாஜக தலைவர் யார்?Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
இனி ட்ரீப் போக முடியாதோ! லடாக் யாருக்கு சொந்தம்? சீனா செய்த செயலால் இந்தியா அதிர்ச்சி!
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
Embed widget