மேலும் அறிய

தேர்தல் முடிவுகள் 2024

(Source:  ECI | ABP NEWS)

அண்ணன் தம்பிக்கு இடையே சொத்தை வாங்குவதில் தகராறு- சொந்தவீட்டிலேயே திருடிய இளைஞர் கைது

’’கொள்ளை போன பணத்தை கண்டுபிடிக்க வரவழைக்கப்பட்ட மோப்பநாய் ஆனந்தராஜை சுற்றி வந்துள்ளது, இருப்பினும் ஆனந்தராஜ் அதே வீட்டில் வசித்து வருவதால் அவர் மீது போலீசார் சந்தேப்படவில்லை’’

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே வெங்கடாம்பேட்டை கிராமம் திரு.வி.க. நகரை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மனைவி சாவித்திரி வயது (50). இவர்களுக்கு துரைராஜ் (30), ஆனந்தராஜ் (28), சரண்ராஜ் என 3 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் புதிதாக வீட்டுமனை வாங்குவதற்காக சாவித்திரி தனது வீட்டு பீரோவில் 3 லட்சத்து 90 ஆயிரம் பணத்தை வைத்திருந்தார். இந்த நிலையில் கடந்த 25ஆம் தேதி வீட்டின் மேற்கூரை உடைக்கப்பட்டு உள்ளே நுழைந்து பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் திருடப்பட்டு இருந்தது கண்டு சாவித்திரி அதிர்ச்சி அடைந்தார். 

அண்ணன் தம்பிக்கு இடையே சொத்தை வாங்குவதில் தகராறு- சொந்தவீட்டிலேயே திருடிய இளைஞர் கைது

இது குறித்த  கச்சிராயப்பாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை அங்கு நடத்தினர். அப்போது பீரோவை உடைக்க பயன்படுத்திய இரும்பு கம்பி ஒன்று சம்பம் நடந்த வீட்டிலேயே இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். இதனால் பணத்தை திருடியது வீட்டில் உள்ளவர்களில் யாரேனும் ஒருவராக இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகத்தினர். 

இதையடுத்து வீட்டில் உள்ளவர்களை தனித்தனியாக அழைத்து விசாரணை நடத்தினர். இதில் ஆனந்தராஜ் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தார். இதையடுத்து அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில் அவர் பணத்தை திருடியது தெரியவந்தது. மேலும் வீட்டில் புதிதாக வாங்க உள்ள வீட்டுமனையை தனது பெயருக்கு வாங்குமாறு ஆனந்தராஜ் கூறியுள்ளார். அதற்கு அவருடைய பெற்றோர் மறுப்பு தெரிவித்து துரைராஜ் பெயருக்கு வாங்க முடிவு செய்ததாக தெரிகிறது. இதனால் ஆந்திரமடைந்த ஆனந்தராஜ், இடம் வாங்குவதை தடுக்கும் வகையில், அந்த பணத்தை அவரே திருடியதும், மேலும் பணத்தை  அடையாளம் தெரியாத நபர்கள் திருடியது போல் காட்டுவதற்காக மேற்கூரையை உடைத்ததும் தெரிந்தது.  

அண்ணன் தம்பிக்கு இடையே சொத்தை வாங்குவதில் தகராறு- சொந்தவீட்டிலேயே திருடிய இளைஞர் கைது

இதையடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து பணத்தையும் பறிமுதல் செய்தனர். முன்னதாக வீட்டில் பணத்தை திருடிய ஆனந்தராஜ் தனக்கு எதுவும் தெரியாதது போல்  விசாரணைக்கு வந்த காவல்துறையினரிடம் சகஜமாக உறையாற்றியுள்ளார். அவர்களுடனே சுற்றிவந்துள்ளார். மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டிருந்தது. அந்த நாய் ஆனந்தராஜை சுற்றிசுற்றி வந்துள்ளது. இருப்பினும் ஆனந்தராஜ் அதே வீட்டில் வசித்து வருவதால் அவர் மீது, போலீசார் சந்தேப்படவில்லை. இந்த நிலையில் பீரோவை உடைக்கப்பட்ட கம்பி மூலம் ஆனந்தராஜ் போலீசிடம் சிக்கியது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Nobel Prize 2024: செயற்கை நரம்பியல் வலைப்பின்னல் மூலம் இயந்திரக் கற்றல்: இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு
Nobel Prize 2024: செயற்கை நரம்பியல் வலைப்பின்னல் மூலம் இயந்திரக் கற்றல்: இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு
TN Cabinet Meeting: 47 ஆயிரம் பேருக்கு வேலை; அமைச்சரவைக் கூட்டத்தில் 14 புது முதலீடுகளுக்கு ஒப்புதல்
TN Cabinet Meeting: 47 ஆயிரம் பேருக்கு வேலை; அமைச்சரவைக் கூட்டத்தில் 14 புது முதலீடுகளுக்கு ஒப்புதல்
Haryana, J&K Election Result LIVE: காங்கிரஸ் வேட்பாளர் வினேஷ் போகட் முன்னிலை
Haryana, J&K Election Result LIVE: காங்கிரஸ் வேட்பாளர் வினேஷ் போகட் முன்னிலை
மதுக்கூரில் முதியவரை அறைந்த எஸ்.ஐ.,: அதிரடி நடவடிக்கை எடுத்த எஸ்.பி.,
மதுக்கூரில் முதியவரை அறைந்த எஸ்.ஐ.,: அதிரடி நடவடிக்கை எடுத்த எஸ்.பி.,
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Haryana election result | மண்ணைக் கவ்விய காங்கிரஸ்!காலரை தூக்கும் பாஜக!ஷாக்கில் ராகுல்TN Cabinet meeting | உதயநிதிக்கு கூடுதல் அதிகாரம்?ஸ்டாலின் போடும் மனக்கணக்கு அமைச்சரவை கூட்டம்Haryana And Jammu Kashmir Election Result | BJP  vs Congress ஆட்சி கட்டிலில் அமரப்போவது யார்?MK Stalin on Marina Airshow : ’’இவ்ளோ மக்கள் வருவாங்கனு எதிர்பார்க்கல’’முதல்வர் பரபர

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nobel Prize 2024: செயற்கை நரம்பியல் வலைப்பின்னல் மூலம் இயந்திரக் கற்றல்: இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு
Nobel Prize 2024: செயற்கை நரம்பியல் வலைப்பின்னல் மூலம் இயந்திரக் கற்றல்: இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு
TN Cabinet Meeting: 47 ஆயிரம் பேருக்கு வேலை; அமைச்சரவைக் கூட்டத்தில் 14 புது முதலீடுகளுக்கு ஒப்புதல்
TN Cabinet Meeting: 47 ஆயிரம் பேருக்கு வேலை; அமைச்சரவைக் கூட்டத்தில் 14 புது முதலீடுகளுக்கு ஒப்புதல்
Haryana, J&K Election Result LIVE: காங்கிரஸ் வேட்பாளர் வினேஷ் போகட் முன்னிலை
Haryana, J&K Election Result LIVE: காங்கிரஸ் வேட்பாளர் வினேஷ் போகட் முன்னிலை
மதுக்கூரில் முதியவரை அறைந்த எஸ்.ஐ.,: அதிரடி நடவடிக்கை எடுத்த எஸ்.பி.,
மதுக்கூரில் முதியவரை அறைந்த எஸ்.ஐ.,: அதிரடி நடவடிக்கை எடுத்த எஸ்.பி.,
WhatsApp Update: என்னது ஸ்டேடஸ்ல Tag செய்யும் வசதியா? வாட்ஸ் அப் கொடுத்த புதிய அப்டேட்!
என்னது ஸ்டேடஸ்ல Tag செய்யும் வசதியா? வாட்ஸ் அப் கொடுத்த புதிய அப்டேட்!
Vinesh Phogat: பாஜகவுக்கு பலத்த அடி! மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் அபார வெற்றி - காங்கிரஸ் உற்சாகம்
Vinesh Phogat: பாஜகவுக்கு பலத்த அடி! மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் அபார வெற்றி - காங்கிரஸ் உற்சாகம்
Senthil Balaji: செந்தில் பாலாஜிக்கு புதுப்பொறுப்பு; முதல்வர் ஸ்டாலின் முக்கிய உத்தரவு
Senthil Balaji: செந்தில் பாலாஜிக்கு புதுப்பொறுப்பு; முதல்வர் ஸ்டாலின் முக்கிய உத்தரவு
TN Cabinet Meeting: புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம் - துணை முதலமைச்சர் உதயநிதிக்கு கூடுதல் அதிகாரம்?
TN Cabinet Meeting: புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம் - துணை முதலமைச்சர் உதயநிதிக்கு கூடுதல் அதிகாரம்?
Embed widget