மேலும் அறிய
வாணியம்பாடி அருகே அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு - போலீசார் விசாரணை
மர்ம நபர்கள் அரசு பேருந்தின் மீது கல் வீசியதில் பின்பக்க கண்ணாடி உடைந்து சேதமானது பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

கண்ணாடி உடைக்கப்பட்ட பேருந்து
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பணிமனையில் இருந்து வெள்ளைகுட்டை, ஆலங்காயம் வழியாக திருவண்ணாமலை மாவட்டம் போளூர் செல்லும் (TN.23 N 2013) எண் கொண்ட அரசு பேருந்து நேற்றிரவு போளூர் சென்று 10க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி கொண்டு ஆம்பூர் நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தது.
இதில் பேருந்து ஓட்டுனர் ரவி மற்றும் நடத்துனர் ரவிச்சந்திரன் ஆகியோர் பணியில் இருந்த போது திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வெள்ளை குட்டை பகுதியில் மர்ம நபர்கள் அரசு பேருந்தின் மீது கல் வீசியதில் பின்பக்க கண்ணாடி உடைந்து சேதமானது பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

பின்னர் இதுகுறித்து பேருந்து ஓட்டுனர் ரவி ஆலங்காயம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அரசு பேருந்து மீது கல்வீசி கண்ணாடியை உடைத்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்




















