மேலும் அறிய

'எங்களை ஏமாத்திட்டாங்க.. எங்க மரணத்துக்கு யாரும் காரணமில்ல” : கணவன், மனைவி தற்கொலை கடிதம்..!

சம்பவம் நடந்த வீட்டில் சோதனை நடத்தியபோது, அங்கு அவர்கள் இறப்பதற்கு முன்பு எழுதி வைத்திருந்த 9 பக்கங்களை கொண்ட உருக்கமான கடிதம் ஒன்றை கைப்பற்றினர்

தொழில் நஷ்டம் அடைந்ததாலும் ,  திருமணம் நடந்து 3 வருடங்கள் ஆகியும் , குழந்தை பிறக்காத மனவேதனையில் அரிசிக் கடை உரிமையாளர் மற்றும் அவரது  மனைவி ஒரே புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை செய்துகொள்வதற்கு முன் அரிசிக் கடை உரிமையாளர்தான் கைப்பட எழுதி வைத்திருந்த  கடிதத்தைக்  கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா வள்ளிமலை கூட்ரோடு போடிநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவாஜி என்கிற வரதராஜ் (வயது 35). சிவாஜி அணைக்கட்டு போலீஸ் நிலையம் எதிரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் அரிசி மற்றும் கால்நடைகளுக்குத் தேவையான தீவனங்கள் விற்கும் கடை நடத்தி வந்தார். மேலும் இவர் மாதாந்திர ஏலச்சீட்டும் நடத்தி வந்துள்ளார்.
 
எங்களை ஏமாத்திட்டாங்க.. எங்க மரணத்துக்கு யாரும் காரணமில்ல” : கணவன், மனைவி தற்கொலை கடிதம்..!
 
சில வருடங்களுக்கு முன்பு இவருக்குத் திருமணம் நடைபெற்று அவரது முதல் மனைவி இறந்த நிலையில் , சிவாஜி . அணைக்கட்டை அடுத்து வசந்தநடை கிராமத்தைச் சேர்ந்த ஆஷா (23) என்பவரை  கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார் . திருமணத்திற்குப் பின்பு சிவாஜி மற்றும் ஆஷா  இருவரும் அணைக்கட்டு தாலுகா அருகேயுள்ள  பெரியஊனை கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். திருமணம் ஆகி 3 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாததால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது. இந்நிலையில் தான் சிவாஜி தனது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்குக் கடனுக்கு அதிகளவில் அரிசியைக் கொடுத்துள்ளார். மேலும் கொரோனா  ஊரடங்கு காரணமாகச்  சீட்டு நடத்தியதில் பலர் சீட்டுக் கட்டாமல் ஏமாற்றி விட்டதாகவும் கூறப்படுகிறது. 
 
இதனைத் தொடர்ந்து நேற்று காலை இவர்களுடைய வீடு  நீண்டநேரமாகத் திறக்கப்படாததால் காலை 10 மணி அளவில் அக்கம்பக்கத்தினர் அவர்களை எழுப்ப  முயற்சி செய்துள்ளனர் . ஆனால் வெகு நேரம் ஆகியும் இருவரும் கதவைத் திறக்காததால் அவரது அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்பொழுது  அவர்களது வாடகை வீட்டின் படுக்கையறையில், தம்பதியினர் இருவரும்  ஒரே புடவையில்  தூக்கில் பிணமாகத் தொங்கிக் கொண்டிருந்ததாக தெரியவந்துள்ளது.
 
எங்களை ஏமாத்திட்டாங்க.. எங்க மரணத்துக்கு யாரும் காரணமில்ல” : கணவன், மனைவி தற்கொலை கடிதம்..!
 
இது குறித்து அணைக்கட்டு போலீஸ் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். அதன்பேரில், ஆய்வாளர் சுபலட்சுமி,  உதவி ஆய்வாளர் குணசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கணவன்- மனைவி இருவரின் உடல்களை மீட்டு  பிரேதப் பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
 
உருக்கமான தற்கொலை கடிதம் : 
 
இதுகுறித்து வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் அணைக்கட்டு போலீஸ் நிலையத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். மேலும் சம்பவ நடந்த வீட்டில் சோதனை நடத்தியபோது அங்கு அவர்கள் இறப்பதற்கு முன்பு எழுதி வைத்திருந்த 9 பக்கங்களை கொண்ட உருக்கமான கடிதம் ஒன்றை கைப்பற்றினர் அதில் சிவாஜி "எங்கள் சாவுக்கு யாரும் காரணமல்ல . பலர் என்னை ஏமாற்றி விட்டதாலும், குழந்தை இல்லாததாலும் தற்கொலை செய்து கொள்கிறோம் என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் அவரிடம் அரிசி மற்றும் பணம் கடன் வாங்கியர்கள் குறித்த தகவல்களையும், மற்றும் சிவாஜி யார் யாருக்கு சீட்டு பணம் நிலுவை தொகை திருப்பி தர வேண்டும் என்ற தகவல்களையும் விரிவாக எழுதி பதிவு செய்துள்ளார் .
 
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தலைப்பு செய்திகள்

CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Embed widget