மேலும் அறிய
Advertisement
காணும் பொங்கல்...திருப்பத்தூரில் மீன் கடைகளில் குவிந்த கூட்டம்
ஆட்டு இறைச்சி மற்றும் கோழி இறைச்சி கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் வியாபாரிகள் உற்சாகமடைந்தனர்.
காணும் பொங்கலை முன்னிட்டு திருப்பத்தூர் நகர் பகுதிகளில் உள்ள மீன் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருப்பத்தூர் பகுதிகளில் உள்ள பல்வேறு மீன் கடைகளில் இன்று அளவுக்கு அதிகமான கூட்டம் அலைமோதியது. முண்டியடித்து மீன் கடைகளில் வாங்கிச் சென்றனர்.
நாடு முழுவதும் இன்று காணும் பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக இன்று கரிநாள் என்பதால் காலை முதலே பல்வேறு பகுதிகளில் மீன் மற்றும் இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
அதேபோல் திருப்பத்தூர் பெரியகுளம் மேடு பகுதிகளில் உள்ள மீன் கடைகளில் வஜ்ரம், ஷீலா, நண்டு, ஏறா, டைகர் ஏறா, காலா, நெத்திலி, மாலை போன்ற பல்வேறு மீன்களை பொதுமக்கள் வாங்கிச் சென்றனர்.
பேருந்து நிலையம் அருகே உள்ள ஆட்டு இறைச்சி மற்றும் கோழி இறைச்சி கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் வியாபாரிகள் உற்சாகமடைந்தனர். இறைச்சி கடைகளின் மூலமாக நடைபெறும் வர்த்தகம் பல லட்சங்கள் இருக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
அரசியல்
கல்வி
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion